தேர்தல் எல்லைகள் திருத்தப்படும்போது சீனர்கள் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படலாம்

1 umதேர்தல் ஆணையம் (இசி), அடுத்து தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது- ஆண்டின் பிற்பகுதியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது- சீன வாக்காளர்களை ஒரே இடத்துக்குள் அடைத்து வைக்க அது முற்படலாம். “சீன சுனாமி” ஏற்படுவதைத் தவிர்க்க அவ்வாறு செய்யப்படலாம்.

1 um1 profபொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதில் தோல்வி கண்ட பின்னர் பிஎன் தலைவர்கள் பேசும் பேச்சைக் கேட்கும்போது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என்கிறார் மலாயாப் பல்கலைக்கழக  ஜனநாயகம் மற்றும் தேர்தல்மீதான ஆய்வுமையத்தின் (யுஎம்சிடெல்) இயக்குனர் பேராசிரியர் முகம்மட் ரிட்சுவான் ஒத்மான்.

“முன்பு மலாய்க்காரர்களும் மாற்றரசுக் கட்சிக்கு வாக்களிப்பதைக் கண்ட அவர்கள்,  தொகுதி எல்லைக் கோடுகளைத் திருத்தி பல-இனங்கள் கலந்து வாழும் தொகுதிகளை அதிகமாக உருவாக்கினார்கள். அது அவர்களுக்கு சாதகமாகவும் அமைந்தது.”. 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை அலசி ஆராயும் ஒரு கருத்தரங்கில் பேசியபோது பேராசிரியர் ரிட்சுவான் இவ்வாறு கூறினார்.

“எனவே, அடுத்த முறை (தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தும்போது) அவர்கள் சீன வாக்காளர்கள் ஒரே பகுதிக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். அப்படிச் செய்து விட்டால் மற்ற பகுதிகளில் கவனம் செலுத்த வசதியாக இருக்கும்”.

சிலாங்கூரில் பக்காத்தான் ரக்யாட்டின் தெள்ளத் தெளிவான வெற்றிக்கு மந்திரி புசாரின் தரமான தலைமைத்துவமும் செல்வாக்கும்தான் காரணமாகும்.

“2012-இல் அவரைப் பற்றி ஆராய்ந்தபோது, சிலாங்கூர் மக்கள் அவரை மிகவும் போற்றுவதைக் கண்டோம். அதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொண்டோம். அதாவது, பக்காத்தான் மாநிலங்களைப் பொறுத்தவரை மந்திரி புசார் என்பவர் நன்மதிப்பைப் பெற்றவராகவும் நன்கு செயல்படக்கூடியராகவும் இருக்க வேண்டும்”, என்றாரவர்.

1 um 2 nikஅதேபோல், நிக் அப்துல் அசீஸ் நிக் மாட் (வலம்) கிளந்தான்   மந்திரி புசாராக இருந்தபோது மக்கள் ஆதரவை மிகுதியும் பெற்றிருந்தார் தேர்தலுக்கு  முந்திய .மதிப்பீட்டளவில் மக்களிடம் அவரின் செல்வாக்கு 70 விழுக்காட்டையும் தாண்டிச் சென்றது.

மே 5 தேர்தலுக்குமுன் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கைவிட அன்வார் இப்ராகிமுக்கு மக்களிடம் கூடுதல் செல்வாக்கு இருப்பதாகக் கூறப்போக அதற்காக சில கல்வியாளர்கள் ரிட்சுவானையும் யுஎம்சிடெல்லையும் கடிந்துகொண்டனர்.

ஆனால், தேர்தல் முடிவுகள், தம் குழுவினரின் கணிப்பு கிட்டத்தட்ட சரிதான் என்பதை மெய்ப்பிப்பதாக ரிட்சுவான் சுட்டிக்காட்டினார்.

“வாக்குகள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஆறு விழுக்காடு வேறுபாடு இருந்தது எங்களின் கணிப்பு ஏறத்தாழ சரியே என்பதைக் காண்பிக்கிறது”, என்றாரவர்.

1 um 3காஜாங்கில், சுமார் 200 பேர் வந்திருந்த கருத்தரங்கில் ரிட்சுவான் பேசினார். அதில், செர்டாங் எம்பி ஒங் கியான் மிங், பாரிட் புந்தார் எம்பி முஜாஹிட் யூசுப் ராவா, பத்து பகாட் எம்பி இட்ரிஸ் ஜாவுசி ஆகியோரும் பேசினர். எல்லாருமே பக்காத்தான் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

கெடாவில், கெடா அரசின் அடைவுநிலை திருப்திகரமாக இல்லை என்ற கருத்தினாலும் சில தொகுதிகள் மீது பாஸும் பிகேஆரும் சர்ச்சையிட்டுக் கொண்டதாலும் அங்கு நாடாளுமன்றத் தொகுதிகள் சிலவற்றை இழக்க நேர்ந்தது என முஜாஹிட் குறிப்பிட்டார்.

பாஸ் 21 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றது. இது 2008-இல் அதற்குக் கிடைத்ததைவிட இரண்டு இடங்கள் குறைவாகும்.

 

TAGS: