வான் அஹ்மட்டின் குறைகூறல் அவர் பிஎன்-ஆதரவாளர் என்பதைக் காண்பிக்கிறது

iskanderதேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர்  மாற்றரசுக் கட்சி எம்பிகள் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வதை வைத்து அவர்களைக் கபடதாரிகள் என்று வருணித்திருப்பதே  அவர் பிஎன் ஆதரவாளர் என்பதைக் காண்பிக்கிறது என பிகேஆர் இளைஞர் பகுதி கூறியுள்ளது.

இசி நடுநிலையாக செயல்பட வேண்டும். வான் அஹ்மட்டின் பேச்சு அவர் இசி-இல் இருக்கத் தகுதியற்றவர் என்பதைக் காண்பிப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் பகுதி ஷம்சுல் இஸ்கண்டர் (இடம்) கூறினார்.

நேற்று வான் அஹ்மட், தேர்தலைக் குறைகூறும் பக்காத்தான் எம்பிகள், எம்பி-களுக்கான பதவியேற்புச் சடங்கில் கலந்துகொள்ளப்போவதைக்  கேலியாக விமர்சித்திருந்தார்.

TAGS: