நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நடைபெற்ற ஒரு மணி நேர சந்திப்பில் மலேசிய சிவில் சமூக உறுப்பினர்கள் நாட்டின் உண்மையான நிலவரத்தை அவரிடம் கூறினர்.
அச்சந்திப்பில் கலந்து கொண்ட மனித உரிமை குழுவான ஹகாம் தலைவர் எஸ். அம்பிகா அந்த வரலாற்றுப்பூர்வமான சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதை மலேசியாகினியுடன் பகிர்ந்து கொண்டார்.
“(எழுப்பப்பட்ட) பிரச்னைகளில் பிளவுகளை உருவாக்கும் முரண்பாடான அரசியல், சமய மற்றும் இனவாத தீவிரவாதம், பாகுபாடு காணுதல், அடக்குமுறை சட்டங்களின் வழி அரசாங்கம் அமல்படுத்தும் ஆதிக்க ஆட்சி, சுயேட்சை மற்றும் நேர்மையான தேர்தல்கள் மற்றும் சட்ட ஆளுமை போன்றவை அடங்கும்”, என்று அவர் கூறினார்.
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீதான குற்றச்சாட்டுகள், எதிர்கட்சிகளுக்கு எதிரான தேச நிந்தனை குற்றச்சாட்டுகள் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தின் கீழ் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் போன்றவையும் விவரிக்கப்பட்டது.
மலேசிய அதிகாரத்தினர் எவ்வாறு ஊடகங்களை நசுக்குகின்றனர் என்பதும் ஒபாமாவிடம் தெரிவிக்கப்பட்டது என்று அம்பிகா கூறினார்.
“மலேசியா ஒரு மிதவாத இஸ்லாமிய நாடுமல்ல என்பதோடு அது ஜனநாயகம் என்ற சொல்லின் உண்மையான அர்த்தத்திற்கு உட்பட்ட ஜனநாயக நாடுமல்ல என்பதை நாங்கள் தெள்ளத் தெளிவாக கூறினோம்”, என்று மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரான அம்பிகா மேலும் கூறினார்.
நேர்மைமிக்க வீரப்பெண்மணி .
வாழ்த்துக்கள் மேடம்.நீங்கள் நிடோடிவால்க.
உருப்படியாக ஏதாவது நடக்கும் என்று எதிர் பார்ப்போம்.
மகிழ்ச்சியான செய்திதான்..! ஏதாவது நடக்குமா..? மாட்றங்கள் ஏற்படுமா என்பதை விட..! நாட்டின் நிலவரங்களை தெளிவாக சொல்லி இருப்பீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும் வாழ்த்துக்கள்.
நல்ல காலம் தற்போது நமது நாட்டில் ISA சட்டம் அமுலில் இல்லை. இருந்திருக்குமேயானால், சகோதரி ‘அம்பி’ இந்நேரம் ‘கம்பி’
இரும்பு பெண்மணி.தொடரட்டும் உங்கள் சேவை
அக்காள் அம்பிகாவுக்கு நெஞ்சம் மலர்ந்த நன்றி! மகேசனுக்கே எட்டும் உங்கள் குரல், அமெரிக்க அதிபர் ஒபமாவின் மூலம் இவர்களுக்கு எட்டும். விவேகமற்ற அரசியல், உலக அரசியல் அரங்கில் உருப்பட்டதாகவோ வெற்றி பெற்றதாகவோ வரலாறு இல்லை. உங்கள் கோரிக்கைக்கு ஒபாமா என்ன சொல்லப்போகிறார். என்பதை கேட்க மண்ணின் மைந்தர்களான நாங்கள் காத்திருக்கிறோம். ஒரு சொல் வெல்லும்! ஒரு சொல் கொல்லும்!
பாரதி கண்ட புதுமை பெண் , …
அருமை உங்கள் அஞ்சாமை ..!
அவர்…அவர் கடமையையும்… உரிமையும் தீர்த்துவிட்டார் ..! ஹ்ம்ம்… சரி பாப்போமே…..!
வாழ்த்துக்கள் மேடம் சிறந்த அறிவாளிகளின் சந்திப்பு இதன் வழி நல்ல மாற்றங்கலை எதிர்பார்ப்போம்.
சொல்லியாச்சே
, ஒபாமா என்ன செய்ய போகிறார் . ஒன்றும் நடக்காது .
இரும்பு பெண்மணி திருமதி அம்பிகாசீனிவாசன் அவர்களுக்கு நன்றி ,ஒரு மிகப்பெரிய வல்லரசு நாட்டின் அதிபர் அவர்களிடத்தில் இந்த செய்தியை கூரியதர்கு மிக்க நன்றி.இனிமேல் எல்லாம் அவர் செயைல்.
அப்படி போடு ! தமிழச்சி டா ,சும்மாவா
எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே திரும். மாற்றமே நிலையானது ….மக்களின் நலமே உறுதியானது. கடவுளின் பார்வையில் !!
இரும்பு உருக பட வேண்டிய பொருள் உருபடியா வேலை இருந் போய் பருங் நண்பர் எண்ணத முட்டினாலு மோதினாலும் நமக்கு ஒனும்……
ஹபிஸ் ல
அம்பிகா மேடம் ஒரு துணிச்சல் மிக்க வீர பெண்மணி , வாழ்க அம்பிகா மேடம் .
இப்போ நம்ம சமுதாய சாணித் தலைவர்கள் ” ஐயோ, வடை போச்சே” னு உட்கார்ந்திருப்பதைத் தவிர வேர என்ன கிழிக்க போகிறார்களாம். அம்பிகா ஒரு வீர மங்கை.
மாட்றங்கள் ஏற்படுமா என்பதை விட..! நாட்டின் நிலவரங்களை தெளிவாக சொல்லி anfநேர்மைமிக்க இரும்பு பெண்மணி திருமதி அம்பிகாசீனிவாசன் அவர்களுக்கு நன்றி.
சொல்ல வேண்டியதைச் சொல்லியாயிற்று. மற்றவை ‘அவன்’ செயல்!
இனிமேல்தான் நமக்கு ஆப்பு வைக்க போறான். இலங்கை கதி
மலேசியா கதி .புலம் பெயர தயாராக
வேண்டும்
வான் மதி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கிளச்சானுங்க
இவன் இன்னா நமக்கு ஆப்பு வைக்கிறது. சீனன் இதற்க்கு முன்பே இவனுக்கு ஆப்பு வைக்க ரெடியாயிட்டான் அப்பு. பதிலுக்கு பதில் காத்துக் கொண்டிருக்கின்றது பொருளாதார நாடகத்தில். பொறுத்திரும். மலேசியாவின் பொருளாதார அடித்தளம் ஆட்டம் காண ஆரம்பிடுச்சிடோய்.
சீனன் ஆப்பு வைச்சிட்டு ஒன்னும் தெரியாது மாதிரி இருப்பான் ,ஆனால் நம்மவனோ சும்மா ஒரு கல்லை எடுத்து
போட்டு இருப்பான் ஆனால் ஊரே தம்பட்டம் அடிப்பான் கெட்ட பெயரையும் வாங்கிக்கொள்வான் ,இவர்கள் மத்தியில் உண்மையான நேர்மையான வீர பெண்மணி அம்பிகா இருப்பதால் உண்மை ஒருநாள் ஜெயிக்கும் நைனா .
நம்மிடம் எல்லாம் இருக்கு, ஒன்று மட்டும் இல்லை,ஒற்றுமை. மற்றவர்களிடம் எல்லாம் இல்லை, ஒன்று மட்டும் இருக்கு, ஒற்றுமை.
வாழ்த்துகள் அம்பிகா இரும்பு பெண்மணி தமிழ் பெண் சிகரமே!!!!
அடுத்த பெண் கர்பால் சிங் நீங்கள் தான்.
கண்டிப்பாக நீங்கள் நஜீப் சொல்லாததை ,நீங்கள் சொல்லியிருப்பீர்கள். காரணம் உங்கள் ஆங்கில புலமைக்கு ஒபாமா பதில் சொல்ல தடுமாறி -யிருப்பார்,ஆனால் நஜீப்புக்கு கண்டிப்பாக பதில் அளித்திருப்பார்
வரும் நாளாய் ஒடுன்ஹ்கும் அடங்கும் கிடங்கும் தொடங்கம் !!!!!
நீங்கள்தான் ஹீரோ …
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மேடம் அம்பிகா அவர்களே ! வாழ்க வளமுடன் நலமுடன் ……ஆண்டவன் நம் பக்கம் !
நல்லது ,யாரவோது, ஒருவர் ஒரு பிள்ளையார் சுழி போடவேண்டும் அல்லவா,அதுதான் திருமதி அம்பிகா போட்டுவிட்டார் ,நன்றி.20.5.2014 அன்று 2 orang asli சந்தித்தேன், அவர்கள் கூறிய வார்த்தைகள் என்னால் நம்ப முடியவில்லை.இந்த நாடு எங்கள் நாடு.மலாய் கார்கள் சொல்வது பொய்.நாங்கள் சிறு பன்மியர்கள்.காலும் வரும் என்று கூறினார்கள்.