கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் 40,000 வங்காளதேசிகள் வாக்களித்திருந்தனர் என்பதை மீண்டும் மீண்டும் பிரதமர் நஜிப் மறுத்து வருவது பொதுத் தேர்தலின் போது நடந்த இதர தேர்தல் மோசடிகள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்ப்பதற்காக அவர் நடத்தும் திசை திருப்பும் நாடகம் என்று பெர்சே இணைத் தலைவர் அம்பிகா கூறினார்.
“இந்த ஒரு பிரச்னையை அவர்கள் ஏன் பெரிதுபடுத்துகின்றனர் என்பதில் எனக்கு பெரும் சந்தேகம் ஏற்படுகிறது. இது ஒரு திசை திருப்பும் செயல் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இதை வைத்து அவர்கள் இதர ஆதாரப்பூர்வமான தேர்தல் மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை”, என்று தொடர்பு கொண்ட போது அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
அக்டோபர் 31 இல், சிஎன்என் நேர்காணலில் நஜிப்பிடம் தேர்தல் “மோசடி, வாக்குகள் வாங்கப்பட்டது, இரட்டை வாக்கு அளித்தல், ஆவி வாக்குகள், (மற்றும்) தொகுதி நிர்ணயப் பிரச்னைகள்” பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
அக்குற்றச்சாட்டுகள் “அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கும் போது … மொத்தத்தில் ஆதாரமற்றவை” என்று பதில் அளித்த நஜிப், எடுத்துக்காட்டாக, வாக்களிப்பதற்காக 40,000 வங்காளதேசிகள் கொண்டுவரப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கபடவே இல்லை என்பதை வலியுறுத்திக் கூறினார்.
மே பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இந்தப் பிரச்னை பக்கத்தான் ரக்யாட்டை ஏளனம் செய்வதற்காகவும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை நம்பாமல் செய்வதற்காகவும் எழுப்பப்படடது. கடந்த சில வாரங்களில் நஜிப்பின் அக்டோபர் 25 பட்ஜெட் உரையிலும், அக்டோபர் 28 கெராக்கான் தேசிய மாநாட்டிலும் மிக அண்மையில் சிஎன் என்னிலும் மீண்டும் எழுப்பப்பட்டது.
“சிஎன்என் நேர்காணலில் கேட்கப்பட்ட மோசடி, வாக்குகள் வாங்கப்பட்டது மற்றும் தொகுதி நிர்ணயம் போன்ற வேறு எந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை”, என்பதை அம்பிகா சுட்டிக் காட்டினார்.
தேர்தலில் மோசடிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை, தேர்தல் நீதிமன்றத்தில் [Elections Court ] நுழைந்ததே இல்லை. அத்தனையும் செலவுத்தொகைகளுடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விஷயம் இப்படி இருக்கையில், எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கபடவேயில்லை என நாகூசாமல் பொய் சொல்கிறார் பிரதமர். வழக்கு நடந்திருந்தால்தானே, எது சரி, எது சரியில்லை என்பதை நிரூபிக்க?
கேள்விக்கு பதில் அளிக்காமலே பதில் சொல்லும் அதிமேதாவித் தனத்தை தனது ஆசானாகிய மாமாக்திரிடம் இருந்து இவர் கற்றுக் கொண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லையே?
மண்வெட்டி கையில் எடுப்பார் சிலப்பேர் மற்றவருக்கு குழி பறிப்பார்….
அது தன் பக்கம் பார்த்து இருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார்….
ஒன்னுமே செய்ய முடியாது!
ஒரு திட்டமில்லை,உதவியில்லை,ஜெயித்த 89 நாடாளுமன்ற எதிர்க்கட்சியாளர்கள் சத்தியம் செய்து பதவியில் சுகமா தூங்கி விழிகின்றனர். 40,000 ஆவி ஓலம் அது உப்பு சப்பற்ற “ரேபோர்மாசி”
எதிர்கட்சிகள் தேர்தல் மோசடி தொடர்பாக தொடுத்த எல்லா வழக்கும் செலவுடன் தள்ளுபடி செய்யப்பட்டு வழக்கு போட்ட வேட்டபாளர்கள் தலையில் கை வைத்து அபராதம் கட்ட பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எதிர்க்கட்சி தலைமையகம் “கேஸ்” விசியத்தில் பண உதவிக்கு முன் வரவில்லை . ஜெயித்த வை பி கள் நட்பு கூட அறுந்து நாதியற்ற நிலையில் தோற்ற வேட்டபாளர்கள் உப்பி ஊதிக்கொண்டு சமூக அரசியல் அரங்க விளிம்பில் கயிற்றில் தொங்கி “செத்தோம்” என்று கையை தூக்கி அடிப்பட்டு போனார்கள்.
இதுதான் அரசியலா? இதற்கு ஒரு கூட்டணியா?பெர்சேவா? சுத்தமிலாத தேர்தல் என்று எதிர்க்கட்சி முற்றாக புறக்கணித்து இருந்தால் இன்று மறுதேர்தல் வந்து இருக்கும். உருமாற்றத்துக்கும் மறுமலர்ச்சிக்கும் தெளிவு கிடைத்து இருக்கும்.
திசை தெரியாத இலக்கை வைத்து ” அரசியல் வெப்ப காற்றில்” மக்களை ஏவிவிட்டு சூடு காய்வது ரோட்டில் கோசம் எழுப்புவது மாற்று முத்தலைகளின் மந்திர விளம்பர விளையாட்டா போய்விட்டது.
இந்த முறை பாகாத்தான் தோற்றது தவறான மக்கள் விரும்பாத வேட்டபாளர்கள் பட்டியல் என்று எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் தேர்தல் சரியில்லை ஏமாற்று வேலை பணம் என்றெல்லாம் எதிர்க்கட்சி சாக்கு போக்கு கூறி தலைவன் செய்த மாபெரும் தவறான வேட்பாளர் தராதரம் மறைக்கப்பட்டு மக்களை மீண்டும் வீதிக்கு போக வேண்டாம் என்று மட்டும் ஒரு உசுப்பல் மாத்திரை தந்து இப்போ பட்ஜெட் ,,,ஜி எஸ் தி என்று கெடாவில் இடைதேர்தல் குழப்பல்.
உலக நாடுகளிலில் ஆளும் கட்சி எதிர்கட்சி களேபரங்கள் மக்களை கைக்குள் போடும் வித்தை கிடையாது. உண்மை என்ற முதிர்ச்சி இருக்கும். தேர்தலுக்கு பின் மக்கள் நலனில் ஒருமித்த போராட்டங்கள் இருக்கும் ( இந்தியாவை தவிர்த்து) அனால் நம்ப ஊரில் நமக்கு மயக்கமே வந்து தெருவில்,மேடை திடல்களில் வாந்தி எடுக்கும் நிலையில் அரசியல் அராஜகம்.
சத்து மலேசியா ஒரு பக்கம்,பெர்சே ஒருபக்கம் ,ஆவி வாக்குகள் ஒருபக்கம்,சி என் என் ஒரு பக்கம் .அல் ஹிஜெற மறுபக்கம், தெரியாமல் தான் கேக்கிறேன்… இன்னும் ஐந்தாண்டுகள் பிரதமருக்கு கடந்த தேர்தலுக்கு விளக்கம் சொல்வதுதான் வேலையா? “எதிர் கட்சி தலைவர் இப்போ “ரிகொன்சிலாசன்”செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு அரசியல் நாகரீகம் நடுநிலைக்கு போய் விட்டது. நம்ப தீரம் வீரமெல்லாம் அரசியல் பிரசாதம் ,கலைநிகழ்ச்சி முடிந்தப்பின் மிட்டாய் தின்ன பழைய பேப்பர் …… போலாம்.
இந்நாட்டில் எல்லா இனத்தையும் ஒன்றில் வைத்து திருத்த நமக்கு ஆயுசு போதாது ” அதுங்க அப்படிதான்”
நம்ப டத்தோ அம்மா இந்தியர்கள்/ தமிழர்கள் நலன் கருதி மட்டும்
உங்கள் காலத்தில் “அரசியல் உரிமைக்கு” 10 கட்சிகளின் இந்திய/ தமிழர் தலைவர் நண்டுகளின் பெரிய கொடுக்கை கழற்றி சமத்துவ பகிர்வு செய்து ஒரு ஐக்கிய பரிகாரம் செய்தால் கோடி புண்ணியம் உங்களை சேரும்.இந்த இனம் மட்டுமே உங்களை மனதில் வைக்கும் நல்ல சங்கமம்.உங்களால் மட்டுமே முடியும்.
40,000 ஆவி வாக்களர்கள் இருந்தது உண்மைதான் என்ற ஆதாரத்தை அம்பிகா காட்ட போகிறார்!!! நஜிப் அவ்வளோதான் இனிமேல்…lol
அம்பிகா, ஒவ்வொரு மலேசியர்களுக்காகவும் பேசுகிறார். அவரை ஏன் இந்தியர் தமிழர் என்னும் குறுகிய வட்டத்துக்குள் கொண்டு வருகிறீர்? நமக்குத் தான் சாமிவேலு அவருடைய பிள்ளையாண்டான், பழனிவேலு என்று ஏகப்பட்ட பேர் இருக்கிறார்களே! இவர்கள் செய்யாத தொண்டையா அம்பிகா செய்து விடப்போகிறார்!
I adore the efforts you have put in this, thank you for all you great articles.
அம்பிகா என்கிற சொல், அண்மைய காலங்களில் மலேசிய மக்களின் ஜீவ நாடிகளை உரசிப் பார்க்கின்றது. இனம் பார்க்காத சமயச் சகிப்புத் தன்மைகளை அலசிப் பார்க்கின்றது. அரசாசனம் பார்க்கும் அரசியல் பெரிசுகளுக்கும் சிம்மச் சொப்பனமாய் மிரட்டுகின்றது. அதை எல்லாம் தாண்டிய நிலையில், மக்கள் மனங்களில் ஒரு மந்திரக் கண்ணாடியாக, மாயஜாலங்களைக் காட்டும் ஒரு தந்திரக் கண்ணாடியாக விளங்கியும் வருகின்றது. அங்கே பல்வேறான பிரமிப்புகள். மலேசியத் தமிழர்கள் மட்டும் அல்ல. உலகத் தமிழர்களும் இவரைப் பற்றி தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
அவரிடம் பழகிப் பார்த்தால், உண்மை தெரியும். பிரிய மனசு வராது. அவரை ஓர் எதார்த்தமான அறிவு ஜீவி என்றும் சிலர் சொல்வார்கள். அவர் ஒரு கருத்தைச் சொல்கிறார் என்றால், அதற்குச் சரியான சான்றுகள் இருக்கும். அந்தச் சான்றுகளுக்குச் சரியான சாட்சிகளும் இருக்கும். சில சிக்கலான கருத்துகளுக்கு அரசு நீதிச் சட்டங்களை அடுக்கடுக்காய் வரிசைப் படுத்துவார். சும்மா சொல்லக்கூடாது. மலேசியாவில் ஏறக்குறைய 30 ஆயிரம் வழக்கறிஞர்களுக்குத் தலைவராக இருந்தவர். சட்டக் கலையை நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார்.
மலேசிய மக்கள் அடிக்கடி உச்சரித்து வரும் ஒரு மந்திரச் சொல். வான விதானத்தில் ஒளி விளக்காய்ச் சஞ்சரித்துப் பிரகாசிக்கும் ஒரு மாயச் சொல். மகிமை வாய்ந்த அந்தச் சொல்லில், விவேகமான சிந்தனைகள். விநோதமான ஆளுமைகள். சில சமயங்களில் இரண்டும் ஒன்றாய்க் கலந்து, ஆல விருச்சகங்களைப் போல ஆழமாய்ப் படர்ந்தும் போகின்றன. அவற்றில் உலகப் பெண்களின் உரிமைப் போராட்ட உணர்வுகள், விழிப்புணர்வுகளாய்த் தெரிய வருகின்றன. அந்த உணர்வுகளுக்குச் சொந்தக்காரார் அம்பிகா சீனிவாசன். மலேசியா கண்டெடுத்த மந்திரப் புன்னகை.
வாழ்த்துகிறோம் அம்பி!
தாய்லாந்து மாதிரி மக்கள் எதிர்ப்பு காணாமல் இருந்தால் நல்லது!!!!!