நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்கள் தமிழ் இடைநிலைப்பள்ளிக்கு கோரிக்கை விடுக்க வலியுறுத்தப்பட்டனர்

Tamil 2ndary school - MPS

நாட்டில் முதல் தமிழ் இடைநிலப்பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மலேசிய நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றாக இனைந்து ஒரு நாடாளுமன்ற குழுவை அமைக்க வேண்டும் என்று பினாங்கு இந்து மன்றம் அவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அம்மன்றத்தின் சுமார் 29 உறுப்பினர் டத்தோ கிராமாட் தபால் நிலையத்தில் கூடி அவ்விவகாரம் குறித்த அவர்களுடைய அறிக்கையை பிரதமர் நஜிப் மற்றும் இதர நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்களுக்கு அனுப்பினர்.

பினாங்கு இந்து மன்றத்தின் தலைவர் பி. முருகையா இக்கோரிக்கையை விடுத்தார்.

“நாடாளுமன்ற இந்திய உறுப்பினர்கள் இந்த இலட்சியத்திற்காக ஒன்றாக இணைய வேண்டும் ஏனென்றால் முறையாக வகைமுறை செய்யப்பட்ட கல்வி நல்லதோர் எதிர்காலத்திற்கு முதற்படியாக அமையும்”, என்று முருகையா இன்று பினாங்கில் கூறினார்.

“அதிமான இந்திய பெற்றோர்கள் தங்களுடைய குழுந்தைகளை தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்ய விரும்பவில்லை ஏனென்றால் படிப்பை தொடர தமிழ் இடைநிலைப்பள்ளி இல்லை.

இந்திய ஆர்வல குழுவினர் கையொப்பம் பெறும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இது வரையில் சுமார் 10,000 கையொப்பங்களைத் திரட்டியுள்ளனர்.

கடந்த தைபூச விழாவின் போது அதிகமான கையொப்பங்கள் பெறப்பட்டன. அது தாய்மொழிக் கல்விக்கு மக்களின் ஆதரவைக் காட்டுகிறது.

இடைநிலை தமிழ்ப்பள்ளி அமைப்பதற்காக பினாங்கு மாநில அரசு புத்ராஜெயாவிடம் தாக்கல் செய்திருந்த மனுவை கல்வி இயக்குநர் கைர் முகம்மட் யூசுப் ஜனவரி 8 தேதி இட்ட கடிதத்தில் நிராகரித்துள்ளார்.

அம்மாதிரியான மனுவை ஏற்றுக்கொள்ள கல்விச் சட்டம் 1996 இல் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பினாங்கு மாநிலத்திலுள்ள 28 தொடக்க தமிழ்ப்பள்ளைகளைச் சேர்ந்த சுமார் 6,000 மாணவர்களுக்காக பட்டர்வொர்த், பகான் டாலாமில் ஒரு பள்ளுக்கூடத்தை கட்டுவதற்கு பினாங்கு அரசு மனு செய்துள்ளது.

அதற்காக மாநில அரசு ரிம1.75 மில்லையனை அதன் வருடாந்திர பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.