சந்தேகத்துக்குரிய வழியில் மலேசிய அடையாள அட்டையைப் பெற்ற பாகிஸ்தான் குடிமகன் ஒருவர், மலேசிய பொதுத் தேர்தல்களில் இரண்டு தடவை வாக்களித்துள்ளாராம். அவருடைய பெயர் இன்னமும் வாக்காளர் பட்டியலில் உள்ளதாம்.
1992-இல், கோட்டா கினாபாலுவில் ஒரு உணவகத்தில் அடையாள அட்டையைப் பெற்றதாகக் கூறிய அப்துல் லத்திப் ஜுமானி, சிலாங்கூரில் அம்பாங்கிலும் நெகிரி செம்பிலானில் பாஹாவிலும் வாக்களித்ததாக தெரிவித்தார்.
“என் பெயர் இன்னமும் வாக்காளர் பட்டியலில் உள்ளதால் கடந்த பொதுத் தேர்தலிலும் வாக்களிக்க விரும்பினேன். ஆனால், அதற்கான பயண ஆவணம் என்னிடம் இல்லை”, என சாபாவில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடக்கும் அரச விசாரணை ஆணையத்திடம் அவர் கூறினார்.
அவருடைய அடையாள அட்டை இரத்துச் செய்யப்பட்டதென தேசிய பதிவுத் துறை “நாலைந்து மாதங்களுக்குமுன்” தெரிவித்ததாகச் சொன்னார்.
வாக்களித்த ஆண்டுகளைச் சரியாக அவரால் நினைவுகூற முடியவில்லை. “2006 அல்லது 1995”ஆக இருக்கலாம் என்றார்.
2006-இல் தேர்தல் இல்லை என்று கூறப்பட்டதற்கு, “ஆண்டு சரியாக நினைவில் இல்லை. (அப்துல்லா அஹமட்) படாவி அப்போது பிரதமராக இருந்தார்”, என்றார்.
படாவி காலம் என்றால் 2004-ல்.
இதுதான் 1 பங்களாசிய என்று அழைப்பார்கள் .