மனித உரிமை கட்சியின் தலைவர் பி. உதயகுமார் காஜாங் சிறைச்சாலையின் இயக்குனர் மற்றும் இதர இரு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவர் இதற்கான மனுவை நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அம்மனுவில் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மான் ஹுசின் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அவரை அவரது வழக்குரைஞர்கள் சந்திக்க அனுமதி வழங்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை சிறைச்சாலை அதிகாரத்தினர் பின்பற்றவில்லை என்று உதயகுமார் கூறியுள்ளார்.
அம்மனுவில் காஜாங் சிறைச்சாலை இயக்குனர் அப்துல் வஹாப் அப்துல் காசிம், இன்ஸ்பெக்டர் ஸாஜிடே சாமின் மற்றும் மெக்கென்சி என்று மட்டும் கூறப்பட்டுள்ள இன்னொரு இன்ஸ்பெக்டர் ஆகியோரை உதயகுமார் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
என்ன நாயம் கிடைக்க போகிறது?ஐயோ ஐயோ சொன்ன யாருக்கும் புரியாத?நீதி ,நேர்மை ,சட்டம் இன்னும் பல எல்லாம் பூஜியம் .அவங்களாம் யிரோ,நாம எல்லாம் வில்லன் அப்படி தான்……நமக்கு கொடுத்த பாத்திரம் இதை நாம் ஒழுங்காக நடிக்க வேண்டும் இல்லனா வுள்லே.
வெற்றி கிடிக்க என் வாழ்துக்கள் .
வெற்றி கிடைக்க என் வாழ்துக்கள்
இதெல்லாம் அம்னோவின் சட்டம். யாராலும் அசைக்க முடியாது!
இவுங்களை சும்மா விடாதீர் . சட்டத்தின் முன் இழுதுவரவேண்டும்.
செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால் தற்பொழுதுள்ள நீதிபரிபாலன நிலையில் பலன் கிட்டுமா? நமக்காக சிறையில் வதைபடும் ஒரு தியாகி.
ஹிண்ராப் தலைவர்கள் படும் வேதனை,பட்ட அவமானங்கள்,இன்னல்கள்,சோதனைகள் கான மணம் கலங்குது.சமுதாயம் என்ன வுபகாரம் செய்யபோகிறது?.சட்டம் தெரிந்தவர்கள் முன்வந்து வுதவுங்கள்,ப்லீஸ்.இந்தியர்கள் என்.ஜி.ஓக்கள் முன்வந்து சம்மந்தப்பட்ட அலுவழகத்தை நெருக்குதல் தரவேண்டு்ம் வேண்டுகிரோம்,ஓம் ஷாந்தி3,வாழ்க நாராயண நாமம்.
இருந்த சட்ட நிபுணர் கர்பால் சிங் கொன்னுதங்க .அப்புறம் அம்னோ வெச்ச சட்டம்தான் .
மக்கள் முட்டாள்கள்! உண்மையாக, நேர்மையாக, மக்களுக்காக போராடும் PSM,ஹிண்ட்ராப் போன்ற கட்சிகளின் தொண்டர்களை தேர்வு செய்ய தவறிவிட்டனர்.
நல்லா வழக்கறிஞர் தொழில் செய்து ராசா மாதிரி வாழ்ந்த மனுஷன்,இன்று அனாதையாக சிறையில்,பாசமுல்ல குடும்பத்தை பிரிந்து வாழ்கிறார்,யாறுக்காக?,தன் பாசமுல்ல பிஞ்சுகலுடன் அரவணைத்து மகிலும்போது சிந்தியுங்கள் இந்த தியாகியைபற்றி அப்போது புரியும் பிரிவின் கொடுமை,ப்லீஸ் டூ சம்திங் 4 அவர் பீப்பல்,தெங்ஸ்,வாழ்க நாராயண நாமம்.
ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். நம் ஒற்றுமையே நம்மை காப்பாற்ற உதவும். இல்லையேல்…… இப்படிதான் நாம் சின்னா பின்னா படனும் இந்த நாட்டிலே!
“ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே….. வேற்றுமையை வளர்பதனலே ….. விளையும் தேமைய” … இன்னும் என்ன சொல்ல?
என்று தான் இதை , இந்த் உண்மையை உணர போகிறோமோ??