காஜாங் இடைத் தேர்தல்: அன்வாருக்கு பதிலாக வான் அசிஸா

 

PKR-Wan-Kajangபிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் அக்கட்சியின் புதிய வேட்பாளராக காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அக்கட்சி இன்று அறிவித்தது.

பிகேஆர் சார்பில் காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடவிருந்த அதன் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கடந்த வெள்ளிக்கிழமை குதப்புணர்ச்சி வழக்கு II இல் குற்றவாளி என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகியுள்ளார்.

இதனை காஜாங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அன்வார்  அறிவித்தார்.

வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட வான் அசிஸா, தம் மீது நம்பிக்கை வைத்து தம்மை தேர்வு செய்ததற்கு நன்றி கூறினார். அனைத்துலக மகளிர் தினத்திற்கு இது பொருத்தமானது என்றார்.

“அநீதியால் நாம் தொடர்ந்து கொடுமைகளுக்கு ஆளாக்கப்படக்கூடாது என்ற வலுவான செய்தியை அனுப்புவதற்கு என்னுடன் சேர்ந்துகொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்”, என்று அவர் கூறினார்.

காஜாங் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாள் மார்ச் 11. வாக்களிப்பு மார்ச் 23 இல் நடைபெறும்.

 

TAGS: