லிம் குவான் எங்: வேற்று நாடுகளுக்குக் குடியேறுமாறு ஸாஹிட் சொல்வது…

புதிய உள்துறை அமைச்சர் பொதுத் தேர்தல் குறித்து மகிழ்ச்சி அடையாதவர்கள் இன்னொரு நாட்டுக்குக் குடியேறலாம் என எல்லை மீறிப் பேசுவதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியிருக்கிறார். "இது தான் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி பயன்படுத்தும் தரம் என்றால் பினாங்கில் உள்ள பிஎன் ஆதரவாளர்களையும்…

‘சீனர் சுனாமி’ என்ற கருத்தை நெகிரி மந்திரி புசாரும் நிராகரிக்கிறார்

13வது பொதுத் தேர்தலில் பிஎன் அடைவு நிலை மோசமானதற்கு 'சீனர் சுனாமி' காரணம் என பிஎன் தலைவர்  நஜிப் அப்துல் ரசாக் கூறியதை நிராகரித்துள்ள அம்னோ தலைவர்களுடன் நெகிரி செம்பிலான் மந்திரி புசார்  முகமட் ஹசானும் சேர்ந்து கொண்டுள்ளார். அண்மைய தேர்தல் முடிவுகள் இளம் வாக்காளர்கள் பக்காத்தான் ராக்யாட்டுடன்…

எக்கானாமிஸ்ட் : நஜிப் வெற்றி ‘கறை படிந்தது’

13வது பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அடைந்துள்ள வெற்றி, போலியானது என்றும் அது பிஎன் -னுக்கு சாதகமான தேர்தல் நடைமுறைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது என்றும்  எக்கானாமிஸ்ட் என்னும் பிரபலமான அனைத்துலக வார சஞ்சிகை வருணித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த பல 'உள் அம்சங்கள்' ஆளும்…

தேர்தல் ‘மோசடிக்காக’ இசி தலைவர் பதவி விலக வேண்டும் என…

அண்மையில் முடிவடைந்த 13வது பொதுத் தேர்தலில் 'மோசடிகள்' நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது  தொடர்பில் தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் பதவி துறக்க  வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றைச் சமர்பிப்பதற்காக புத்ராஜெயாவில் உள்ள அந்த  ஆணையக் கட்டிடத்திற்கு முன்பு இளைஞர் அமைப்புக்கள் இன்று கூடின.…

நுசா ஜெயா வாக்குச் சீட்டுக்கள் மகோட்டாவுக்கான வாக்குப் பெட்டியில் காணப்பட்டன

நுசா ஜெயா சட்டமன்றத் தொகுதிக்கான நான்கு வாக்குச் சீட்டுக்கள் அந்தத் தொகுதியிலிருந்து முற்றிலும்  மாறுபட்ட தொகுதிக்கான வாக்குப் பெட்டியில் கண்டு பிடிக்கப்பட்டது மீது போலீசில் புகார்  செய்யப்பட்டுள்ளது. மே 5ம் தேதி முன் கூட்டியே செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்ட போது மகோட்டா சட்டமன்றத்  தொகுதியில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கையில்…

முன்கூட்டிய வாக்குகளைக் கொண்டிருந்த பெட்டிகள் முறையாக பாதுகாக்கப்பட்டனவா?

முன்கூட்டி அளிக்கப்பட்ட  வாக்குகளையும் அஞ்சல் வாக்குகளையும் கொண்ட பெட்டிகள்,  அழியா மையுடனும் வாக்களிப்பு நாளில் பயன்படுத்தப்படுவதகான வாக்குச் சீட்டுகளுடனும் போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தபோது பாதுகாப்பையும் மீறி எதுவும் நடந்திருக்கலாம் என  ஐயுறுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் புஸியா சாலே. தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப், வேட்பாளர்களின் பிரதிநிதிகள்…

பார்வையாளர்கள்: பொதுத் தேர்தலில் ஓரளவு சுதந்திரம் இருந்தது ஆனால், நியாயமாக…

13வது பொதுத் தேர்தலில் பார்வையாளர்களாக அங்கீகரிப்பட்ட சிந்தனைக் குழுக்களான CPPS / Asli and Ideas ஆகியவை வெளியிட்டிருக்கும் இடைக்கால அறிக்கை, ‘தேர்தலில் ஓரளவுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், நியாயமாக நடத்தப்படவில்லை’ எனக் கூறியுள்ளது. “எங்கள் மதிப்பீட்டு அளவு அனைத்துலக நாடாளுமன்ற சங்க(ஐபியு)ப் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டது. “மலேசியா…

ஐபிஎப் தேர்தல் விளம்பரம், நம்மை அழ வைக்கிறது!

விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின்  மகன் பாலச்சந்திரன் படத்துடன் “ இந்நிலை யாருக்கும் வேண்டாம்” என்ற தலைப்புடன் ஐபிஎப் கட்சி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரம் பலரின் மனதை நோகடித்துள்ளது. இந்த விளம்பரத்தை மு.வீ. மதியழகன் செய்துள்ளதாகத் தெரிகிறது. அந்த நிலை யாருக்கும் வரக் கூடாதுதான். ஆனால் இந்த…

முறைகேடான தேர்தலுக்கு எதிராக முகநூலில் அணிசேரும் இளைய சமுதாயம்

முறைகேடான முறையில் 13-வது பொதுத் தேர்தல் நடந்துள்ளதாக கூறி மலேசியர்கள் குறிப்பாக இளைஞர்கள் பலர் முகநூல் (Facebook) வழி தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர். அவர்கள் பொதுத்தேர்தல் முடிவுகளை புறக்கணிக்கும் வண்ணம் முகநூலில் தங்களது சுயவிபர படங்களையும் (Profile Pictures) கருப்பு நிறத்தில் மாற்றியுள்ளனர். இதனால் முகநூல் எங்கும்…

13வது பொதுத் தேர்தல் : தற்போதைய அதிகாரப்பூர்வமற்ற நிலவரம்

இரவு மணி 2.30: நாடாளுமன்ற இருக்கைகள் பாரிசான் 129, பக்கத்தான் 80. பேராக் மற்றும் திரங்கானு மாநிலங்கள் இரவு மணி 2.03: மிகக் குறைவான பெரும்பான்மையில் பாரிசான் பேராக்  மாநில ஆட்சியை தொடரும் (பிஎன் 31, பக்கத்தான் 28).  திரங்கானு மாநிலத்தில் அதற்கு  இரண்டு பக்கத்தானைவிட இரு கூடுதல் இருக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளன (பிஎன் 17, பக்கத்தான் 15).  மஇகா வேட்பாளர்கள்…

லெம்பா பந்தாய் வாக்காளர்களுக்கு பிஎன் பணம் கொடுத்ததாக புகார்

நாட்டின் போட்டிமிகுந்த நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான லெம்பா பந்தாயில், பிஎன், வாக்குகளுக்கு ரொக்கப் பணம் கொடுத்ததாக நேரில் கண்டவர்கள் புகார் செய்துள்ளனர். ஸ்ரீபந்தாய் ஸ்கோலா ரெண்டா அகாமாவிலும் எஸ்கே பங்சாரிலும் அவ்வாறு நடந்ததாக அத்தொகுதிக்கான நடப்பு எம்பி நுருல் இஸ்ஸாவின் உதவியாளர் பாஃமி பாஃட்சில் (வலம்)  தெரிவித்தார். 20திலிருந்து…

தேர்தலில் 80 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்

13வது பொதுத் தேர்தலில் மொத்தம் உள்ள 12,992,661 வாக்காளர்களில் 80 விழுக்காட்டினர்  வாக்களித்துள்ளனர் அந்தத் தகவலை தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிட்டது. மலேசிய வரலாற்றில் இவ்வளவு அதிகமான விழுக்காட்டினர் வாக்களித்துள்ளது இதுவே முதன் முறையாகும். 1964ம் ஆண்டு 78.9 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதுடன் ஒப்பிடுகையில் 13வது தேர்தலில் வாக்களித்தவர்…

‘சந்தேகத்துக்குரிய வாக்காளர் வாக்களித்த பின்னர் பணம் கோரினார்’

வாக்களித்த பின்னர் தங்கள் சாவடியில் பணம் கேட்ட சபாவைச் சேர்ந்த சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவரை சிலாங்கூர் பண்டானில் உள்ள பக்காத்தான் ராக்யாட் தேர்தல் ஊழியர்கள் விசாரித்துள்ளனர். Taski Abim Taman Mawar வாக்குச் சாவடிக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பிகேஆர் சாவடியில் பிற்பகல் ஒரு மணி வாக்கில் மஸ்லான் சுல்கிப்லி…

தேர்தல் ஆணையம் : வாக்காளர் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாருமில்லை

வாக்குச் சாவடிகளில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் காணப்பட்டதாக புகார்கள் கொடுக்கப்பட்ட போதும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைக் கொண்ட அனைவரும் குடிமக்கள் என்றும் அதனால் அவர்கள் சட்டபூர்வ வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் (இசி) வலியுறுத்துகிறார். "எங்கள் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாரும் இல்லை. நாங்கள் எங்கள் வாக்காளர்…

‘வாக்களிக்கும் என் உரிமையை யாரோ திருடி விட்டார்கள்’

கூலாயிலும் கிள்ளானிலும் பல வாக்காளர்கள் தங்கள் பெயரில் யாரோ ஒருவர் வாக்களித்து விட்டதால் தாங்கள் வாக்களிக்க முடியாமல் போய் விட்டதாக கூறிக் கொண்டுள்ளனர். அவர்கள் இசி என்ற தேர்தல் ஆணையத்தில் புகார் செய்கின்றனர். கூலாயில் வாக்களிப்பதற்காக காலை 10 மணிக்கு SJK(C) Batu வாக்குச் சாவடிக்கு 42 வயதான…

பண்டானில் சந்தேகத்துக்குரிய வாக்காளரை பிகேஆர் முறியடித்தது

சிலாங்கூர் பண்டானில் பிகேஆர் தேர்தல் ஏஜண்டுகள் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார். அந்தத் தகவலை பிகேஆர் பண்டான் வேட்பாளர் ராபிஸி இஸ்மாயில் வெளியிட்டார். சியோக் லியிங் இயூ என்ற பண்டான் வாக்காளர் ஒருவர்,  பதிவு செய்யப்பட்ட தமது முகவரியில் சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவர் இருப்பதாக…

சிலாங்கூரில் பிற்பகல் ஒரு மணி வரையில் 58.95 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்

சிலாங்கூரில் பிற்பகல் ஒரு மணி வரையில் 1.2 மில்லியன் அல்லது 58.95 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அந்த விவரத்தை இசி என்ற தேர்தல் ஆணையம் பெர்னாமாவிடம் தெரிவித்தது. நெகிரி செம்பிலானில் பிற்பகல் ஒரு மணி வரையில் மொத்தமுள்ள 555,982 வாக்காளர்களில் 58.35 விழுக்காட்டினர் வாக்களித்து விட்டனர்.…

புல்லைக் கொண்டு கூட அழியா மையை நீக்கி விட முடியும்!

13வது பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை உண்மையில் அழிக்க முடியாது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்த போதிலும் நாடு முழுவதும் வாக்காளர்கள் அதனை எளிதாக அகற்றியுள்ளனர். சிலர் புல்லைப் பயன்படுத்திக் கூட அந்த மையை அழித்துள்ளனர். சபா பெனாம்பாங்கில் வாக்குச் சாவடிகளிலிருந்து வெளியில் வந்த வாக்காளர்கள்…

13வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது

புதிய அரசாங்கத்தை தேர்வு செய்ய 13வது பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. 15 நாள் பிரச்சாரக் காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. எல்லா வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தேர்தல் நாட்டு வரலாற்றில் மிக நெருக்கமான போட்டியாக இருக்கும்…

‘சந்தேகத்துக்குரிய வாக்காளர்களைக் பொதுமக்கள் கைது செய்வர்’

நாளைய வாக்களிப்பில் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்களிப்பு மோசடியில் ஈடுபடுவதாகச்  சந்தேகிக்கப்படும் நபர்களைப்  பொதுமக்கள் கைது செய்வர். இது குடியாளர்-கைது (citizen’s arrest) எனப்படும். இதனைத் தெரிவித்த அத்தொகுதி நடப்பு எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, கிள்ளான் வாக்காளர் பட்டியலில் 2,000 சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாக தாமும் தம் குழுவினரும்…

‘பிஎன் சிலாங்கூரைக் கைப்பற்ற முதலில் சிறு வெற்றிபெற்ற இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள…

தேர்தல் கண்ணோட்டம் - சிலாங்கூர் : பாரிசான் நேசனல் அடிக்கடி நாட்டின் பணக்கார மாநிலமான சிலாங்கூரைக் கைப்பற்றப்போவதாக் கூறிக்கொள்வதைக் கேட்கிறோம். அதற்கு பிஎன் பக்காத்தான் ரக்யாட் வசமுள்ள சில இடங்களைப் பிடிக்க வேண்டும். ஆனால், அதற்குமுன் அது கடந்த பொதுத் தேர்தலில் சிறுவெற்றிபெற்ற குறைந்தது ஒன்பது இடங்களைத் தக்க…

சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் கொண்டு வரப்படுவதை பெர்சே சாடுகின்றது

சந்தேகத்துக்குரிய ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் விமானத்தில் கொண்டு வரப்பட்டு கடுமையான போட்டி  நிகழும் மாநிலங்களுக்கும் தொகுதிகளுக்கும் கொண்டு செல்லும் முயற்சிகளை பெர்சே கண்டித்துள்ளது. அந்த முயற்சிகள் மலேசியா முழுவதும் உள்ள உண்மையான வாக்காளர்களுடைய விருப்பங்களை  அப்பட்டமாக மீறுவதாகும் என அது நேற்று பின்னேரம் விடுத்த அறிக்கையில் வருணித்தது. "வாக்களிப்பு தினத்துக்கு…

பினாங்கு பக்காத்தான் பேரணியில் 100,000 கூடினர்

பினாங்கு பக்காத்தான் ராக்யாட் நேற்று பல கூட்டங்களை நடத்தியது. அவற்றுள் எஸ்பிளனேட்டில் நடைபெற்ற  மாபெரும் பேரணியும் அடங்கும். நள்ளிரவு வரை நீடித்த அந்தப் பேரணியில் 100,000க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர். பினாங்குத் தீவில் பக்காத்தான் கூட்டணி நடத்தியுள்ள பெரிய பேரணி இதுவாகும். அங்கு  ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடையாக 505,000 ரிங்கிட்…