பாஸ் ஹுடுட் சட்ட மசோதா தாக்கல் செய்வதை பாக் லா ஆதரிக்கிறார்

MALAYSIA-ABDULLAH-SPEECH

பாஸ் தலைமையிலான கிளந்தான் மாநில அரசாங்கம் ஹூடுட் சட்ட மீதான ஒரு தனிப்பட்ட உறுப்பினர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் தவறு ஏதும் இல்லை என்று முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் பாடாவி கூறியுள்ளார்.

“அந்த விவகாரம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால் அது என்ன தவறு இருக்கிறது?”, என்று அவர் நேற்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஹூடுட் சட்டம் நாடுதழுவிய அளவில் அமலாக்கம் செய்யப்பட வேண்டுமா என்று கேட்ட போது, “ஒவ்வொன்றாக அமலாக்கம் செயல்படுத்தப்படட்டும்”, என்றாரவர்.

கிளந்தான் மாநில ஷரியா கிரிமினல் சட்டத் தொகுப்பு (2) 1993 ஐ அமல்படுத்துவதற்கான நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற பாஸ் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

(குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு கட்டாயத் தண்டனை வழங்கும் கடவுளின் கட்டளையான குறிப்பிட்ட விதிகள் அல்லது சட்டங்களை ஹூடுட் குறிப்பிடுகிறது. குற்றங்களுக்கான தண்டனை உடலுக்குத் துன்பம் விளைவிக்கும் தன்மையுடையது – சவுக்கால் அடித்தல், கல்லால் அடித்து கொல்லுதல் மற்றும் உடல் உறுப்புகள் துண்டித்தல் போன்றவையாகும்.)

 

 

TAGS: