தேர்தல் ‘மோசடிக்காக’ இசி தலைவர் பதவி விலக வேண்டும் என இளைஞர் அமைப்புக்கள் அறைகூவல்

protestஅண்மையில் முடிவடைந்த 13வது பொதுத் தேர்தலில் ‘மோசடிகள்’ நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது  தொடர்பில் தேர்தல் ஆணையத் (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் பதவி துறக்க  வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் மகஜர் ஒன்றைச் சமர்பிப்பதற்காக புத்ராஜெயாவில் உள்ள அந்த  ஆணையக் கட்டிடத்திற்கு முன்பு இளைஞர் அமைப்புக்கள் இன்று கூடின.

பிற்பகல் மணி 2.30 வாக்கில் நடைபெற்ற அந்த ஆட்சேபக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு Solidariti Mahasiswa Malaysia (SMM) அமைப்பின் தலைவர் சாப்வான் அனாங் தலைமை தாங்கினார்.

அவர்கள் “EC” என எழுதப்பட்டிருந்த இரண்டு கறுப்பு நிறச் சவப்பெட்டிகளை வைத்திருந்தனர். அவற்றுடன் ’13வது பொதுத் தேர்தல் மிகவும் கறை படிந்தது’ என எழுதப்பட்டிருந்த பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இசி பேராளரிடம் அந்த மகஜரைச் சமர்பித்த பின்னர் கூடியிருந்தவர்களிடம் உரையாற்றிய சாப்வான், அப்துல் அஜிஸ் ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

TAGS: