பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் காஜாங்கில் போட்டி இடுகிறார். இதை அக்கட்சி இன்று உறுதிப்படுத்தியது.
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமே பிகேஆர் தலைமையகத்தில் அம்முடிவை அறிவித்தார். அன்வார் பொறுப்பேற்கும்வரை “இடைக்காலத்துக்கு” மந்திரி புசார் பணியைத் தாம் தொடரப்போவதாகவும் அவர் சொன்னார்.
காஜாங்கில் இடைத் தேர்தலுக்கு வழிசெய்து பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ நேற்று பதவி துறந்தார்.
மலாய்க்காரர்களும், சீனர்களும் ஏறக்குறைய சரிசமாக இருக்கும் காஜாங் சட்டமன்றத் தொகுதியை தேர்ந்தெடுத்து நஜிப்க்கு மேலும் ஒரு தலைவலியை வைத்திருக்கின்றார் அன்வார். இனப் பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைத் திருப்ப இது ஒரு சாதூரியமான முயற்சி!. அம்னோவின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை, மக்களின் வாக்குகள் மூலம் வெளிபடுத்த அன்வார் தனது அரசியல் சாணக்கியத்தனத்தை மீண்டும் நிலை நிறுத்தி இருக்கின்றார். கப்பலோட்ட திசைக்கருவி இல்லாமல் நிலைத் தடுமாறும் நஜிப்க்கு இரு பக்கமும் அடி விழப் போகின்றது. தப்பிக்க ஒரே வழி, மக்கள் இக்கட்டான இச்சூழலில், மக்கள் வரிப் பணம் செலவழிப்பதை
தவிர்க்க தே.மு. போட்டியிட விரும்பவில்லை என்று காரணம் கூறி விலகி இருப்பதே மேல்.
சார் அன்வர் பிரதமர் ஆனாலும் எதிர் கட்சி தேவை.நாம் பொது மக்கள் நடு நிலையாய் இருப்போம்.
மீண்டும் ஒரு தலைவலி .பி ன் அதிகமான பனடோல் தேவை.
பொதுத் தேர்தல் முடிந்து விட்டது . இனி இஷ்டம் போல் ஏதும் செய்யலாம் என்று இன வாதம் ,மதவாதம் , விலைவாசி உயர்வு , வரி உயர்வு என்று மக்களை அச்சுருத்தி வந்த நஜிப் ஆட்சிக்கு அருமையான ஜனநாயக சோதனை.
பி கே ஆர், பக்காத்தான் ராக்யாட்டின் முழு சம்மதத்துடன் இம்முடிவினை செய்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். சிலாங்கூரை ஆளுவது பக்காத்தான் கூட்டணி கட்சியே என்பதை மறவாதீர்….!!!!!!
காஜாங் தொகுதி பி.கே.ஆருக்கு பாதுகாப்பான தொகுதி என்கிற மமதையால், பி.கே.ஆர். இந்த இடைத்தேர்தலுக்கு வழி வகுத்து, இதன் மூலம் அன்வார், முதல்வர் ஆசனத்தில் அமரப்பார்கிறார். மக்கள் புத்திசாலிகளாக உள்ளனரா இல்லையா என்பதை கணிக்க, இவ்விடைத்தேர்தல் ஒரு துருப்புச்சீட்டு. முடிந்தால், பாரிசானை வெற்றிபெறச் செய்யுங்கள். இப்படி செய்தால், அரசியலில் இதுபோன்ற சில்மிஷங்கள் இனிமேல் ஏற்படாமல் இருக்க வாய்ப்புண்டு. பாரிசானும், மக்கள் மீண்டும் நம்மை ஆதரிக்க துவங்கியுள்ளனர், என முடிவெடுத்து மக்களுக்கு சுமையை ஏற்படுத்த முயலமாட்டார்கள்.
சிங்கத்தின் விளக்கம் புதுசா காட்டில் இருந்து வந்த மாதிரி இருக்கு.
நீ எண்டா மட்டவன கூப்பிடுகிறாய்
சிங்கம் சீன பெருநாள் தண்ணியில் உளறிவிட்டாரா ?
ஆமா ஆமா இவனுங்களும் ஒரு காலத்துல அம்னோ காரனுங்கத்தானே…..அதே வளயாங்கட்டிகள் தானே …….உங்க புத்தியும் அப்டித்தானே இருக்கும்……வாழ்க வளர்க
கேமரன் மலையில் அணைக்கட்டு உடைந்ததிலிருந்து சிங்கத்துக்கு எனுமோ ஆயிடுச்சி !முன்பெல்லாம் சிங்கம்,சிங்கமாக கர்ஜிக்கும்,இப்போ அம்னொவுக்காக கர்ஜிக்குது !
நண்பர்களே! நம் குடும்பம் என்பதற்காக, நம் பிள்ளைகள் செய்யும் தவற்றை நாம் ஒப்புக்கொள்வோமா? அதுபோலவே இதுவும். கட்சியின் நலனுக்காக தாம் ராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார். இது ஏற்புடையதா? கட்சியின் நலனை கொண்டா மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள்? பொதுத்தேர்தல் முடிவுற்று ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் ராஜினாமாவா? பிரதமர் பொறுப்புக்கு குறிவைத்த ஒருவர், இப்போது சாதாரண சட்டமன்றத்தை தேடி ஓடுவது கேவலமாகப் படவில்லையா? “கழிவறை ஓசை” யான அம்னோவுக்கு சிங்கம் என்றுமே வக்காலத்து வாங்கினது கிடையாது.