பேரணி வேண்டாம் என்ற குவான் எங்-கின் வேண்டுகோளை என்ஜிஓ-கள் புறக்கணித்தன

bantahபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,   நாளை  செபராங்  ஜெயாவில்  விலை  உயர்வுக்கு  எதிராக சில  என்ஜிஓ-கள் ஒன்றுசேர்ந்து  திட்டமிட்டிருக்கும்  பேரணியைத்  தள்ளிவைக்குமாறு  அறிவுறுத்தியிருப்பதாக  அறியப்படுகிறது. 

என்ஜிஓ-கள் லிம்மின்  அறிவுரையை  மதிக்கிறார்கள் என்று  கூறிய  மாநில  ஜிங்கா 13  ஒருங்கிணைப்பாளர்  அமிஸுடின்   அஹ்மாட்,  அத்தியாவசிய  பொருள்களின்  விலை  உயர்ந்திருப்பதை  எண்ணி  மக்கள்  ஆத்திரம்  அடைந்திருக்கிறார்கள்  என்றார். அதை  பக்காத்தான்  தலைவர்கள்  மறந்து விடக்கூடாது. 

முதலாவது  துருன்  பேரணி  டிசம்பர் 31-இல்,  கோலாலும்பூரில்  நடத்தப்பட்டபோது  அதில் கலந்துகொண்ட  என்ஜிஓ-களில்  ஜிங்கா  13-உம்  ஒன்று.

“மக்களுக்கு  மக்களை  மறக்கும்  தலைவர்கள்    தேவையில்லை”, அமிஸுடின்  அவரது  முகநூல் பக்கத்தில்  கூறி இருந்தார்.

நாளை,  பண்டார்  சன்வே  திறந்தவெளி  கார்  நிறுத்துமிடத்தில்  பிற்பகல் 2-இலிருந்து  மாலை 4வரை  நடைபெறும்  பேரணியில்  பொதுமக்கள்  திரண்டு  வந்து  கலந்துகொள்ள  வேண்டுமென  அவர்  கேட்டுக்கொண்டார்.