இசி மை கோளாறு திட்டமிடப்பட்ட சதி என்கிறார் பிகேஆர் உதவித்…

சில மணி நேரத்துக்கு மேல் தாங்காத அழியா மையை வழங்கியுள்ள இசி-யின் குளறுபடி, தேர்தல் ஆணைய (இசி) தலைவர் நன்கு திட்டமிட்ட சதியாக இருக்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா  இன்று கூறியுள்ளார். "அந்த விவகாரம் முழுவதும் நன்கு திட்டமிடப்பட்ட வேலை என நான்…

வட ஜோகூரில் பரப்புரையைத் தொடக்கினார் கிட் சியாங்

தென் ஜோகூரில் பரப்புரை செய்து வந்த டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், தேர்தல் பரப்புரைக் காலம் இறுதிக் கட்டத்தை நெருங்குவதைத் தொடர்ந்து வட ஜோகூரில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளார். லிம், இன்று லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் பரப்புரையைச் செய்தார். அங்கிருந்து தங்காக், மூவார் ஆகிய…

பக்காத்தான் ராக்யாட்டுக்கான ஆதரவு 53 விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது!

தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் வேளையில் பக்காத்தானுக்கும் பிஎன்-னுக்கும் தலா 110  நாடாளுமன்ற இடங்கள் கிடைக்கும் என உள்வட்டாரம் ஒன்றை மேற்கோள்காட்டி பக்காத்தான் ராக்யாட் தெரிவித்துள்ளது. "பிஎன் வாக்குகளை வாங்கும் இறுதிக் கட்டத்தில் இறங்கியுள்ளதுடன் அந்நியத் தொழிலாளர்களையும் அமர்த்தியுள்ளதுடன் அழியக் கூடிய மையையும் பயன்படுத்துகின்றது," என டிஏபி…

அழியா மையை…. அழிக்க முடியும்!

மலேசியாவில் முதன் முறையாக 'அழியா' மை பயன்படுத்தப்பட்ட சில மணி நேரத்தில் அந்த மையை அகற்ற முடியும் என்ற உண்மை வெளியாகியுள்ளது. அந்த நிலைமை, பிரஷ் ஒன்றைக் கொண்டு தடவப்படும் விரலில் அந்த மையின் கறை குறைந்தது ஆறு  நாட்களுக்கு இருக்கும் என தேர்தல் ஆணையம் (இசி) அளித்துள்ள…

செம்பருத்தி இணையத்தளம் தாக்கப்பட்டது!

மலேசியகினியுடன் இணைந்து நேரடி செய்தி ஊடகமாக பங்காற்றி வரும் செம்பருத்தி.காம் மீது கடந்த சில நாட்களாக இணைய தாக்குதல் (Cyber attack) மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த 28-ஆம் தேதி மாலை விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலில் எமது இணையத்தளம் காலை மணி 10.41 தொடக்கம் மாலை மணி 6.27 வரை…

பக்கத்தான் 124 நாடாளுமன்ற இருக்கைகளைக் கைப்பற்றும்!

-என். எல். ரசல், ஏப்ரல் 29, 2013. மே 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாட்டின் 13 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் மக்கள் கூட்டணி 124 நாடாளுமன்ற இருக்கைகளைக் கைப்பற்றும் என்று எண்கணிப்பாளர் கூறுகிறார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாளே, ஏப்ரல் 3, 2013,  எண்கணிப்பு நோக்கின்படி எதிர்மறையானதாகக்…

Umcedel : ஒரு காலத்தில் எங்கள் கருத்துக்கணிப்பை பிரதமர் மிகவும்…

தங்களின் ஆகக் கடைசி கருத்துக்கணிப்பைப் பிஎன் தலைவர் நஜிப் நிராகரித்திருப்பது பற்றிக் கருத்துரைத்த மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக, தேர்தல் ஆய்வு மையம் (யுஎம்சிடெல்) ஒரு காலத்தில் அவர் தங்கள் ஆய்வு முடிவுகளைக் கண்டு மனம் மகிழ்வார் என்று குறிப்பிட்டது. “முன்பு நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றி அவர் தெரிவித்த…

செம்பருத்தியின் ‘கொலைவெறி’ தேர்தல் காணொளிக்கு அமோக வரவேற்பு

13-வது பொதுத்தேர்தலுக்காக செம்பருத்தி இணையத்தளம் மாற்றியமைத்த 'சேஞ் திஸ் கவர்மெண்டு கவர்மெண்டுலா' என்ற கொலைவெறி பாணியிலான பாடல் காணொளி செம்பருத்தியில் பதிவேற்றம் கண்ட முதல் நான்கு நாட்களில் சுமார் 70,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மக்கள் உண்மையிலேயே தேசிய முன்னணியின்மீது கொலைவெறியில்தான் இருக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது. இணைய ஊடகம்…

அரசியல் வன்முறைகள் மீதான புலனாய்வை விரைவுபடுத்துங்கள் என அன்வார் போலீசாருக்கு…

அண்மைய அரசியல் வன்முறைகள் சம்பந்தப்பட்ட புலனாய்வுகளை தொழில் ரீதியாக மேற்கொண்டு விரைவாக  தீர்வு காணுமாறு போலீசாரை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். "அந்த வன்முறைகளுக்கு யார் பொறுப்பு என்பதை போலீசார் வேகமாகக் கண்டு பிடித்து மக்களுக்குத்  தெரிவிக்க வேண்டும்," என அன்வார் இன்று பெட்டாலிங் ஜெயாவில்…

நஜிப்: ஜோகூரை பிஎன் இழந்தால் பெரும் திட்டங்கள் காணாமல் போய்விடும்

பக்காத்தான் ரக்யாட் ஜோகூரைக் கைப்பற்றினால், மாநில அரசின் ‘ஜோகூர்பாணி’யும் “பெரும் திட்டங்களும்” காணாமல் போய்விடும் என்று பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். ஜோகூர் பிஎன் தலைவர்கள் வாக்காளர் ஆதரவைப் பெற அடிக்கடி பயன்படுத்தும் ‘ஜோகூர்பாணி’ என்பதன் பொருள் பற்றிய வினவியதற்கு விளக்கமளித்தபோது நஜிப் இவ்வாறு கூறினார்.…

பிகேஆர் வேட்பாளருடைய புதல்வியின் கார் எரியூட்டப்பட்டது

பிகேஆர் வேட்பாளர் டாக்டர் சேவியர் ஜெயகுமாருடைய புதல்விக்குச் சொந்தமான இரண்டு கார்கள் மீது  கும்பல் ஒன்று நேற்றிரவு மண்ணெண்ணெய் கொள்கலங்களை வீசியது. அதனால் அந்தக் கார்கள்  சேதமடைந்தன. நேற்று கிள்ளான் தாமான் கொளாங் ஜெயாவில் உள்ள அவரது வீட்டில் இரவு மணி 11  வாக்கில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.…

பிகேஆர்: வாக்குப் பெட்டிகளைக் கொண்டு வந்த வாகனம் ஒன்று வேறு…

புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்துக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு சென்ற  வாகனம் ஒன்று 'ரகசிய' இடம் ஒன்றுக்கு மாற்றி விடப்பட்டதாக தான் கூறிக் கொண்டுள்ளது மீது பிகேஆர்  கேள்வி எழுப்பியுள்ளது. "வாக்குப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு புத்ராஜெயாவில் உள்ள இசி தலைமையகத்துக்கு சென்ற ஒரு  வாகனத்தை இசி-யின்…

கோட்டா ராஜா வேட்பாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள்!

கோட்டா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் ஒரு சுயேச்சையாகக் களமிறங்குவதால் ஒரு காலத்தில் தன் கோட்டையாக விளங்கிய அத்தொகுதியைத் திரும்பக் கைப்பற்ற முழுமூச்சான முயற்சியில் இறங்கியுள்ள மஇகாவுக்கு ஒரு சிக்கல். இப்போது அங்கு வெற்றிபெற அத்தொகுதி  இந்தியர்களை மட்டும் அது நம்பி இருக்க இயலாது. இந்தியர்-அல்லாத…

13வது பொதுத் தேர்தல் வேட்பாளர்களில் பத்துக்கு ஒருவரே பெண்கள்

மே 5 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பத்துக்கு ஒருவரே பெண்கள். அந்த விகிதம் முடிவு  எடுக்கும் நிலைகளில் குறைந்தது 30 விழுக்காட்டினர் பெண்களாக இருக்க வேண்டும் என்ற அனைத்துலக  இலக்கை விட மிகவும் குறைவாகும். டிஏபி தனது மொத்தம் 153 வேட்பாளர்களில் 22 பெண்களை (14.4 விழுக்காடு)…

வேட்பாளர் நியமன மையத்தில் அன்வார் கேலி செய்யப்பட்டார்

1982ம் ஆண்டு தொடக்கம் தமது சொந்த மாநிலத்தில் போட்டியிடும் பெர்மாத்தாங் பாவ் வேட்பாளர் அன்வார்  இப்ராஹிமை வேட்பாளர் நியமன மையத்துக்கு வெளியில் பிஎன் ஆதரவாளர்கள் இன்று அவமானப்படுத்தியுள்ளனர். பெராபிட்டில் உள்ள Institut Kemahiran Belia Negara-வில் தேர்தல் அதிகாரி யூஸ்னி இஸ்மாயில் அன்வார்  பெயரையும் அவரது கட்சி பெயரையும்…

தீ கியாட்: என் முன்னாள் உதவியாளருக்கு நான் பிரச்சாரம் செய்ய…

பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நிற்கும் தமது முன்னாள் உதவியாளட் அலன்  தான் -க்குத் தாம் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என நடப்பு பண்டான் எம்பி ஒங் தீ கியாட் கூறுகிறார். "அவர் சுயேச்சை வேட்பாளர். நான் பிஎன்-னில் இருக்கிறேன்," என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.…

13வது பொதுத் தேர்தலில் பல இடங்களில் பல்முனைப் போட்டி

வரப்போகும் 13வது பொதுத் தேர்தலில் பல்முனை போட்டிக்குப் பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது. பல இடங்களில்  நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் போட்டிபோட பல வேட்பாளர்கள் வரிந்துகட்டிக்கொண்டு இறங்கியிருக்கிறார்கள். பல்முனைப் போட்டி நிகழும் சில இடங்களைப் பார்ப்போம்: ஜோகூர் கேலாங் பாத்தா(நாடாளுமன்ற) இருபெரும் அரசியல் ஜாம்பவான்களான ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி…

பாசிர் மாஸ் தொகுதியில் பிஎன் பின் வாங்கியது, நேரடிப் போட்டியில்…

பாசிர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான பிஎன் வேட்பாளர் தமது வேட்பு மனுவைச் சமர்பிக்கவில்லை.  அதனால் அந்தத் தொகுதிக்கான நடப்பு உறுப்பினர் இப்ராஹிம் அலிக்கும் நிக் அப்டு நிக் அப்துல்  அஜிஸுக்கும் இடையில் நேரடிப் போட்டி நிகழும். பிஎன் சார்பில் நிறுத்தப்படுவதற்கு இப்ராஹிம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆனால்…

‘பாத்திமா இஸ்மாயில்’ என்ற பெயரில் 900 வாக்காளர்கள்

கெடா, கிளந்தான், பாகாங், திரங்கானு ஆகியவற்றில் ஒரே பெயரைக் கொண்ட வாக்காளர்கள் பொருத்தமற்ற  முறையில் அதிகமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். அவர்களில் 'பாத்திமா இஸ்மாயில்' என்ற பெயரைக்  கொண்ட 900 வாக்காளர்களும் அடங்குவர். அதில் 14 'பாத்திமா இஸ்மாயில்கள்' ஒரே பிறந்த தேதியைக் கொண்டுள்ளனர். அவர்களில் பத்துப் பேருக்கு ஒரே…

ஈசா ஜெம்போலில் ஒரு பாடகருடன் மோதுகிறார், ரயிஸ் போட்டியிடவில்லை

நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஈசா சமட்,  ஜெம்போல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார்.  அவரை எதிர்ப்பவர் பாஸ் வேட்பாளர் அயிஷா வான் அரிப்பின். இவர், 1990 ஆம் ஆண்டுகளின் பிரபலமான பாடகராவார். இதனிடையே, தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் தேர்தலில் போட்டியிட மாட்டார்.…

ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் கிறிஸ்துவர்கள் அதிருப்தி

தேர்தல் ஆணையம் மே 5 ஞாயிற்றுக்கிழமை வாக்களிப்பை வைத்திருப்பதை கண்டித்த சரவாக் கிறிஸ்துவர்கள், தேர்தல் ஆணையம் தங்களைக் கவனத்தில் கொள்ளவில்லைபோல் தெரிகிறது என்று குறைபட்டுக்கொண்டனர். மலேசியா பல இனங்களையும் சமயங்களையும் கொண்ட நாடு என்பதையும் இங்கு மக்கள்தொகையில் சுமார் 10 விழுக்காட்டினர் கிறிஸ்துவர்கள் என்பதையும் ஆணையம் மறந்ததுபோலும் என்றவர்கள்…

பரப்புரைக்கு 15 நாள்கள் போதுமானதல்ல என்கிறார் லிம் குவான் எங்

1982-க்குப் பின்னர் பரப்புரைக்கென்று  நீண்ட காலம் -15 நாள்கள்- இப்போதுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது  என்றாலும் அது போதுமானதல்ல என்கிறார் பினாங்கு பராமரிப்பு அரசின் முதலமைச்சர் லிம் குவான் எங். “15 நாள்கள்தான் என்பதை எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது.  பெர்சே-இன் கோரிக்கைக்கு ஏற்ப 21 நாள்களாவது ஒதுக்கப்படும் என்றிருந்தோம்”, என்றவர் செய்தியாளர்…

13வது பொதுத் தேர்தல்: ஏப்ரல் 20-ல் வேட்பாளர் நியமனம், மே…

மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 13வது பொதுத் தேர்தல் மே 5ம் தேதி நிகழும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 20ம் தேதி வேட்பாளர் நியமன நாளாகும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட ஒரு வாரத்தில் புத்ரா ஜெயாவில் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம்  நடைபெற்ற பின்னர் அந்தத் தேதிகளை ஆணையத்…