‘வாக்குச் சீட்டு வாங்கப்பட்டதாகக் கூறப்படுவதை EC நிராகரிக்க முடியாது’

SPR1பிஎன் வேட்பாளர் ஒருவர் வாக்குச் சீட்டுக்களை வாங்கியதாக கூறிக் கொண்டு இசி என்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் போலீசில் செய்துள்ள புகாருக்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தேர்தல் ஆணையம் சொல்லிக் கொள்ள முடியாது என பிகேஆர் பண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில்  கூறியிருக்கிறார்.

தனது தோற்றத்தையும் தேர்தல் நடைமுறையில் நம்பகத்தன்மையையும் அரசமைப்பு ரீதியில் நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு இசி-க்கு உள்ளது என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.

“இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் எங்களை திட்டுவதற்கு விரும்புகிறார். ஆனால்
போலீசில் புகார் செய்யப்பட்டதும் அவர் அமைதியாக இருக்கிறார்.”

“இது அவருடைய பொறுப்பு. இசி-யின் சொந்த அதிகாரிகளே அந்தப் புகாரைச் செய்துள்ளதால் அதற்கு விளக்கமளித்து அது உண்மையானால் தேர்தல் முடிவுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும்,” என ராபிஸி குறிப்பிட்டார்.

தாம் அதில் சம்பந்தப்படவில்லை என பிஎன்-னின் உலு பெசுட் பேராளர் நாவி முகமட் கூறிக் கொள்வதையும் அவர் நிராகரித்தார்.

‘அப்படி ஒன்றுமில்லை’ என நாவி மிக எளிதாகச் சொல்கிறார். அது தான் அம்னோவின் ஒரே
மாதிரியான பதில்”

“போலீஸ் புகார் போதுமான ஆதாரம் இல்லை என்றும் யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம்
என்றும் அவர்கள் சொல்கின்றனர். பொய்யான புகார்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை அவர்கள்
அறியவில்லை.”

SPRவிசாரணை செய்யப்படுவதற்கும் தமது கூற்றுக்கு ஆதரவாக ஆதாரத்தை வழங்கவும் அந்த இசி
அதிகாரி தயாராக இருக்கிறார் என்றும் ராபிஸி சொன்னார்.

“ஆனால் குறைந்த பட்சம் நாவி, ஷாரிஸாட்டைக் காட்டிலும் நல்லவர்,” என அவர் குறிப்பிட்டார்.

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட விவகாரத்தில் தமக்கு எதிராக அவதூறு கூறியதாக ராபிஸி மீது முன்னாள் அம்னோ மகளிர் தலைவியுமான ஷாரிஸாட் அப்துல் ஜலில் வழக்கு தொடுத்ததையே ராபிஸி அவ்வாறு குறிப்பிட்டார்.

தாம் எந்த அஞ்சல் வாக்குச் சீட்டையும் வாங்கவில்லை என நாவி நேற்று கினிடிவி-யிடம் தெரிவித்தார். அந்தக் குற்றச்சாட்டுக்கும் இசி-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வான் அகமட் சினார் ஹரியானிடம் கூறினார்.

இசி அதிகாரி எனத் தம்மை அழைத்துக் கொண்ட தனிநபர் ஒருவர் சமர்பித்த போலீஸ் புகாரின்
பிரதியை நேற்று ராபிஸி ஊடகங்களுக்கு வழங்கினார்.

நாவி தமது வாக்குச் சீட்டை 100 ரிங்கிட்டுக்கு ‘வாங்கியதாக’ கூறிய அந்த தனிநபர், வாக்குச் சீட்டைத்
திருப்பிக் கேட்ட போது அதில் ஏற்கனவே பிஎன்-னுக்குக் குறியிடப்பட்டிருந்ததாகச் சொன்னார்.

TAGS: