அன்வார்: காலிட்-அஸ்மின் “பேரம்” எதுவுமே கிடையாது

 

anwarசர்சைக்குள்ளாகியிருக்கும் “காஜாங் நகர்வு” திட்டத்தை சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் ஏற்றுக்கொண்ட போது அவர் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

ஆகவே, சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலி அவரது சிலாங்கூர் மாநில சட்டமன்ற புக்கிட் அந்தாராபங்சா தொகுதியை காலி செய்யாத வரையில் காலிட் அவரது மந்திரி புசார் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டார் என்ற ஊகங்கள் “உண்மையற்றவை” என்றார்.

“காலிட் அப்படிப்பட்டவர் அல்ல. இந்த ஊகங்கள் தவறானவை என்பதோடு அவை காலிட்டுக்கு அநியாயம் இழைப்பதாகும்.

“நிச்சயமாக, அவர் தமது கருத்தை கூறுகிறார். ஆனால், அது இது என்று (நிபந்தனைகள்) போட  இல்லை”, என்று அன்வார் மலேசியாகினியுடனான நேர்காணலில் இன்று கூறினார்.

மந்திரி புசாருக்கு நெருக்கமான வட்டாரத்தை மேற்கோள் காட்டி அஸ்மின் அவரது சட்டமன்ற இருக்கையை காலி செய்யாத வரையில் காலிட் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று த ஸ்டார் நாழிதழ் இன்று வெளியிட்டிருந்த செய்தி குறித்து கருத்துரைத்த போது அன்வார் இவ்வாறு கூறினார்.

அவ்வாறே, அஸ்மினிடனும் 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவர் மந்திரி புசார் பதவியை ஏற்றுக்கொள்வார் என்ற   எவ்வித ஒப்பந்தமும் கிடையாது என்று அன்வார் மேலும் கூறினார்.

நேரடியான ஒரு கேள்விக்கு பதில் அளித்த அன்வார், “இல்லை. காலிட்டுடனும் (ஒப்பந்தம்). நான் கூறினேன், ‘உமது சேவைகள் தேவைப்படுகின்றன. அதே வேளை அஸ்மினிடம் கூறினேன் ‘நாம் இனைந்து வேலை செய்யவது தேவைப்படுகிறது.'”

 

 

 

 

 

 

 

 

 

 

TAGS: