அஸ்மின்: காஜாங் தேர்தலுக்குப் பின்னே முக்கிய நோக்கமுண்டு

azminகாஜாங்  சட்டமன்ற  உறுப்பினர்  லீ  சின்  செ  பதவி துறந்தது,  காலியான  தொகுதிக்கு  இடைத் தேர்தல்  நடப்பது  எல்லாமே  எதிர்கால  பலனைக்  கருத்தில்  கொண்ட  ஒரு  “தந்திர நடவடிக்கை”  என்கிறார் சிலாங்கூர்  பிகேஆர்  தலைவர்,  அஸ்மின்  அலி.

“அன்வார்  இப்ராகிம்  அங்கு  போட்டியிடுவது  நாங்கள்  சிலாங்கூருக்குக்  கொடுக்கும்  முக்கியத்துவத்தையும் புத்ராஜெயாவைக்  கைப்பற்ற  அதை  ஒரு  ஏவுதளமாக பயன்படுத்துவோம்  என்பதையும்  மக்களுக்கு  உணர்த்தும்”. இன்று  மாநில  பிகேஆர்  கூட்டத்துக்குத்  தலைமையேற்ற  பின்னர் அஸ்மின்  செய்தியாளர்களிடம்  பேசினார்.

அன்வார்  போட்டியிடுவதை  மாநிலத்  தலைவர்கள்  அனைவரும்  வரவேற்பதாக  அவர்  சொன்னார்.

மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமை  மாற்றுவது  பற்றி  இதுவரை  விவாதிக்கவில்லை. “தேவையென்றால்” தேர்தலுக்குப்  பின்னர்   “விவாதிக்கலாம்”  என்றாரவர்.

தமக்கும்  காலிட்டுக்குமிடையில்   நிலவும்  உள்பூசலின்  காரணமாகவே  அன்வார்  காஜாங்கில்  போட்டியிட  முடிவு  செய்தார்  என்று  கூறப்படுவதை  அவர்  மறுத்தார்.

பிகேஆரின்  இந்த  ஆகக்  கடைசி முடிவு  மக்களுக்குக்  குழப்பத்தைக்  கொடுத்திருக்கலாம்  என்பதை  அவர்  ஒப்புக்கொண்டார்.

“ஆனால், இது  மேலும் வலுவான  பக்காத்தான்  ரக்யாட்டை, மேலும்  வலுமிக்க  சிலாங்கூரை  உருவாக்கும்  நோக்கம்  கொண்டது”,  என்றாரவர்.

TAGS: