பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அழியா மை தொடர்பில் ராபிஸி மீது இசி வழக்குப் போடலாம்
13வது பொதுத் தேர்தலுக்கான அழியா மை விநியோகிப்பாளர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மீது பாண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயிலுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி தேர்தல் ஆணையம் இன்னும் சிந்தித்து வருகிறது. "நோன்பு மாதத்தில் அவர் என்ன சொன்னாலும் சொல்லட்டும். அவர் விளைவுகளை எதிர்நோக்குவார்." அந்த அழியா மையை விநியோகம்…
இடைத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்படுமா? அடுத்த வாரம் தெரியும்
கோலா பெசூட் இடைத் தேர்தலில் சர்ச்சைக்குரிய அழியா மையைப் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம்(இசி) இன்னும் முடிவு செய்யவில்லை. “அடுத்த வாரம் முடிவு செய்யப்படலாம்”, என இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது. பிஎன்னின் டாக்டர் ஏ.ரஹ்மான் மொக்தார் காலமானதை அடுத்து …
இசி-இல் ‘எதிரணி ஆதரவாளர்கள்’
தேர்தல் ஆணையத்தில் (இசி) மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவானவர்கள் உண்டு என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர். “எனது தொகுதியான புத்ரா ஜெயாவில், பல புதிய வாக்காளர்கள் இருந்தனர். அவர்கள் ஹுசாம் மூசாவுக்கு (பக்காத்தான் வேட்பாளர்) வாக்களிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவர்கள். கேலாங் பாத்தாவிலும் அப்படித்தான் -வேண்டுமானால் (லிம்)…
வான் அஹ்மட்டின் குறைகூறல் அவர் பிஎன்-ஆதரவாளர் என்பதைக் காண்பிக்கிறது
தேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர் மாற்றரசுக் கட்சி எம்பிகள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வதை வைத்து அவர்களைக் கபடதாரிகள் என்று வருணித்திருப்பதே அவர் பிஎன் ஆதரவாளர் என்பதைக் காண்பிக்கிறது என பிகேஆர் இளைஞர் பகுதி கூறியுள்ளது. இசி நடுநிலையாக செயல்பட வேண்டும். வான் அஹ்மட்டின் பேச்சு அவர் இசி-இல் இருக்கத்…
‘இசி விலகும் வரை பேரணிகள் ஒயாது’
தேர்தல் ஆணைய நடப்புத் தலைமைத்துவம் விலகும் வரையில் பக்காத்தான் ராக்யாட்டின் '505 கறுப்பு தின' பேரணிகள் தொடரும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறுகிறார். மே 5 பொதுத் தேர்தலுக்கு அந்தப் பேரணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. "மக்கள் விருப்பத்துக்கு எதிராக இசி போக…
‘தேர்தல் ஆணையத்தை நாடாளுமன்றத்தின் கீழ் வைப்பது தேசத் துரோகமல்ல’
நாடாளுமன்றத்தின் கீழ் இசி என்ற தேர்தல் ஆணையத்தை வைப்பதில் தேசத் துரோக அம்சம் ஏதும் சம்பந்தப்படவில்லை என ஜனநாயகம், தேர்தல் நேர்மை மீதான தேசியக் கழகத்தின் தலைவர் கே ஷான் கூறுகிறார். இசி-யை மேற்பார்வை செய்யும் எந்த நாடாளுமன்றத் தேர்வுக் குழுவும் அந்த ஆணையம் மீதான யாங் டி…
இசி தலைமை பதவி விலகாது: அப்துல் அசீஸ் திட்டவட்டம்
தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், 13வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மனநிறைவு அடையாதவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள் என்பதற்காக இசி தலைமை பதவி விலகாது எனக் கூறுகிறார். இசி தலைமை என்பது தம்மையும் துணைத் தலைவரையும் ஐந்து உறுப்பினர்களையும் உள்ளடக்கியது. தாங்கள் அனைவருமே கூட்டரசு அரசமைப்புப்படியும்…
டிஏபி, இசி பாரங்களில் வெவ்வேறான வாக்கு எண்ணிக்கைகள்
பேராக் ஜெலாபாங் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு வழிகளில் ஒன்றுக்கு வெவ்வேறான தேர்தல் முடிவுகளைக் காட்டும் ஆவணங்களை டிஏபி-யும் இசி என்ற தேர்தல் ஆணையமும் பெற்றுள்ளன. அந்தத் தகவலை பேராக் டிஏபி பிரச்சாரத் தலைவர் வோங் கா வோ வெளியிட்டார். SRJK (C) Lahat-ல் 3வது வாக்களிப்பு வழிக்கான டிஏபி-யின்…
‘தொகுதி எல்லை நிர்ணயத்தால் உண்மையில் பாதிக்கப்பட்டது மலாய்க்காரர்களே’
தேர்தல் தொகுதிகள் முறைகேடாக நிர்ணயம் செய்யப்பட்டதால் மலாய்க்காரார்களே உண்மையில் Read More
இசி: நாங்கள் அழியாமை குறித்து அமைச்சுடன் கலந்தாய்வு செய்தோம்
மே 5 பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியாமையின் பாதுகாப்பு பற்றி தாம் சுகாதார அமைச்சுடன் ஆலோசனை நடத்தியதாக இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் வலியுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சு அத்தகைய அறிக்கை எதனையும் கொடுக்கவில்லை என அதன் அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம்…
‘வாக்குச் சீட்டு வாங்கப்பட்டதாகக் கூறப்படுவதை EC நிராகரிக்க முடியாது’
பிஎன் வேட்பாளர் ஒருவர் வாக்குச் சீட்டுக்களை வாங்கியதாக கூறிக் கொண்டு இசி என்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் போலீசில் செய்துள்ள புகாருக்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தேர்தல் ஆணையம் சொல்லிக் கொள்ள முடியாது என பிகேஆர் பண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் கூறியிருக்கிறார். தனது தோற்றத்தையும்…
‘இசி அதிகாரிகளின் வாக்குச் சீட்டுகள் ரிம100 விலைக்கு பிஎன்னுக்கு விற்கப்பட்டன’
ஒரு பிஎன் சட்டமன்ற வேட்பாளர், தேர்தலில் பிஎன்னின் வெற்றிக்காக தேர்தல் ஆணைய (இசி) அதிகாரிகளின் வாக்குச் சீட்டுகளை “வாங்கியதாக”க் கூறப்படுகிறது. இந்தத் தகவலை வெளியிட்ட பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அதிகாரிகளில் ஒருவர் 13வது பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக அது பற்றி போலீசில் புகார்…
தேர்தல் ஆணையத்துக்குப் புதியவர்கள் தேவை: பக்காத்தான்
முதலில் தேர்தல் ஆணைய (இசி) உறுப்பினர்களை மாற்ற வேண்டும். அப்போதுதான் இசி-யை மேற்பார்வை செய்யும் நாடாளுமன்றக் குழுவுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்கிறது பக்காத்தான் ரக்யாட். “புதிய ஆணையம் அமைக்கப்படும்வரை இசி-மீது நம்பிக்கையை மேம்படுத்தும் முயற்சிகளிலும் தேர்தல் சட்டத்தைத் திருத்தும் பணிகளிலும் பக்காத்தான் ஒத்துழைக்காது”, என பிகேஆர் உதவித்…
‘வாக்காளர் பட்டியலில் வாக்காளர் படத்தைச் சேர்க்க வேண்டும்’
வாக்களிக்க வருவோரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வாக்காளர்களின் படங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்வது பற்றி தேர்தல் ஆணையம் (இசி) அலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சாபாவில் சட்டவிரோதக் குடியேறிகள்மீது நடைபெறும் அரச ஆணைய விசாரணையில் விசாரணையை நடத்தும் அதிகாரி மனோஜ் குருப் (இடம்) இந்த ஆலோசனையை முன்வைத்தார். இது, ஒரே…
தேர்தல் மோசடி தொடர்பில் ரபிஸியைச் சந்திக்க இசி தயார்
மே 5 பொதுத்தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாக புகார் செய்யும் அல்லது அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்கும் தரப்பு எதுவானாலும், அது பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியாக இருந்தாலும்கூட அவர்களைச் சந்திக்க தேர்தல் ஆணையம் (இசி) தயாராக உள்ளது. ஆணையம் அதன் கடமையைச் செய்யவில்லை என்ற தப்பான எண்ணம் ஏற்பட்டு…
இரண்டு தடவை வாக்களித்த பாகிஸ்தானியர் ; வாக்காளர் பட்டியலில் பெயர்…
சந்தேகத்துக்குரிய வழியில் மலேசிய அடையாள அட்டையைப் பெற்ற பாகிஸ்தான் குடிமகன் ஒருவர், மலேசிய பொதுத் தேர்தல்களில் இரண்டு தடவை வாக்களித்துள்ளாராம். அவருடைய பெயர் இன்னமும் வாக்காளர் பட்டியலில் உள்ளதாம். 1992-இல், கோட்டா கினாபாலுவில் ஒரு உணவகத்தில் அடையாள அட்டையைப் பெற்றதாகக் கூறிய அப்துல் லத்திப் ஜுமானி, சிலாங்கூரில் அம்பாங்கிலும்…
பிகேஆர் : இசி அதிகாரிகள் வாக்குச் சீட்டுப் பைகளைத் திறந்து…
மே 7-இல், கிளந்தான், கெதேரெயிலில் முனிசிபல் மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டுப் பைகளை உயர் நீதிமன்ற உத்தரவின்றியே தேர்தல் ஆணைய(இசி) அதிகாரிகள், திறந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி தம் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் போலீசில் புகார் செய்திருப்பதாக கெதேரெ பிகேஆர் இளைஞர் தலைவர் முகம்மட் சுகிர்மான்…
அன்வார் ‘அவதூறு மன்னன்’ என இசி குற்றம் சாட்டுகின்றது
பாதுகாப்புப் படை வீரர்கள் முன் கூட்டியே செலுத்திய 500,000 வாக்குகள் 'திருத்தப்பட்டுள்ளதாக' பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளது மீது அதிருப்தி அடைந்துள்ள தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார், அந்த பெர்மாத்தாங் எம்பி 'அவதூறு மன்னன்' எனக் குற்றம்…
தேர்தல் எல்லைகள் திருத்தப்படும்போது சீனர்கள் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படலாம்
தேர்தல் ஆணையம் (இசி), அடுத்து தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது- ஆண்டின் பிற்பகுதியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது- சீன வாக்காளர்களை ஒரே இடத்துக்குள் அடைத்து வைக்க அது முற்படலாம். “சீன சுனாமி” ஏற்படுவதைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்படலாம். பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு…
‘வாக்காளர்கள் தொடர்பான குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று இசி பதவி விலக வேண்டும்’
வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படும் குறைபாடுகளுக்கும் ‘அழியா மை’ அழிந்துபோனதற்கும் பொறுப்பேற்று தேர்தல் ஆணையம் (இசி) பதவி விலகுவதே கெளரவமான, கண்ணியான செயலாக இருக்கும் என சமூக அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது. “அவர்கள் பேரரசரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதை அறிவோம். அவர்கள் இயல்பாக நீக்கப்படுவதற்குமுன் அவர்களின் மனசாட்சியின் உறுத்தலால் தாங்களே…
பாயான் பாருவில் வாக்குகள் வாங்கப்பட்டதாக இசி-யிடம் புகார்
பினாங்கு பிகேஆர் தலைவர்கள் இருவர், “வாக்குகள் வாங்கப்பட்டது” பற்றி மாநில தேர்தல் ஆணைய (இசி) அலுவலகத்தில் நேற்று புகார் செய்தனர். பாயான் பாரு தொகுதியில் அந்தச் சந்தேகத்துக்குரிய சம்பவம் நடந்ததைத் தாங்கள் நேரில் கண்டதாக அவர்கள் கூறினர். மாநில பிகேஆர் உதவித் தலைவர் அப்துல் ஹாலிம் உசேன் (வலம்…
தேர்தல் ‘மோசடிக்காக’ இசி தலைவர் பதவி விலக வேண்டும் என…
அண்மையில் முடிவடைந்த 13வது பொதுத் தேர்தலில் 'மோசடிகள்' நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது தொடர்பில் தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் பதவி துறக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றைச் சமர்பிப்பதற்காக புத்ராஜெயாவில் உள்ள அந்த ஆணையக் கட்டிடத்திற்கு முன்பு இளைஞர் அமைப்புக்கள் இன்று கூடின.…
இசி: தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு இவ்வாண்டு இறுதியில் மேற்கொள்ளப்படும்
தேர்தல் மனுக்கள் (எதுவும் இருந்தால்) மீதான நீதிமன்ற விசாரணைகள் முடிந்ததும் இவ்வாண்டு இறுதி வாக்கில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுசீரமைப்புச் செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கும். தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்புப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக தேர்தல் மனுக்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்காக ஆறு மாதம் வரை…