புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்துக்கு வாக்குப் பெட்டிகளைக் கொண்டு சென்ற வாகனம் ஒன்று ‘ரகசிய’ இடம் ஒன்றுக்கு மாற்றி விடப்பட்டதாக தான் கூறிக் கொண்டுள்ளது மீது பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது.
“வாக்குப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டு புத்ராஜெயாவில் உள்ள இசி தலைமையகத்துக்கு சென்ற ஒரு வாகனத்தை இசி-யின் பாஜாரோ (four wheeled drive) நெடுஞ்சாலையிலிருந்து வெளியாகும் பாதையில் நிறுத்தியது. பின்னர் அந்த வாகனத்தை காஜாங்கில் சுங்கை சுவா தொழிலியல் பேட்டையில் உள்ள எஸ்சி 2 சாலையில் உள்ள ஒர் ரகசிய முகவரிக்கு திருப்பி விட்டது,” என பிகேஆர் மூத்த தலைவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.
அந்த ரகசிய இடத்தில் வாக்குப் பெட்டிகள் இருப்பதாக நம்பப்படும் இசி சின்னத்தைக் கொண்ட பெரிய
பாலிஸ்டர் பைகள் இறக்கப்பட்டன என்றும் அன்வார் கூறிக் கொண்டார்.
“அது குறித்து உடனடியாக விளக்கம் தேவை. சந்தேகம் எழக் கூடிய வகையில் அதனை ஏன் செய்ய
வேண்டும்,” என அன்வார் வினவினார்.
பின்னர் அவர் பெரிய பாலிஸ்டர் பைகளின் படங்களை ஊடகங்களுக்குக் காண்பித்தார். ஆனால் அவற்றின் பிரதிகளை விநியோகம் செய்யவில்லை. அந்தச் சம்பவம் பற்றி தகவல் கொடுத்தவருடைய அடையாளம் தெரிந்து விடும் என்பதால் தாம் பிரதிகளைக் கொடுக்கவில்லை என அன்வார் காரணம் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் அந்நியர்கள் வாக்காளர்களாக இருக்கும் பிரச்னையை அன்வார் தொடர்ந்து எழுப்பினார்.
அந்தப் பிரச்னை சபாவில் மட்டும் நிலவவில்லை. பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து கைப்பற்றப் போவதாக
பிஎன் சூளுரைத்துள்ள தொழிலியல் மாநிலமான சிலாங்கூரிலும் காணப்படுவதாக அவர் சொன்னார்.
கோம்பாக், அம்பாங் நாடாளுமன்றத் தொகுதிகளில் 4,324 அந்நிய வாக்காளர்கள் இருப்பதாகவும் அன்வார்
கூறிக் கொண்டார்.
சபாவைப் பொறுத்த வரையில் சிலாம், கலாபாக்கான், சிபங்கார், தாவாவ், புத்தான் நாடாளுமன்றத் தொகுதிகளில் 15,907 அந்நியர்கள் வாக்காளர்களாக உள்ளனர் என்றும் அவர் சொன்னார்.
வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்த குழு ஒன்றிடமிருந்து அந்தப் புள்ளி விவரங்கள் கிடைத்ததாக அன்வார் விளக்கினார்.
அந்த அந்நியர்களில் பெரும்பாலோர் பிலிப்பின்ஸ், பாகிஸ்தான், இந்தோனிசியா, வங்காள தேசம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என்றும் அத்துடன் 16,589 பேர் சபாவில் பிறந்த வாக்காளர்கள் என்ற குறியீட்டுடன் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறிக் கொண்டார்.
அவர்களில் 42 பேர் போலீஸ், இராணுவ அதிகாரிகள் என்ற முறையில் அஞ்சல் வாக்காளர்களாக பதிவு
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இசி வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தி சந்தேகத்துக்குரிய அத்தகைய வாக்காளர்களை நீக்க வேண்டும்
என்றும் அன்வார் கேட்டுக் கொண்டார்.
BN அவர்களுடைய கேவலபட்ட வேலைகளை செய்ய ஆரம்பித்து விட் டார்களே …!!!!
நீங்கள் எவ்வளவு வேகமாகக் கத்தி, எத்தனை நியாயமான கேள்விகள் கேட்டாலும் இந்தக் களவாணி கும்பல் எந்த நேர்மையான பதிலும் கொடுக்காது….., வழமைபோல்..! bn-க்கு ஆதரவான குள்ளமாரி வேலையே இந்த அடிவருடிகளின் நிரந்தர வேலை.
இந்த கேடு கேட்ட தனமான வேலைகள செய்வது எல்லாம் இந்த bn திருடன்களுக்குதான் தெரியும்……வெற்றி bn னுக்கே…..
ஏன் தேர்தல் என்று ஒன்றை வைத்து நேரத்தை வீனாக்குகிரங்க…… அதன் முடிவு எப்படி இருக்கும்னு எல்லாருக்கும் தெரியுமே…….
இந்த நாட்டிலும் தேர்தல் பிரச்சாரங்கள் வன்முறைகள் இந்தியாவில் நடப்பது போலவே உள்ளதே .வாக்கு பெட்டிகளை திருடுவதை தமிழ் படத்தில் பார்த்திருகின்றேன் .