நஜிப் தமது சொத்துகளை அறிக்க வேண்டும், அம்பிகா சவால்!

ஊழலை முற்றிலும் துடைத்தொழிக்கப் போவதாக கூறும் அரசாங்கம் அதன் ஈடுபாட்டை காட்டுவதற்கு பிரதமர் நஜிப் அவரது சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று அவருக்கு சவால் விடப்பட்டுள்ளது. அச்சவாலை விடுத்த பெர்சேயின் முன்னாள் இணைத் தலைவர் அம்பிகா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்எசிசி) வழிநடத்துபவர் பிரதமர் நஜிப் அவரது…

பக்காத்தானோ பிஎன்னோ பாலின அடிப்படையில் வேறுபடுத்திப் பார்ப்பது தப்பு

பினாங்கு  முதலமைச்சர்  லிம் குவான் எங், மாநில சட்டமன்ற எதிரணித் தலைவர் ஜஹாரா ஹமிட்டை “இனவாத பாட்டி” என்று வருணித்ததற்காக  மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாலும்கூட  பல தரப்பினரின் குறைகூறலுக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார். . ஆகக் கடைசியாக  லிம்முக்கு கண்டனம் தெரிவித்திருப்பவர்  முன்னாள் பெர்சே தலைவர் எஸ்.அம்பிகா. “பாலியல் அடிப்படையில்…

அம்பிகா: நஜிப் “40,000 வங்காளதேசி வாக்குகள்” என்று கூறிக் கொண்டிருப்பது…

கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் 40,000 வங்காளதேசிகள் வாக்களித்திருந்தனர் என்பதை மீண்டும் மீண்டும் பிரதமர் நஜிப் மறுத்து வருவது பொதுத் தேர்தலின் போது நடந்த இதர தேர்தல் மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்ப்பதற்காக அவர் நடத்தும் திசை திருப்பும் நாடகம் என்று பெர்சே இணைத்…

மசீசவிடமும் மஇகாவிடமும் ஏதாவது கொஞ்சமாகிலும் இருந்தால், வெளியேற வேண்டும், அம்பிகா

அம்னோ அமைச்சர் என்ற முறையில் எவ்விதத் தண்டணையும் இன்றி இனவாதக் கருத்துகளைக் கூறலாம் என்ற நிலை இருப்பதால், பாரிசான் பங்காளிக் கட்சிகள் எப்படி இதனைச் சகித்துக் கொண்டு இன்னும் தொடர்ந்து அக்கூட்டணியில் இருக்கின்றன. பாரிசானின் இரு முக்கிய கட்சிகள் தங்களுடைய சுயமரியாதை உணர்வை வலுப்படுத்த வேண்டும் என்று பெர்சே…

அம்பிகா: நன்றி, ஆனால் அரசு நியமனத்தை ஏற்பதற்கில்லை

குற்றத் தடுப்புச் சட்டத்தின்(பிசிஏ)கீழ் கைது செய்யப்படுவோரின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மூவரடங்கிய வாரியத்தில் ஒருவராக  பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை நியமனம் செய்வது பற்றி ஆராய அரசு தயாராகவுள்ளது.  ஆனால், அந்நியமனத்தை ஏற்க அம்பிகா விரும்பவில்லை. அவ்வாரியத்துக்கு மக்கள் நம்பிக்கை வைத்துள்ள  பெருமக்களை நியமிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும்…

அம்பிகா: அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்

பெர்சே 3.0 பேரணியின்போது  செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் “தாக்கப்பட்டதாக” ஓர் அமைச்சர் கூறிருப்பது, அப்பேரணிமீது மனித உரிமைகள் ஆணையம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள உண்மைகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளது என்கிறது பெர்சே. உண்மையில், 2012, ஏப்ரல் 28 பேரணியின்போது செய்தியாளர்களைத் தாக்கியவர்கள் போலீசார்தான்  எனக் கண்டறிந்து கூறப்பட்டுள்ளது என்றும்   அவ்வாறு…

அம்பிகா: ஏஜி-இன் சொல்லுக்கு மதிப்பில்லையா?

சட்டத்துறைத் தலைவரை (ஏஜி) ஓரங்கட்டிவிட்டுத்தான்  அரசாங்கம் தடுப்புக் காவல் சட்டத்தைத்  தாக்கல் செய்ததா? மூத்த வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீநிவாசன் இக்கேள்வியை எழுப்பியுள்ளார். இன்று  நாடாளுமன்றத்துக்கு  வெளியில்  பேரணி  ஒன்றில் உரையாற்றிய  அம்பிகா,  கடந்த ஜூலை மாதம்  ஏஜி அப்துல் கனி பட்டேய்ல்  தடுப்புக் காவல் சட்டத்தை  எதிர்ப்பதாக பொதுவில்…

இசி விலக வேண்டும் என கோலாலம்பூர் ‘கறுப்பு 505’ கேட்டுக்…

கோலாலம்பூரில் பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்யும் 'கறுப்பு 505' பேரணி இசி என்ற தேர்தல்  ஆணையம் விலக வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுமானால் அதனை பெர்சே ஆதரிக்கும் என அதன்  இணைத் தலைவர் எஸ் அம்பிகா கூறியிருக்கிறார். ஜுன் 15ல் நிகழும் அந்தப் பேரணியின் நோக்கம் பற்றி பெர்சே-க்கு…

பாஸ்போர்ட் விவகாரம் மீது தலைமை இயக்குநரைச் சந்திக்க பெர்சே விரும்புகின்றது

வெளிநாடுகளில் நாட்டின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதற்காக 6564 மலேசியர்களுடைய  பாஸ்போர்ட்டுக்கள் ரத்துச் செய்யப்படும் என குடிநுழைவு தலைமை இயக்குநர் அலியாஸ் அகமட்  விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் அவரைச் சந்திக்க பெர்சே விரும்புகின்றது. அதற்காக அவருக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்றை பெர்சே அனுப்பும் என்று அதன் தலைவர்  அம்பிகா ஸ்ரீனிவாசன்…

நுருல் இஸ்ஸா நிகழ்வில் பெர்சே அம்பிகா

வாக்காளர் பட்டியல் குறைபாடு போன்ற கவலைகள் இருந்தாலும் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா, எப்படியோ முயன்று பெர்சே அமைப்பின் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை தம் கூட்டம் ஒன்றுக்கு அழைத்து வந்திருந்தார். நேற்றிரவு பங்சாரில் ஒரு சிறிய இடத்தில் அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 400 பேர் இடித்துப்…

Discussing Sabah RCI not sub judice, says Ambiga

The government cannot stifle public discussion about the Royal Commission of Inquiry (RCI) on allegations of a citizenship-for-votes scheme in Sabah by claiming it to be sub judice, said Bersih co-chairperson Ambiga Sreenevasan. The former…

அம்பிகா: ஆர்சிஐ பற்றி விவாதிப்பது இடையூறு செய்வதாக இருக்காது

சபாவில் 'வாக்குகளுக்காக குடியுரிமை' என்னும் குற்றச்சாட்டுக்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை  ஆணையம் குறித்து விவாதிப்பதை சட்ட நடைமுறைகளுக்கு இடையூறு செய்வதற்கு (‘sub judice’) ஒப்பாகும்  எனக் கூறிக் கொண்டு அதன் தொடர்பில் பொதுமக்கள் விவாதம் நடத்துவதை கட்டுப்படுத்த முடியாது என  பெர்சே இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன்…

அம்பிகா: நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திட்ட நஜிப்பை அதற்குப் பொறுப்பேற்கச் செய்வோம்

கடந்த புதன்கிழமையன்று மலேசிய அனைத்துலக வெளிப்படை அமைப்புடன் நேர்மை வாக்குறுதியில் கையெழுத்திட்ட நஜிப்பை அதற்குப் பொறுப்பேற்கச் செய்வோம் என பெர்சே 2.0 கூறுகின்றது. "அந்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றுக்கும் நஜிப்பை பொறுப்பேற்கச் செய்வோம்," என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் நேற்று கோலாலம்பூரில் கூறினார். அவர், நேற்று அரசமைப்பும்…

கட்டுப்பாட்டை தாம் இழந்ததாகக் கூறப்படுவதை அம்பிகா மறுக்கிறார்

பெர்சே 3.0 பேரணியின் போது கூட்டத்தினர் மீதான கட்டுப்பாட்டை தாம் இழந்து விட்டதாகக் கூறப்படுவதை பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மறுத்துள்ளார். அந்த நிலைக்கு போலீசாரே காரணம் என அவர் சொன்னார். கலைந்து செல்லுமாறு தாம் விடுத்த வேண்டுகோளை சிலர் மட்டுமே கேட்க முடிந்த போதிலும் கூட்டத்தினர்…

அம்பிகா மக்கள் வீரர் ஆனால் அரசியல்வாதி அல்ல

கெடாவில் நேற்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியின் தலைப்பு 'மக்களுடன் டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசான்'  ( Datuk Ambiga (Sreenevasan) Bersama Rakyat) என்பதாகும். அது ஒர் அரசியல் கூட்டம் போலத் தோற்றமளித்தது. ஆனால் அந்தத் தோற்றத்தை மறுத்த அம்பிகா "நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல" என்றார். "நாங்கள் பாரிசான் நேசனலுக்கோ…

அம்பிகா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். “இன்றிரவு 10 நிமிடங்களுக்கு குடிநுழைவுத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஆட்டோ-கேட் வழியாக போக முடியவில்லை.இது பெர்சே இயக்கக்குழு உறுப்பினர்களுக்குத் தொல்லைகொடுக்க முனைகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. “என்னைத் தடுத்து நிறுத்தியதற்கு குடிநுழைவு அதிகாரிகளால் சரியான…

அம்பிகா: மோசடிகளை முறியடிக்க அனைவரும் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்

தேர்தல் சீரமைப்புக்குப் போராடும் அமைப்பான பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், 1999ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது புதிதாக வாக்காளர்களாக பதிந்துகொண்ட 650,000 வாக்காளர்களால் வாக்களிக்க முடியாமல் போனதை நேற்று நினைவுபடுத்தினார். கணினி பதிவுமுறை அமலுக்கு வருமுன்னர், வாக்காளராகப் பதிந்துகொண்டவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற ஆறு மாதங்கள்…

அம்பிகா: மற்றதை மறந்து தேர்தல் சீரமைப்பில் கவனம் வைப்பீர்

மலேசியர்கள், அரசாங்க-ஆதரவு ஊடகங்களின் ஒருமித்த தாக்குதல், மற்ற திசைதிருப்பும் நாடகங்கள் போன்றவற்றில் Read More

அரசு சாரா அமைப்புக்களிடம் மன்னிப்புக் கேட்க என்எஸ்டி-க்கு 48 மணி…

அரசாங்கத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதற்கு சதித் திட்டம் தீட்டியதில் தாங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டு முதல் பக்கத்தில் பெரிய செய்தியாக வெளியிட்டதற்காக என்எஸ்டி என்ற நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நிபந்தனை ஏதுமின்றி 48 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஆறு அரசு சாரா அமைப்புக்கள் காலக் கெடு விதித்துள்ளன.…

சரவாக் தடையை அகற்ற அம்பிகா மேற்கொண்ட இறுதி முயற்சி தோல்வி

பெர்சே இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், சரவாக்கிற்குள் தாம் நுழைவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான இறுதி முயற்சியில் தோல்வி கண்டுள்ளார். அந்தத் தடை மீது நீதித் துறை மறு ஆய்வு செய்வதற்கு அனுமதி கோரி அவர் சமர்பித்திருந்த விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துள்ளதே அதற்குக் காரணமாகும். அவரது விண்ணப்பத்தை அகமட்…

பத்திரிகையின் வலிமை பொறுப்புடன் அதிகரிக்க வேண்டும்!

அண்மையில் (ஆகஸ்ட் 12) டத்தோ அம்பிகா சீனிவாசனுடன் நான்கு தமிழ் நாளிதழ்கள் பங்குபெற்ற உரையாடல் நிகழ்ச்சி மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பிகா சீனிவாசனிடம் கேள்விகள் கேட்ட நான்கு தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களிடம் அம்பிகா இரு கேள்விகளைக் கேட்டார். [காணொளி] கேள்வி : எனது கேள்வி இரு நிலைகளில்…

அம்பிகா 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே இணைத் தலைவர்…

அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே எனப்படும் தேர்தல் சீர்திருத்த இயக்கத்தில் தாம் வகிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள எண்ணியுள்ளதாக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். நிதித் துறைச் செய்திகளை வெளியிடும் பூளும்பர்க் துணைக்கோளத் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் அவர் அதனைக் கூறியுள்ளார். வர்த்தக,…