பெர்சாத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (பிஎச்எம்) தலைவர் பி. வேதமூர்த்தி தமது துணை அமைச்சர் மற்றும் செனட் உறுப்பினர் பதவிகளை இன்று ராஜினாமா செய்து விட்டதாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது.
அந்த டெய்லியின் கூற்றுப்படி, வேதமூர்த்தி அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நஜிப்பிடம் நேரடியாக இன்று பின்னேரத்தில் வழங்கினார்.
வேதமூர்த்தி அவரது செனட் உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை இன்று காலையில் நேரடியாக செனட்டில் தாக்கல் செய்ததாக பிஎச்எம்மின் செயலாளர் பி. ரமேஷை மேற்கோள் காட்டி அச்செய்தி கூறுகிறது.
இச்செய்தியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மலேசியாகினி செனட் தலைவர் அபு ஸாகார் உஜாங், பிரதமர் அலுவலக அதிகாரிகாரிகள் மற்றும் பிஎச்எம் தலைவர்களுடன் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் எவ்வித பலனையும் அளிக்கவில்லை. இரு தினங்களுக்கு முன்பு பிஎச்எம் தலைவர் வேதமூர்த்தி இன்று பதவி துறப்பார் அந்த அமைப்பின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருந்தது.
வேடம் களைத்த,,,,,
வேத மூர்த்தி ……
இனி முருங்கை மரதில் ……
வாழ்க இவரின்……
சமுதாய தொண்டு !!!!
ஹிண்ட்ராப் தலைவர் திரு.பொ.வேதமூர்த்தி துணை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக வெளியான அறிவிப்பு இந்நாட்டு மக்களின், குறிப்பாக மலேசிய இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்கிறார் டான் ஸ்ரீ ரேமன் நவரத்தினம். இதன் மூலம் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாகவே மக்கள் கருதுவார்கள் என்றும் அவர் கூறினார். அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்பது மிகப் பெரிய குற்றச்சாட்டாகும். இது தொடர்பாக மலேசிய இந்தியர்களுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டியது பிரதமர் நஜிப் மற்றும் அரசாங்கத்திற்கு தார்மீக பொறுப்பாகும் என்றார் அவர்.
அரசாங்கத்திற்கும் பிரதமருக்கும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பு மற்ற யாரையும் விட அதிகமாக இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் மக்களின் ஆதரவை அவர் மேலும் இழக்க நேரிடும். வேதமூர்த்தி தமது பக்கத்து கருத்துகளை முன்வைத்து விட்டார். இப்போது அரசாங்கம் தனது பக்கத்து வாதத்தை மக்களுக்கு விளக்கி ஆக வேண்டிய சூழலில் இருக்கிறது.
வேதமூர்த்தி அரசாங்கத்திடம் என்ன கேட்டார்? அவர் முன்வைத்த பரிந்துரைகள் என்ன? அரசாங்கம் வேதமூர்த்திக்கு எத்தகைய உத்திரவாதத்தை அளித்தது? இறுதியாக அரசு அளித்த வாக்குறுதி ஏன் நிறைவேறாமல் போனது ? என்பதை அரசங்கம தெளிவாக மக்களுக்கு தெரியப் படுத்தவேண்டும் என்றார் ரேமன் நவரத்தினம் அதிலும் குறிப்பாக எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு அரசாங்கம் அளிக்கும் வாக்குறுதிகளை இனிமேலும் நம்புவதா இல்லையா என்ற முடிவை தெளிவாக எடுப்பதற்கும் பின்னர் தங்களின் ஆதரவை யார் பக்கம் தெரிவிப்பது என்ற முடிவிற்கு மக்கள் வருவதற்கும் இது உதவியாக அமையும் என்றார் அவர்.
நம்பிக்கையை பற்றி பேசுகிறோம். ஆனால் மக்கள் இனிமேலும் நம்ப முடியுமா என்றும் ரமோன் நவரத்தினம் அஸ்ட்ரோ அவானியிடம் கூறினார்.
தொட்டால் சுடுவது நெருப்பு என்று சொன்னால் புரியாது வேதாவுக்கு தொட்டுவிட்டு ஆமாம் ஆமாம் சுடுது இப்ப சொல்லி என்ன பயன் ? டூ லேட் ப்ரோ .
வேதமூர்த்தியின் ராஜினாமா காரணத்தை மக்களுக்கு, குறிப்பாக இந்திய மக்களுக்கு வேதமூர்த்தி வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்….
போகாதே, போகாதே என் நண்பா பொல்லாத சொப்பனம் ஒன்று நான் கண்டேன். காஜாங் தேர்தலில் தே.மு. தோற்பதை கண்டேன், அம்னோ அரண்டதகைக் கண்டேன், அரண்டவன் என்னை விரட்டுவதைக் கண்டேன். போகாதே, போகாதே என் நண்பா!
நீர் தான் மனிதர்
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனை. ஆனால், நீர் நம்பியதோ நஜிப்பை….!!!! அண்டா புளுகன் குட்டு இப்போ தெரியுதா?????
காஜாங் இடை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு கட்டு பேப்பரோடு மக்கள் முன் தோன்றி, bn இந்திய மக்களை ஏமாற்றி விட்டது. அதனால் தான் எல்லா பதவிகள் இருந்தும் தாம்
விலகிகொண்டதா,ரீல் விடுவான்.
pkr தான் இந்திய மக்களுக்கு நல்லது செய்யும். என்றுதாம்
நம்புவதாக எல்லோர் முன்னிலையும் சொல்லுவான். இந்த
பச்சோந்தியை pkr கட்சியில்சேர்த்து கொள்வர்கள்யானால்,இவனை வெறுக்கின்ற இந்திய மக்கள் pkr ருக்கு ஓட்டு போடமாட்டார்கள். கணிசமான வாக்குகளை இழக்க நேரிடும். இதுதான் இவனுக்கு பதவி
கொடுத்த நம்பிக்கை தலைவனது திட்டமாக இருக்கும்,என்று எண்ண தோன்றுகிறது எல்லாம் நாடகமப்பா.
i
அய்யா தேனீ வலிக்காமல் கவிதை நடையில் கொட்டிவிட் டீர்கள்!