தேர்தல் ஆணைய நடப்புத் தலைமைத்துவம் விலகும் வரையில் பக்காத்தான் ராக்யாட்டின் ‘505 கறுப்பு தின’ பேரணிகள் தொடரும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறுகிறார்.
மே 5 பொதுத் தேர்தலுக்கு அந்தப் பேரணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
“மக்கள் விருப்பத்துக்கு எதிராக இசி போக முடியாது,” என அவர் சொன்னார்.
பதவி துறக்குமாறு விடுக்கப்படும் வேண்டுகோளை இசி தலைமைத்துவம் தொடர்ந்து மறுத்து வருவது குறித்து கேட்கப்பட்ட போது தியான் சுவா அவ்வாறு சொன்னார்.
“நாங்கள் தேர்தல் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றினோம். இரு தரப்பும் அதனை ஏற்றுக் கொண்டன. அழியா மை ஏழு நாட்கள் வரை தாங்கும் எனத் தெளிவாகக் கூறப்பட்டது. ஆகவே இசி அந்தச் சட்டத்தை அப்பட்டமாக மீறி விட்டது,” என்றார் அவர்.
தேர்தலுக்கு ஏழு நாட்களுக்கு தாங்கக் கூடிய அழியா மையை வழங்கத் தவறி விட்டது. ‘அது மன்னிக்க முடியாத குற்றம்’ என தியான் சுவா சொன்னார்.
கோலாலம்பூர் பாடாங் மெர்போக் திடலில் பக்காத்தானின் ‘505 கறுப்பு தின’ பேரணிக்கு இன்னும் மூன்று நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அழியா மை அரை மணி நேரம் கூட தாங்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க இந்த மையை வைத்துக் கொண்டு எத்தனை லட்சாதிபதிகள் உருவானார்கள் என்பதும் யோசிக்கப் பட வேண்டும்!
‘இசி விலகும் வரை பேரணிகள் ஒயாது’ அப்படியே விலகினாலும் இன்னொருத்தன் வருவான் அவனும் UMNO வுக்கு ஜாலரா போடுவான் ,நீங்களும் இப்படியே போராட்டத்தை ,உலகம் அழியும் வரை நடத்துங்கள்
இந்த அழியா மையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் செய்த செலவு எவ்வளவோ????
காலா காலதுக்கு சாதி ஒழிய, நாம் கவிதை பாட வேண்டியதுதான்.