இப்போது போலீஸ், டி-சட்டை அச்சடிப்பவர்களைக் குறி வைக்கிறது

suaramபுத்தாண்டின்போது  விலைவாசி  உயர்வை  எதிர்த்து  ஆர்ப்பாட்டம்  செய்தோர்  அணிந்திருந்த  டி-சட்டையை  அச்சடித்த  ஆடவரிடம்  போலீஸ்  விசாரணை  செய்ததை  சுவாராம்  குறைகூறியது. அதிகாரிகள்  குற்றவியல்  மற்றும்   பாதுகாப்புக்  குற்றங்கள்  சட்ட (சொஸ்மா) த்தில்  இணைக்கப்பட்ட  புதிய  பகுதிகளைப்  பயன்படுத்தி  மக்களை  அச்சுருத்தி  வருவதாக  அது  கூறிற்று.

வியாழக்கிழமை  ஜுல்  ரெய்டி  அஹ்மட்  தர்மிஜியை  போலீஸ்  விசாரணை  செய்தது  தேவையற்ற  ஒன்று  என  சுவாராம்  ஒருங்கிணைப்பாளர்  சுக்ரி  ரஜாப்  சொன்னார

“நாடாளுமன்ற  ஜனநாயகத்துக்கு  ஊறு  விளைக்கும்  குற்றங்களுக்கு  எதிராகக்  கொண்டுவரப்பட்டது சொஸ்மா  சட்டம்.  அது விசாரணையின்றி  28 நாள்களுக்குக்  காவலில்  வைக்க  வகை  செய்கிறது”,  என்று  கூறிய  அவர்  கடந்த  பொதுத்  தேர்தலின்போது  அரசியலில்  கருத்துவேறுபாடு  கொண்டிருப்போருக்கு  எதிராக சொஸ்மா  சட்டத்தைப்  பயன்படுத்தப்போவதாக  அதிகாரிகள்  இதேபோன்றுதான்  மிரட்டினார்கள்  என்றார்.

பயங்கரவாதத்தை  ஒடுக்கும்  நோக்கில்  கொண்டுவரப்பட்ட  சொஸ்மா  சட்டம்  தவறாகப்  பயன்படுத்தப்படுவதைத்  தவிர்க்க  அதை  இரத்துச்  செய்வது  நல்லது  என  சுவாராம்  கூறியது.