இன்றிரவு பிகேஆர் அடிமட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு விருந்தில் பேசிய சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தினார்.
காஜாங் இடைத் தேர்தல் முடியும் வரையில் தமக்காக யாரும் பரப்புரையில் ஈடுபட வேண்டாம் என்று அவர் தமது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
பிகேஆர் கட்சியின் காஜாங் இடைத் தேர்தல் இயக்குநரான காலிட் இப்ராகிம் தேர்தல் முடிவுற்ற பின்னர் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதை தாமே அறிவிக்கப் போவதாக கூறினார்.
இன்றிரவு நடைபெற்ற விருந்தில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்றாலும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஸைட் ஸரீர் ஸைட் முகமட், அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்கு முன்பு போட்டியிட்ட முஸ்தாபா கமில் அயுப் ஆகியோர் அங்கிருந்தனர்.
இது அரசியல்,காலேட் அரசியளுக்கு ஆப்பு,அப்போ எம்.பி,பதவி நிச்சயமாக புடுங்க பட்டுவிட்டது.மக்கள் சிந்தனையை வேறுபக்கம் திருப்புகிறான் அன்வா்.திருட்டுபய,மண்டை ஓடிருச்சு அன்வறுக்கு.மக்கள் இப்போ அறிவு செறூபமா கவணிக்ராங்க.பாா்கலாம் ஆண்டவன் யாா் பக்கம்,நாராயண நாராயண.
சபாஷ் சரியான போட்டி