சட்ட ரீதியிலான கருத்துக்களை தெரிவித்ததற்காக முதுநிலை சட்ட விரிவுரையாளரான அப்துல் அஜிஸ் போன்றவர்களை இப்படி வதைப்பது மிகவும் கொடுமையானது. யாரும் நம்ப மாட்டார்கள்
யூஐஏ அஜிஸ் பேரிக்குக் காரணம் கோரும் கடிதத்தை கொடுத்தது
2ம் தலைமுறை: அறிவு சார்ந்த விவாதங்களுக்கான மய்யமாக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும். அங்கு சமுதாயத்தை பாதிக்கின்ற முக்கியமான விஷயங்கள் ஆராயப்பட வேண்டும்.
அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் (யூஐஏ) காரணம் கோரும் கடிதத்தை வழங்கியதின் வழி தனது தரத்தை தாழ்த்திக் கொண்டு விட்டது.
அந்நிய நாடுகளிலிருந்து இந்த நாட்டுக்கு வந்து கள்ள நோட்டுக்களை அச்சிடுகின்றவர்களுக்கும் இணைய மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும் மட்டுமே பொருத்தமான இடமாக இனிமேல் இந்த நாடு இருக்கப் போகிறது.
ஸ்விபெண்டர்: பேராசிரியர் அஜிஸ் பேரி-யை வேட்டையாடும் பணியை எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக, தொடர்பு ஆணையம் தொடக்கி வைத்தது. போலீசும் யூஐஏ-யும் அதனைப் பின் தொடர்ந்தன.
அம்னோவுக்கு மாறுபட்ட கருத்துக்களை பகிரங்கமாக வெளியிடும் சுயேச்சை சிந்தனை கொண்ட யாரும் உலகில் தலை சிறந்த ஜனநாயகத்தின் கட்டுக்குள் இருக்கும் அமைப்புக்களால் அச்சுறுத்தப்படுவர். ஒடுக்கப்படுவர்.
குடி மக்களையும் அறிவாளிகளையும் அடிபணியச் செய்வதற்கு கம்யூனிச, சர்வாதிகார நாடுகளில் தான் இப்படி நடக்கும் என நாம் எண்ணுவது தவறாகி விட்டது.
குழப்பம் இல்லாதவன்: சட்ட ரீதியிலான கருத்துக்களை தெரிவித்ததற்காக முதுநிலை சட்ட விரிவுரையாளரான அப்துல் அஜிஸ் போன்றவர்களை இப்படி வதைப்பது மிகவும் கொடுமையானது. யாரும் நம்ப மாட்டார்கள்.
இந்த நாட்டில் இஸ்லாமிய அதிகாரிகள் தங்கள் சொந்த நிழலைக் கண்டு கூட அஞ்சுகின்றனர். தங்களுக்கு இணக்கமில்லாத கருத்துக்களை வெளியிடும் யாரையும் எல்லாக் கோணங்களிலிருந்தும் அவர்கள் தாக்குகின்றனர்.
அவதூறாக அல்லது சட்ட விரோதமாக இல்லாத வரையில் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு என்பதை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.
அப்துல் அஜிஸின் கருத்துக்கள் அவருடைய சட்ட ஞானம், நிபுணத்துவன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் முடிந்தது.
லூயிஸ்: அஜிஸ் பேரி, நீங்கள் உண்மையில் பெரிய மனிதர் தான். நீங்கள் நிச்சயமாக நல்ல முஸ்லிமும் கூட. ஒடுக்கப்படுவோம் எனத் தெரிந்திருந்தும் நீங்கள் உண்மையை எடுத்துரைத்தீர்கள். நாம் நேசிக்கிற இந்த நாட்டில் நேர்மையாக இருப்பது சிரமமானது.
ஆனால் நீங்கள் கடினமான வழியைத் தேர்வு செய்து விட்டீர்கள். அதற்கு விலை கொடுக்கின்றீர்கள். அதே வேளையில் பொய்யர்களுக்கும் மோசடிக்காரர்களுக்கும் வெகுமதிகள் கிடைக்கின்றன. மலேசியர்கள் உங்களுக்கு வணக்கம் கூறுகின்றனர்.
பி தேவ் ஆனந்த் பிள்ளை: யூஐஏ-யை விட்டு விலகி சிறந்த பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சட்ட விரிவுரையாளர் அப்துல் அஜிஸ் பேரி-க்கு இது நல்ல வாய்ப்பு.
மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் இருந்த போது பி ராமசாமிக்கும் இது போன்ற நிலை தான் ஏற்பட்டது. அவர் இன்று பினாங்கு துணை முதலமைச்சர்.
பேரிஸ் ஏ நூர் என்ற கல்வியாளரை அவர்கள் இப்படித் தான் அச்சுறுத்தினார்கள். அவர் இப்போது சிங்கப்பூரில் போதிக்கிறார். பேராசிரியர் அஸ்லி ரஹ்மானுக்கும் அவர்கள் அதனையே செய்தார்கள். அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்.
மலாய் கல்வியாளர்கள் தங்களுக்கு இணங்கிப் போகாமல் புரட்சி செய்தால் ரகசியப் போலீஸ் ஆட்சியைப் போன்று அவர்கள் இப்படித் தான் நடந்து கொள்வார்கள். ஆகவே மலாய்க்காரர்கள் ஊமையாகவும் முட்டாளாகவும் இருக்க வேண்டும், அதிகாரிகளிடம் கேள்வி கேட்கக் கூடாது என்பதே அதன் அர்த்தம்.
மலேசியாவில் புத்திசாலியான மலாய்க்காரர்களுக்கு இடம் இல்லை. உங்கள் சொந்த இனமே உங்களை முடித்து விடும்.
அஜிஸ், உங்களால் முடியுமானால் விலகிக் கொள்ளுங்கள். பாஸ் கட்சியில் சேருங்கள். நல்ல ஒரு நகர்ப்புறத் தொகுதி ஒன்றில் போட்டியிடுங்கள். நீங்கள் நிச்சயம் வெற்றி பெற முடியும். .
ரிக் தியோ: அம்னோ தனது சொந்த கல்லறையைத் தோண்டிக் கொண்டிருக்கிறது. காரணம் மலேசியர்கள் குறிப்பாக கல்வியாளர்கள் அஜிஸைத் தண்டிப்பதற்காக அரசாங்கத்தின் மீது ஆத்திரமாக இருக்கின்றனர். அரசாங்கம் தனது நாடகத்தில் தோல்வி கண்டு விட்டது.
கேகன்: இந்த நாட்டில் ஏதோ கோளாறாகி விட்டது. சட்டம், அரசியலமைப்பு மீது நீங்கள் உண்மையைச் சொன்னால் கூட உங்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படலாம். ஆனால் எந்த விதமான அச்சமுமின்றி பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி போன்றவர்கள் எல்லா வகையான இனவாத விஷத்தைக் கக்கிக் கொண்டிருக்கின்றனர்.