உதயகுமாரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது

1 uthayaதேசநிந்தனை குற்றச்சாட்டின் மீது 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹிண்டார்ப் தலைவர் பி. உதயகுமார் அத்த தண்டனைக்கு எதிராக செய்திருந்த முறையீட்டை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது.

செசன்ஸ் நீதிமன்றம் அளித்திருந்த அத்தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை என்று நீதி அஸ்மான் ஹிசின் அவரது தீர்ப்பில் கூறினார்.

இருப்பினும், உதயகுமார் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் மனு செய்ய இடமுண்டு நீதிபதி அஸ்மின் கூறினார்.

உதயகுமாருக்கு விதிக்கப்பட்ட 30 மாத சிறை தண்டனையில் எஞ்சியுள்ள 22 மாத கால தண்டனையை நிலைநிறுத்திய நீதிபதி அஸ்மான் அவரின் முடிவிற்கான காரணத்திற்கு எழுத்து மூலம் விளக்கம் அளிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

2007 ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் பிரதமர் கோர்டன் பிரௌனுக்கு உதயகுமார் எழுதியிருந்த கடிதத்தின் சாரத்தின் மீது சாட்டப்பற்ற குற்றச்சாட்டில் கடந்த ஜூன் மாதத்தில் உதயகுமாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

 

TAGS: