காணாமல் போன மலேசிய விமானத்தின் உடைந்த பகுதிகள் மிதப்பதைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு குறைந்துகொண்டே வருகின்ற நிலையில் அடுத்த கட்டமாக இந்தியப் பெருங்கடலின் அடியில் முன்னிலும் பரந்த பகுதியில் தேடிப்பார்ப்பதற்கு கவனம் செலுத்தப்படும். ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பட் இன்று இதனைத் தெரிவித்தார்.
அதிநவீன கருவிகளைக் கொண்ட கடலடிச் சாதனங்களின் உதவியுடன் கடலடியில் தேடும் நடவடிக்கை தொடரும்.
காணாமல்போன விமானத்தின் பகுதிகள் எதுவுமே கிடைக்காமல் போகும் சாத்தியம் இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
“இந்த மர்மத்துக்கு முடிவுகாண எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்”, என கேன்பெராவில் அப்பட் கூறினார்.
என்னமா வேஷம் போடுறானுங்க. கடலில் இல்லாத ஓர் விமானத்தை இன்னுமா தேடுரானுங்க. விமானம் என்ன ஆனது என்பது அல்தாந்துயா நஜிப்புக்கு தெரியும். சீனாவுடன் ஒத்துழைப்பதை நிறுத்தும்படி சொல்லிப்போகத்தான் பராக் ஒபாமா நம் நாட்டிற்கு வந்ததும் நஜிப்புக்கு தெரியும். உலக வரைப்படத்தில் ஒரே ஒரு கரும்புள்ளிதான் மலேசியா. அந்த கரும்புள்ளியை தேடிக்கொண்டு இங்கே பறந்து வந்ததின் காரணமென்ன? ஏன்டா காதுல பூ சுத்தரிங்க?
விமானத்தின் மாலுமி கடைசியாக சொன்ன வார்த்தையில் ‘NQT’ என்ற இரகசிய வார்த்தைகள் இருந்ததப்பா. எதற்கும் ஆஸ்திரேலியாவின் “Nothern Queensland & Nothern Territory”. பகுதியில் இருக்கும் மக்கள் நடமாட்டம் இல்லாத பாலைவனப் பகுதியில் கொஞ்சம் தேடிப் பாருங்கள் ஐயனே!. அந்த சிவ புண்ணியத்தில் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
இப்பதான் எங்க நாட்டு எ…மைகள் (அதாவது இந்த விமான பேரிடரில் தொடர்புள்ள அமைச்சர்கள் முதல் பாதுகாப்பு அதிகாரிகள் வரை) கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்கள். இது உங்களுக்கு பிடிக்க வில்லையா ??? புது புது பீதியை கிளப்பி விட்டு அவர்களுடைய நிம்மதியை கேடுக்கிறீர்களே !!!
எத்தனை “அடுத்த கட்டத்துக்குச்” செல்லப் போறீங்க? எதற்கும் எல்லா இஸ்லாமிய நாட்டிலும் தேடிப் பாருங்க! தீவிரவாதிங்க வேலையா இருக்கப் போவது!