அல்லாஹ் வழக்கு: தேவாலய மனு மீது இன்று பெடரல் நீதிமன்ற விசாரணை

 

Allah - Federal Court1த ஹெரால்ட் வார இதழுக்கு எதிரான வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரி தேவாலயம் செய்துள்ள மனுவை இன்று பெடரல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

புத்ராஜெயாவில் இன்று காலையிலிருந்து பெடரல் நீதிமன்றத்தின் முன்பு இவ்வழக்கின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கூடியுள்ளனர்.

இந்த மனு விசாரணையில் தலையீடு செய்யவிருக்கும் ஏழு இஸ்லாமிய குழுவினர்களும், பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளைப் பிரதிநிதித்து இவ்வழக்கை கண்காணிக்கும் பல வழக்குரைஞர்களும் இங்கு கூடியுள்ளனர்.

மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் தலைவர் கிறிஸ்டபர் லியோங் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் முன்னாள் துணை அமைச்சர் கான் பிங் சியு ஆகியோர் நீதிமன்ற அறையில் இருக்கின்றனர்.

நீதிமன்றத்திற்கு வெளியில் மூன்று பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றி பல வாசகங்களைக் கொண்ட பதாகைகள்Allah - Federal Court2 கட்டப்பட்டுள்ளன. அவற்றில், “அல்லாஹ் முஸ்லிம்களுக்கே”, “ஃபாதர் லாரன்ஸ் அண்ட்ரூ (த ஹெரால்ட் ஆசிரியர்) மரியாதையற்றவராக இருக்காதீர்” போன்ற வாசகங்களும் அடங்கும்.

நீதிமன்றத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எழுவர் கொண்ட அமர்வு

இந்த அனுமதி கோரும் மனுவை விசாரிக்க எழுவர் அடங்கிய அமர்வு விசாரிக்கும். அதற்கு தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியா தலைமை ஏற்றுள்ளார்.

இதர நீதிபதிகள்: மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் முகமட் ரவுஸ் ஷரீப், மலாயா தலைமை நீதிபதி ஸுல்கிப்ளி அஹ்மட் மக்கினுடின், சாபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி ரிச்சர்ட் மாலான்ஜும், பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் சுரியாடி ஹலிம் ஒமார், ஸைனுன் அலி மற்றும் ஜெப்ரி டான் கோ வா.

Allah - Federal Court3ஏராளமான கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய ஆதரவாளர்கள் இவ்வழக்கில் ஈடுபாடு கொண்டுள்ளனர்.

கத்தோலிக்க தேவாலயத்தை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்கள் அல்லாஹ் என்ற சொல்லை த ஹெரால்ட் அதன் மலாய் பதிப்பில் பயன்படுத்தக்கூடாது என்ற மேல்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய பெடரல் நீதிமன்றம் அனுமதி வழங்கும் என்று நம்புகின்றனர்.

அவர்கள் 26 கேள்விகளி நீதிமன்றத்தின்முன் வைக்கின்றனர். ஆனால், இக்கேள்விகளை எழுப்புவதற்கு முன்பு கத்தோலிக்க ஆலயத்தின் வழக்குரைஞர்கள் அவர்களின் மனுவை ஆட்சேபித்து ஆறு மாநில இஸ்லாமிய மன்றங்கள் மற்றும் மலேசிய சீன முஸ்லிம்கள் மன்றம் தாக்கல் செய்துள்ள மனுவை வெற்றிகரமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

 

 

TAGS: