-குலசேகரன், து. காமாட்சி, அ. சிவநேசன், டிஎபி, பெப்ரவரி 14, 2014.
சமீபத்தில் நான், சபாய் சட்ட மன்ற உறுப்பினர் து.காமாட்சி, சுங்கை சட்ட மன்ற உறுப்பினர் அ.சிவநேசன் ஆகியோர் “நாம்” என்ற இயக்க தொடக்க விழாவில் கலந்து கொண்டதை ஆட்சேபித்து பலரிடமிருந்து கண்டனக் குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.
என் மேலும் என் கட்சியின் மேலும் நல்ல அபிப்பிராயமும் நம்பிக்கையும் வைத்துள்ள பல கட்சி அபிமானிகள், பொது மக்கள், துணை அமைச்சர் டத்தோ சரவணன் ஏற்பாடு செய்த “நாம்” தொடக்க விழாவில் நாங்கள் கலந்துகொண்டிருக்கக் கூடாது, அது ம.இ.காவின் இயக்கம் ஆகவே எதிர்கட்சியிலுள்ள நாங்கள் அதற்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என்கின்ற தோரணையில் பலர் முகநூல்வழியாகவும் குறுஞ் செய்திகள் வாயிலாகவும் தங்களின் ஆட்சேபங்களை தெரிவித்துள்ளனர்
முதலில், அவர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் எழுப்பிய கண்டனங்கள், அவர்கள் எங்கள் பால் இது காறும் வைத்திருக்கும் நம்பிக்கையையும் , எங்கள் கட்சியாகிய ஜனநாயக செயல் கட்சியின் மீதுள்ள வலுவான பற்றுதலையும் நன்கு புலப்படுத்துகின்றது.
அந்த வகையில் அவர்களுக்கு இது குறித்து விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளோம்.
எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் முதன்மைக் குறிக்கோலாக சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதைத்தான் சொல்லி வருகின்றன. ஆனால், அவற்றின் செயல் வடிவங்கள் கட்சிக்குக் கட்சி மாறுபடுகின்றன. ஆளும் கட்சிக்கு பண பலம் இருப்பதனால் அதன் திட்டங்களை நிறைவேற்றுவதில் தடங்கல்கள் அவ்வளவாக வருவதில்லை.
ஆனால், எங்களைப் போன்ற எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு, சமுதயத்திற்கான நல்ல திட்டங்கள் கைவசம் இருந்த போதும் அதை நிறைவேற்றுவதற்கான பணபலம் இருப்பதில்லை. ஒரு நல்ல காரியம் மக்களின் நன்மைக்காக செய்யப்படுகிறதென்றால் அதனை ஆதரிக்க வேண்டியது ஓர் உண்மையான அரசியல்வாதியின் கடமை என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால், இந்த “நாம்” இயக்கம் இந்திய இளைஞர்கள் பொருளாதாரத்தில் முன்னேற வழிவகுக்கும் ஒரு நல்ல திட்டமாகும் . இந்த திட்டத்தை ஆதரித்து அதன் விளக்கக்கூட்டதில் கலந்து கொள்வதில் ஒரு நியாயம் இருப்பதாக கருதியதால்தான் அதில் நாங்கள் கலந்து கொண்டோம்.
அப்படி கலந்து கொண்டதால் , நாங்கள் எங்கள் கட்சி கொள்கைக்கு எதிராகச் செயல் பட்டோம் என்று சொல்ல முடியாது. ஜ.செ.கட்சியும் ம.இ .கா வும் வெவ்வேறு கொள்கைகள் உடையவை என்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் ஆளும் கட்சி, நாங்கள் எதிர்கட்சி . நாடாளுமன்றத்தில் எதிரில் அமர்ந்திருப்பதனால் மட்டுமே நாங்கள் எதிர்க்கட்சியென பெயரெடுத்துள்ளோம். அதற்காக நாங்கள் எதிரிகளல்ல. நாளை நாங்களும் ஆளும் கட்சியாகலாம். ம.இ.கா எதிரில் அமர்ந்து எதிர்கட்சி என்ற பெயரெடுக்கலாம். ஆனால் எங்கள் இருவரின் குறிக்கோள் என்றுமே மக்கள் சேவைதான் .
நாங்கள் அந்த இயக்க விழாவில் கலந்துகொண்டதானால், ம.இ.கா விற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று சொல்வது தவறு. அவர்கள் போட்ட திட்டம் வெற்றி பெற்று அதனால் இந்திய இளஞர்கள் பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் ஆதரவு வழங்கினோம். அரசியலில் வெவ்வேறு மூலையில் நாங்கள் அமர்ந்திருந்தாலும், சமூக நலன் கருதி ஒருவருக்கொருவர் ஆதரவு தருவது அரசியல் கண்ணியம் என்று நாங்கள் கருதுகிறோம்.
அறிஞர் அண்ணா சொன்னது போல எல்லா காலக் கட்டத்திலும் , எதிர்க் கட்சியினரை எதிரிகள் போல் பார்க்கக் கூடாது. அரசியலில் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள், கருத்து மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டாலும் அதற்கும் அப்பால் அரசியல் நாகரீகம் , பண்பாடு, கண்ணியம், மனித நேயம் என்ற பலவற்றை கடைபிடிக்க வேண்டி உள்ளது. இதன் அடிப்படையில்தான் சரவணன் எங்களை மதித்து, எங்கள் மீதும், நாங்கள் சார்ந்த கட்சியின் மீதும் உள்ள நல்ல என்ணத்தினால் எங்களை அழைத்தபோது நாங்கள் அந்த அழைப்பை ஏற்றோம்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து இயங்குவது என்பது ஒன்றும் புதிதல்ல . ஏற்கனவே, நான் தமிழ்ப் பள்ளிகளுக்காக நாடளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிகளுக்குமான ஒரு சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் ம.இ.காவைவும் கலந்து கொள்ள செய்துள்ளேன். அப்போது பிரதமர் துறையில் அமைச்சராக இருந்த நஸ்ரிதான் அதனை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
ம.இ.கா ஹோல்டிங்கஸ் ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவு கொடுத்து அதன் பங்குகளை நான் வாங்கியுள்ளேன். ஆனால், அது பிற்காலத்தில் குட்டிச்சுவராக்கப்பட்டபோது இதே குலசேகரன்தான் அதை எதிர்த்து போராடி அதனால் அடியும் வாங்கிக்கொண்டான்.
இன்னும், பல திருமணங்களில், அரசு சாரா கூட்டங்களில் கோவில் திருவிழாக்களில் கட்சி பேதமின்றிக் கலந்து கொண்டிருக்கின்றோம்.
இப்பொழுது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் “நாம்” இயக்கம் தன் இலக்கை நோக்கி போகாமல் தவறான பாதையில் பயணிக்குமாயின், அதற்கு முதல் எதிர்ப்புக் குரல் இந்த குலசேகரனிடமிருந்துதான் வரும் என்றும் கூறிக்கொள்கிறேன்.
சமூக நலன் என்று வரும் பொழுது சீன சமூகம் கட்சி பேதமின்றி ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் ஒன்று கூடி செயலாற்றுவதை நாம் பார்க்கின்றோம். அதே போல இந்திய சமூக நலம் கருதி நாம் ஒன்றுகூடி ஒருவொருக்கொருவர் ஆதரவு தருவதில் எந்த தவறும் இல்லை என்பது எங்களின் தாழ்மையான கருத்து.
அரசியல் சமத்துவம் என்பது மக்களுக்கு என்பதை மிகத தெளிவாக சொன்னீர்கள். அரசியல் என்பது வெறும் கட்சி பேதம் என்று பலர் தப்பாக யோசித்து இப்படி மனித சமூக தேவைகளில் தோற்று போகின்றனர்.
எதிர்கட்சியும் மனித குலத்துக்கு எதோ செய்யவேண்டும் என்ற ஆளுமையில் தான் அநீதிகளை எதிர்த்து போராட்டம் நடத்துகிறோம். சமூத்ய உயர்வுக்கு எந்த தலைவன் திட்டம் வைத்தாலும் அரசியல் கலைவையற்று இதர தலைவர்களும் கலந்து மேன்மை வளப்பது பழைய நாகரீகம்தான் ஆனால் இடையில் சில பத்தாம் பசலிகள் பதவிக்கு தலைவர்களை துண்டு போட்டு ஒட்டவிடாமல் வேக வைத்ததின் விபத்துதான் இந்த சமூதாயம் பின்னுக்கு தள்ளப் பட்டத்தின் காரணங்கள். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாடம் என்பார்கள் நமக்கு இரு துருவ அரசியல் வாதிகள் ரெண்டு பாட்டால் சமுதாயத்துக்கு வேட்டு என்ற நிலை மாற நீங்கள் எடுத்த சிந்தனை பாராட்டுக்குரியது.
நாம் இயக்கம்நம் இனத்துக்கு இந்த கலப்பு பொருளாதார கொள்கையில் தன் படகை செலுத்தினால் வெற்றி என்ற இலக்கு வெகு தூரமில்லை. பறந்து கிடக்கும் கடல் அளவு வாய்ப்புகளை நல்ல உங்களை போன்ற மாலுமிகள் நாமில் இணைத்து காமாச்சி போன்ற வீர தீர பெண்கள் அரசியல் சமத்துவ சிந்தனயில் விவேகம் படைக்க வாழ்த்துகிறேன்.
ட்டோ சரவணன் அவர்கள் நாம் இயக்கத்துக்கு நல்ல சிந்தனை வாதி அவரும் நீங்களும் அரசியல் வாதி என்பது காலத்தின் கோலம் …சமுக வாதி என்பது நிலையான முதலீடு. ஒவொரு மனிதனும் கை மண் அளவு ஆவது சமூக தேவைக்கு இணைய வேண்டும். 10.000 ஏக்கர் என்ன? ஒரு லச்சம் நமது இலட்சியமாக எல்லோரும் ஒன்று இணைவோம்.
கட்சி பேதமின்றி இனத்துக்கு இணைந்துள்ள சிந்தனையை மக்களளுக்கு சொல்ல்வது சொன்ன விபரம் அருமை.பாராட்டுகள்.
ஷபாஸ் மாண்புமிகு அவர்களுக்கு! எனக்கும் ஓட்ருமைதான் முக்கியம் மத்ததல்லாம் அப்புறம்தான்.
உங்களது கொள்கையே எமது கொள்கை. அதே சமயத்தில் கடன் விண்ணப்பம் செய்யும் போது, பாரங்கள் வெளியிடும் போது, ம.இ.கா.வுக்கு மட்டும் தான் என்னும் நிலை இருக்கக் கூடாது. ம.இ.கா. அங்கத்தினர்களுக்கு மட்டும் தான் என்று அதிகப் பிரசங்கித்தனம் பன்னக்கூடாது! ஏற்கனவே பட்ட அனுபவம்! இங்கு இனம் தான் முக்கியம்! கட்சி அல்ல!
ஐயா குலா நீங்கள் அரசியல் வாதிகள் என்ன தான் குட்டிக்காரனம் போட்டாலும் மலேசியா இந்தியர்களை ஒன்று படுத்த முடியாது….தமிழ் மொழியும் தமிழ் பள்ளியும் மற்றும் தமிழ் உணர்வும் மட்டும் தான் மலேசியா இந்தியர்களின் ஒற்றுமை படுத்த முடியும்……நமது சமுகத்தில் ஒற்றுமை வளர்ந்தாலே பொருளாதாரமும் தானாகவே உயர்ந்துவிடும்…..மலேசியா வளாயங்கட்டிகளும் சீனர்களும் நமது இந்தியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க எது வேணுமானாலும் செய்வார்கள்……
இந்தியர்களின் ஒற்றுமையை இடைவிடாது பேசும் நாம், அரசியல், இன, மத, சாதிய வேற்றுமைகளைக் கடந்து ஒன்றித்து நின்றால்தான் வாழ்வு. இல்லையேல் தாழ்வுதான் மிஞ்சும். நாங்க கோர்ட்டுக்குல்லே எதிரும் புதிருமாக இருக்கும் போது அடிச்சிக்குவோம், ஆனால் வெளியே வந்தபிறகு கை கோர்த்துக்குவோம் என்று வக்கீல் பாணியில் தாங்கள் பேசுவது நன்றாகவே இருக்கிறது. ம.இ.க. சரவணன் இந்திய சமுதாயத்துக்கு போடும் புது கணக்குப் போல், நீங்களும் மேலும் ஜ.செ.க.- யில் இருக்கும் இந்திய தலைவர்களும் வேறு நல்ல திட்டங்கள் போட்டு இந்தியர்களை பொருளாதாரத்தில் மேம்படுத்த முயற்சி செய்யலாமே. உங்களுக்கும் கட்சிக்கும் இந்தியர்களிடையே நல்ல செல்வாக்கு கிடைக்கும் ஓட்டும் கிடைக்கும். வெறுமனே பேசிக்கொண்டிராமல் முயன்று பாருங்கள்.
நம்மவர்களின் முன்னேற்றம் அதி முக்கியம். தமிழராய் இருந்த யாவரும் கட்சி வேறுபாடு இன்றி ஒன்று படுவதே நலம். தமிழ் திரைப்படங்களில் வரும் வெறுப்பு/பொறாமை /கர்வம்/பழிக்குப்பழி என்ற வகையில் நாம் செயல் படகூடாது. நம்மவர்களுக்கு வறட்டு கெளரவம் சற்று கூடவே அதிகம். நம்மை மட்டம் தட்ட “அவர்கள்” இருக்கும் பொது நேம் நம்மை மட்டம் தட்டி குட்டிச்சுவராக்க கூடாது.
அருமையான விளக்கம் – ஒவ்வொரு சமுதாய தலைவர்களும் இந்த சிந்தனையோடு ,மக்கள் நலம் கருதி களமிறங்கினால் -வெற்றி ஒரு தனிப்பட்ட கட்சிக்கு அல்ல ஒட்டுமொத்த சமுதாயதிற்குதான். நல்லதை செய்யும்போது வரவேற்ப்போம் .
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும். தொடரட்டும் உங்கள் சேவை. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா….!!!!!
MIC கூட்டம் விழிக்க வேண்டும்
இல்லையேல் நம் நிலை வீழ்ச்சி ..!
594-வுயர்வு,வுருதியான வூக்கமுடயவர்கலை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் வாலுமாம். அரசியல் தெரியாது ஆனால் எல்லாம் தெரிந்தது போல் பேசுவது இது இவர்களின் இயல்பு,எல்லாத்தையும் இவர்களுக்கு விளக்கி சொன்னால் ராஜ தந்திரம் ஆகாது.சற்று விலகியே இருங்கள் பிறகு வுங்களையும் துரோகி பட்டம் சூட்டி விடுவர்.இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.வூக்கம் வுள்ளவரை வெற்றி தானே தேடி வரும்.நாராயண சமர்ப்பணம்.
வசந்தம் நிகழ்ச்சியில் “நாம்” குறித்து கேள்விப்பட்டேன். நடப்பவை யாவும் நன்மைக்கே என்று நம்புவோம். இதில் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்று பேதம் பார்க்காமல் அனைவரும் ஒரு குடையின் கீழ் நின்று சமுதாய உயர்விற்காகப் பாடுபடவேண்டும். சமுதாயத்திற்காகப் பல அறவாரியங்கள் அமைத்து அதோகதியாகப் போனதை கண்கூடாகப் பார்த்துள்ளோம். அதனால் ஏற்பட்டுள்ள ஏமாற்றங்களினால் பலர் எதையும் நம்புவதில்லை. நியாயமான ஆதங்கம்தானே…….டத்தோ சரவணன் அவர்களின் முயற்சி வெற்றி பெற வேண்டும். அதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஐயா குலா, அவர்களின் அரசியல் முதிர்ச்சி நன்கு வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள் ஐயா.
ஆகா மொத்தத்தில் இதற்கு முன்பு இருந்த ஜ.செ.க இந்திய தலைவர்கள் இந்திய சமுதாய மேம்பாட்டிற்கு ம.இ.கா. வோடு இணையாமல் சமுதாய உணர்வோடு போராடியது தவறு என்றல்லவா இருக்கிறது?
எதுவாக இருந்தாலும், யாரும் சமுதாய உணர்வோடு இந்த “நாம்” என்ற இயக்கத்தை ஆராம்பிக்க வில்லை என்பதை அறியும் காலம் தூரத்தில் இல்லை.
அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு நிறை வேற்றாமல் இருக்கும் திட்டங்கள் பல……அதனை ஆராய்ந்து முதலில் “நாம்” நிறைய செய்யுங்கள்.
எனக்கு யார் மீதும் கோவமில்லை, ஆனால் ஒரு சில விவரங்களை வெளிப்படுத்தும் பொழுது, மனம் வேதனை அடைகிறது.
உண்மையை இங்கு சொன்னால் பலன் கிடைக்குமா? சொல்லாமல் இருந்தால், எப்போது இவர்களின் அரசியல் நாடகத்தை வெளி உலகிற்கு காட்டுவது.
செம்பருத்திக்கு ஒரு கேள்வி: குலா, சிவநேசன் மற்றும் காமாட்சி மட்டும் தான் ஜ.செ.க இந்தியர்களா? அக்கட்சியின் இந்திய உறுப்பினர்கள் வேற யாரும் கிடையாதா? அடி மட்ட உருபினர்களிடம் சென்று பதில்களை பெற்று அதனை சேகரித்து உங்களின் அகப்பக்கத்தில் இவர்களின் உண்மை நிறத்தை போடுங்கள்.
காசுக்காக இணை இதழை விபச்சாரிகளாக மாற்றி விடாதீர்கள்.
நன்றி
வணக்கம்.