டிஏபி, இசி பாரங்களில் வெவ்வேறான வாக்கு எண்ணிக்கைகள்

borang 14பேராக் ஜெலாபாங் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு வழிகளில் ஒன்றுக்கு  வெவ்வேறான தேர்தல் முடிவுகளைக் காட்டும் ஆவணங்களை டிஏபி-யும் இசி  என்ற தேர்தல் ஆணையமும் பெற்றுள்ளன.

அந்தத் தகவலை  பேராக் டிஏபி பிரச்சாரத் தலைவர் வோங் கா வோ  வெளியிட்டார்.

SRJK (C) Lahat-ல் 3வது வாக்களிப்பு வழிக்கான டிஏபி-யின் Borang 14, டிஏபி  சட்டமன்ற வேட்பாளர் தே ஹாக் கி 330 வாக்குகள்  பெற்றுள்ளதையும் அதே  வேளையில் பிஎன் வேட்பாளர் 137 வாக்குகளைப் பெற்றுள்ளதையும் காட்டுகிறது என அவர் சொன்னார்.borang 14 -1

ஆனால் அந்த வாக்களிப்பு வழிக்கு இசி அறிவித்த முடிவு நேர்மாறாக இருந்தது.  பிஎன் -னுக்கு 330 வாக்குகளும் டிஏபி-க்கு 137 வாக்குகளும் கிடைத்ததாக அது  தெரிவித்தது. அதற்கு வேறு Borang 14ஐ இசி ஆதரவாக வைத்துள்ளது.

“இது தேர்தல் சட்டத்தின் கீழ் மிகவும் கடுமையான விஷயமாகும். Borang 14ல்  குறிக்கப்பட்ட முடிவுகளே இறுதியானது,” என வோங் நேற்று விடுத்த அறிக்கையில்  தெரிவித்தார்.

நேற்று தொடக்கம் ஏழு நாட்களுக்குள் விளக்கம் கிடைக்கா விட்டாலும் சரி  செய்யப்படாவிட்டலும் சரி தேர்தல் முடிவுகளை சட்ட விரோதமாக திருத்தியதாக  டிஏபி இசி-க்கு எதிராகப் புகார் செய்யும் என்றும் அவர் சொன்னார்.

ஒவ்வொரு வாக்களிப்பு வழியிலும் எண்ணப்பட்ட வாக்குகளை பதிவு செய்யும்  ஆவணம் Borang 14 ஆகும். சட்டப்படி அது தான் இறுதி தேர்தல் முடிவு  ஆகும். வாக்குகள் எண்ணப்படுவதைக் கண்காணிக்கும் பிரதிநிதிகளுக்கு அதன்  பிரதிகள் வழங்கப்படும்.

அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த முடிவுகளின் இசி பதிப்பு  மிகவும் சாத்தியமற்றது எனக் குறிப்பிட்ட வோங், அந்த வாக்காளர் வழியில்  டிஏபி-யின் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் வி சிவகுமாருக்கு 373  வாக்குகளும் பிஎன் வேட்பாளருக்கு 141 வாக்குகளும் கிடைத்துள்ளன என்றார்.

அந்த SRJK (C) Lahat வாக்குச் சாவடியில் இருந்த மற்ற நான்கு வாக்களிப்பு  வழிகளிலும் தே-க்கு செலுத்தப்பட்ட வாக்குகளில் 58 விழுக்காட்டுக்கும் 67  விழுக்காட்டுக்கும் இடையிலான வாக்குகள் கிடைத்துள்ளன. தே ஜெலாபாங்  சட்டமன்றத் தொகுதியை மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 70  விழுக்காட்டுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார்.

“ஆகவே அந்த குறிப்பிட்ட வாக்காளர் வழியில் மட்டும் டிஏபி-க்கு 27 விழுக்காடு  வாக்குகள் கிடைத்துள்ளதாகச் சொல்வது நம்ப முடியாத விஷயமாகும்,” என்றார்  அவர்.

இரண்டு பாரங்களிலும் உள்ள கையெழுத்துக்கள் வெவ்வேறானவை

Borang 14 போலியாக தயாரிக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியமில்லை என வோங்  எண்ணுகிறார். ஏனெனில் டிஏபி, இசி ஆகியவற்றிடம் உள்ள அதன் பிரதிகளில்  கையெழுத்து ஒரே மாதிரியாக உள்ளது என அவர் சொன்னார். ஆனால் அந்த  இரண்டு பாரங்களிலும் வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் இருந்த டிஏபி, பிஎன்,
பிஎஸ்எம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தேர்தல் அதிகாரி ஆகியோரின்
கையெழுத்துக்கள் மாறுபட்டுள்ளன.

“டிஏபி-யிடம் உள்ள Borang 14-ல் குறிக்கப்பட்டுள்ளது தான் சரியான முடிவு என  டிஏபி பிரதிநிதி நேரடியாக உறுதி செய்துள்ளார்.”

“அந்தக் காரணங்கள் அடிப்படையில் வாக்களிப்பு வழி 3க்கான இசி-யின் Borang  14 கேள்விக்குரியது. இசி விளக்கம் கொடுப்பதோடு திருத்தமும் செய்ய வேண்டும்  என டிஏபி கேட்டுக் கொள்கிறது,” என்றும் வோங் சொன்னார்.

borang 14-2அதிகாரப்பூர்வமாக டிஏபி ஜெலாபாங் தொகுதியில் வெற்றி பெற்றது. அதற்குக்  கிடைத்த பெரும்பான்மை 12,266 ஆகும். பிஎன் வேட்பாளர் மோகன்  சுப்ரமணியத்துக்கு 4,655 வாக்குகளும் பிஎஸ்எம் கட்சியின் சரஸ்வதி முத்துக்கு  2,568 வாக்குகளும் கிடைத்தன.

அந்த வேறுபாடு ஜெலாபாங் தொகுதியில் டிஏபி அடைந்த வெற்றியைப் பாதிக்காது  என்றாலும் லுபோக் மெர்பாவ், மஞ்சோய், பாசிர் பாஞ்சாங் போன்ற நெருக்கமான  தொகுதிகளில் மாற்றத்தை அது ஏற்படுத்தியிருக்கும் என வோங் குறிப்பிட்டார்.

“அது அடுத்த மாநில அரசாங்கத்தை எந்தக் கட்சி அமைக்க வேண்டும் என்ற  இறுதி முடிவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்,” என்றார் அவர்.

 

TAGS: