இந்து தாயார் தீபாவின் மகனை இஸ்லாமியராக மதம் மாறி விட்ட அவரது முன்னாள் கணவர் இஸ்வான் என்ற வீரன் கடத்திச் சென்று விட்ட சம்பவம் மீது போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பக்காரின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இரு நீதிமன்றங்கள், ஒன்று சிவில் நீதிமன்றம் மற்றொன்று ஷரியா நீதிமன்றம், இவ்விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளன. இரண்டிற்கும் தாங்கள் கட்டுப்பட்டவர்கள். ஆகவே, இதனை போலீஸ் விசாரிக்கவில்லை என்று ஐஜிபி காலிட் நேற்று கூறியிருந்தார்.
“எது மலேசியாவின் உயர்நீதிமன்றம், சிவில் நீதிமன்றமா அல்லது ஷரியா நீதிமன்றமா என்று ஐஜிபியை சாடிய மீபாஸ் தலைமைச் செயலாளர் எஸ். பாரதிதாசன் கேட்டுள்ளார்.
ஐஜிபியின் அறிக்கை தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று கூறிய அவர், இச்சம்பவம் முற்றாக மாறி கடத்தலைச் செய்தது ஓர் இந்து தாயாராக இருந்தால், காலிட் இப்படி கூறுவாரா?”, என்று வினவினார்.
கடந்த திங்கள்கிழமை உயர்நீதிமன்றம் தீபாவுக்கு அவரது இரு குழந்தைகளையும் பராமரிக்கும் உரிமையயை வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால், கடந்து ஆண்டு இவ்வுரிமையை ஷரியா நீதிமன்றம் அக்குழந்தைகளின் இஸ்லாத்திற்கு மதம் மாறி விட்ட இஸ்வான் என்ற வீரனுக்கு அளித்திருந்தது.
நீதிபதி ஸபாரியா முகமட் யுசுப், தீபாவுக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்பு சிவில் சட்ட அடிப்படையிலாகும்.
இத்தீர்ப்பு வழங்கப்பட்ட இரு நாள்களுக்குப் பின்னர் தீபாவின் முன்னாள் கணவர் இஸ்வான் என்ற வீரன் அவர்களுடைய மகனை கடத்தி சென்றார் என்றும் அதனைத் தடுக்க முயன்ற தீபா தாக்கப்பட்டார் என்றும் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஐஜிபி தவறு செய்து விட்டார்
இன்றைய த ஸ்டார் நாளிதழ் செய்தியின்படி, இரு முன்னாள் சட்ட அமைச்சர்கள் போலீஸ் படைத் தலைவர் தவறு செய்து விட்டதாகக் கூறினர்.
தீபாவின் திருமணம் சிவில் சட்டத்திற்கு உட்பட்டது. “உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது”, என்று முன்னாள் சட்ட அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறினார்.
“ஒரு குழந்தையை கடத்திச் சென்றதிலிருந்து தப்பிக்க அவரை போலீசார் அனுமதிக்கக்கூடாது”, என்று அவர் கூறியதாக செய்தி கூறுகிறது.
“அவர்கள் (போலீசார்) இரு நீதிமன்றங்களின் உத்தரவுகளையும் மதிப்பதாகவும் ஆகவே ஒன்றும் செய்யப் போவதில்லை என்று கூறுவது பொறுப்பற்ற செயலாகும் என்பதோடு அவர்கள் மீது தவறான தோற்றத்தை உருவாக்கும்”, என்று இன்னொரு முன்னாள் சட்ட அமைச்சரான ஸைட் இப்ராகிம் கூறியுள்ளார்.
உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான் ……விதியை மாற்ற முடியாது !!!
புருஷனே இல்லை என்று ஆகிவிட்ட பிறகு அந்த சூராதி சூரனை வெளக்கமாத்தால் பின்னியிருக்க வேண்டாமோ! ஷாரியா சட்டம் உங்களுக்கு இல்லையே!
அறிவு உள்ளோரை பதவியில் அமர்த்தினால் இந்த அறிவிப்பு தேவைப்படாது…..சட்டம் என்ன சொல்கிறது என்பதை அறிந்தும் அறியாததுபோல் அலட்சியமாக அறிவிப்பு செய்யும் அறிவிலிகளை பதவியிலிருந்து நீக்கவேண்டும்…. திருமணம் நடந்ததோ சிவில் முறைப்படி, மகனுக்கோ இளவயது இன்னும் மேஜர் ஆகவில்லை.. மதமாற்றம் செல்லுபடியாகாது… தயவு செய்து இஸ்லாமியர்களுக்கான உண்மையான ஷரியா கோட்பாடுகளை அவமதிக்க வேண்டாம்…. இனத்தின் பெயரில் கபடம் வேண்டாம்….
இவனைபோன்ற அரைகுறை மடையர்கள் தான் இன்று அதிகாரத்தில் இருக்கின்றனர்.எங்கும் இதே நிலைதான் எல்லாம் இன அரசியலில் காரணத்தினால்
தரமில்லா ஜால்ராக்கள் — இது மாறும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை
சிலர் அதிகாரத்தையும் பதவியையும் தற்காத்துக்கொள்ள, மற்றும் சுவர்க்கம் செல்லும் எல்லையற்ற (அறியாமை) ஆசையால், இது போன்ற வெட்கக்கேடான, மனிதத்தன்மைக்கு ஒவ்வாத இழி செயல்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நமது நாட்டின் எதிர்காலம் மிகவும் இக்கட்டான சூழலை நோக்கி செல்ல வழி உண்டாக்குகிறது. இங்கு சட்டம் குட்டிச்சுவர் ஆகிறது…!! மேனமையான மத போதனைகளை விளங்கி, அதனைக கடைபிடிக்காத மதம் பிடித்தக் கபோதிகள். பாடுவது புராணம், இடிப்பது சிவன் கோவில் என்ற நிலை. நாம் பேசுவதோ, நம்புவதோ மதம் அன்று; நம் செயலே உண்மையான மதம். இது இவர்களுக்குப் புரியவே புரியாது போல் இருக்கு.
மைக்கா வாயில் BN பழமா இருக்கு ?
kamapo சொல்வது சரி. மதத்திற்கு மதம் பிடித்துவிட்டது.