போலீஸ் பணியில் தலையிட வேண்டாம் என ஸாஹிட்டுக்கு ஆலோசனை

போலீஸ் பணியில் 'தலையிட வேண்டாம்' என பிகேஆர் வியூகவாதி ராபிஸி இஸ்மாயில் உள்துறை  அமைச்சர் ராபிஸி இஸ்மாயிலுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார். பேரணிகளில் பங்கு கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸாஹிட் எச்சரித்ததைத் தொடர்ந்து ராபிஸி அவ்வாறு சொன்னார். ஸாஹிட் 'எல்லை மீறக் கூடாது' எனக் குறிப்பிட்ட…

தேர்தல் மோசடிகளை புலனாய்வு செய்யும் குழுவுக்கு ராபிஸி தலைமை தாங்குவார்

13வது பொதுத் தேர்தல் முடிவுகளை பக்காத்தான் ராக்யாட் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள வேளையில் தேர்தல்  மோசடிகளைப் புலனாய்வு செய்யும் குழுவுக்கு புதிய பண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் தலைமை தாங்குவார்  என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். "தேர்தல் ஆணையம் நியாயமான காரணங்களை தெரிவிக்கும்…

1.3 பில்லியன் ரிங்கிட் திட்டம் கொடுக்கப்பட்டது மீது பிகேஆர் கேள்வி…

பேராக்கில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றுக்குப் போட்டியிடும் பிஎன் வேட்பாளர்களில் ஒருவரும் அந்தத் தொகுதிக்கான நடப்பு உறுப்பினருமான ஒருவருக்கு கல்வி அமைப்பு ஒன்றைக் கட்டி பராமரிப்பதற்கு உதவும் 1.3 பில்லியன் ரிங்கிட் பெறும் திட்டம் கூட்டரசு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது பற்றி பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கேள்வி எழுப்பியுள்ளார்.…

பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை குறித்த பிஎன் ஆய்வு தவறானது…

பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை நாட்டைத் திவாலாக்கி விடும் என பிஎன் செய்துள்ள ஆய்வு ஜோடிக்கப்பட்ட எண்ணிக்கைகள், தவறான ஊகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளதாக  பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கூறுகிறார். பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையை ஆய்வு செய்த பிஎன் உள் அறிக்கை தமக்குக்…

நஜிப்பின் ‘வியூகத் தவறுகளை’ பிகேஆர் பயன்படுத்திக் கொள்ளும்

பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கையில் காணப்படும் அம்சங்களை பிஎன் தேர்தல் கொள்கை  அறிக்கையில் இணைத்துக் கொண்டதின் மூலம் நஜிப் அப்துல் ரசாக் 'வியூகத் தவறை' செய்து விட்டதாக  பிகேஆர் சொல்கிறது. பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையின் தன்மையைப் பார்க்கும் போது பக்காத்தான் கொள்கைகள் நாட்டை நொடித்துப் போகச்…

பாப்பாகோமோவின் ஆவிப் பதிவை இசி நீக்கியது

அம்னோ சார்பு வலைப்பதிவாளர் பாப்பாகோமோவின் இரட்டை வாக்காளர் பதிவு எனக் கூறப்பட்டதை இசி  என்ற தேர்தல் ஆணையம் (இசி) நீக்கியுள்ளது. அந்த நடவடிக்கை 'ஆவி வாக்காளர்கள்' உள்ளனர் என  பிகேஆர் சொல்வதை மெய்பிப்பதாக அதன் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார். போலீஸ் அடையாளக் கார்டையும் சிவிலியன் அடையாளக்…

பிடிபிடிஎன் -னை நிறுத்தாவிட்டால் அது நாட்டை நொடித்துப் போகச் செய்து…

பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதியை கூடிய விரைவிலோ அல்லது பின்னரோ நிறுத்த வேண்டும் இல்லை என்றால் அது நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார். ஊழியர் சேம நிதி வாரியம் (இபிஎப்),  Permodalan Nasional Berhad…

‘கறை படிந்த’ வேட்பாளர்களை கைவிடுமாறு நஜிப்புக்குச் சவால்

ஊழலுக்காக விசாரிக்கப்படும் கட்சி உயர் அதிகாரிகளை பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து அகற்றுமாறு பிகேஆர் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குச் சவால் விடுத்துள்ளது. அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில், சபா முதலமைச்சர் மூசா அமான், சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ், நெகிரி…

பிகேஆர்: சம்பள உயர்வு கொடுக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை

அரசாங்க ஊழியர்களுக்கு நேற்று சம்பள உயர்வை அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அது அறிவிக்கப்பட்ட நேரம் குறித்து பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கேள்வி எழுப்பியுள்ளார். பிஎன் கூட்டரசு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு தவணைக் காலம் மார்ச் 8ம் தேதி முடிந்து விட்டதாக அவர் சொன்னார். உண்மையில்…

பிகேஆர்: ‘நஜிப் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார்’

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தற்காப்பு அமைச்சராக இருந்த போது 100 மில்லியன் ரிங்கிட் தேசிய தற்காப்பு ஆய்வு மய்யத் திட்டத்தை தகுதி இல்லாத நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதின் மூலம் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளது. சிலாங்கூர் அம்னோ மகளிர் தலைவி ராஜா ரோப்பியா…

ராபிஸி, மூசா ‘ஆதாரங்களுடன்’ செவ்வாய்க்கிழமை ஹாங்காங் செல்கிறார்

சபா முதலமைச்சர் மூசா அமான் 'வழங்கிய' வெட்டுமரச் சலுகைகளுக்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பணம் தொடர்பில் 'மேலும் விவரங்களை' கொடுப்பதற்காக பிகேஆர் குழு ஒன்று செவ்வாய்க் கிழமை ஹாங்காங் செல்கிறது. பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தலைமை தாங்கும் அந்தக் குழு, அந்தப் பணம் தொடர்பான பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட…

ராபிஸி: என்னைக் கட்டுப்படுத்துவதே நாடாளுமன்ற நிருபர்கள் சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்டதின்…

நாடாளுமன்றத்தில் எம்பி-க்கள் அல்லாதவர்கள் நிருபர்கள் கூட்டத்தை நடத்துவதற்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை தாம் அம்பலப்படுத்தி வருவதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டது என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார். "நஸ்ரி அத்தகைய நடவடிக்கையை எடுப்பார் என நான்…

முகமட் ஹசான் பாதி கதையைத்தான் சொல்லியிருக்கிறார் என்கிறது பிகேஆர்

நெகிரி செம்பிலானில் காட்டு ஒதுக்கீட்டு பகுதியிலிருந்து அகற்றப்பட்ட நிலம் மாற்றப்பட்டு YNS என்ற  Yayasan Negri Sembilan அமைப்பிடம் இருப்பதாக மாநில மந்திரி புசார் முகமட் ஹசான் விடுத்துள்ள அறிக்கையை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் நிராகரித்துள்ளார். "முகமட் ஹசான் அந்தக் கதையில் பாதியை மட்டுமே சொல்லியிருக்கிறார்.…

ராபிஸி: உண்மையைச் சொல்லுங்கள் இல்லையென்றால் அம்பலமாகும்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ள வெட்டு மரச் சலுகைகள் மீது உண்மை நிலவரங்களை அதன் மந்திரி புசார் முகமட் ஹசான் வெளியிட வேண்டும். இல்லை என்றால் அந்த மாநிலத்தில் காட்டு ஒதுக்கீட்டுப் பகுதிக: வெகு வேகமாக குறைந்து வருவதற்குப் பொறுப்பான அம்னோ தொடர்புடைய நிறுவனங்கள் அம்பலப்படுத்தப்படும் என பிகேஆர்…

ராபிஸி: பிஎன் ஆய்வாளாராக இருப்பதற்கு, ‘நொடித்துப் போகும்’ எனச் சொன்னாலே…

பிஎன் தரப்பிலிருந்து வெளியிடப்படும் ஆய்வறிக்கைகளை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கேலி செய்துள்ளார். அந்த நீண்ட கால கூட்டணி, பக்காத்தான் ராக்யாட் முன் வைக்கும் எந்தத் திட்டம் அல்லது யோசனை மீது 'நொடித்துப் போகும்' என்ற சொல்லை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கிறது என்றார் அவர். "ஆகவே இப்போது…

ரபிஸி: என்எப்சிமீது வழக்குத் தொடுத்து பணத்தைத் திரும்பப் பெற இயலாது

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசனுக்கு (என்எப்சி) எதிராக வழக்குத் தொடுத்து வெற்றிபெற்றால்கூட அதனிடமிருந்து அரசாங்கம் பணத்தைத் திரும்பப் பெற முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி. ஏனென்றால் என்எப்சி பணத்தில் பெரும்பகுதி அதன் இயக்குனர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. என்எப்சி-இடம் சொத்து அதிகமில்லை. அதனால் அரசாங்கத்தின்…

பாபியா சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை ராபிஸி அம்பலப்படுத்துவார்

1989ம் ஆண்டுக்கான பாபியா என்ற வங்கிகள், நிதி நிறுவனச் சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் பிகேஆர் வியூக இயக்குநர் முகமட் ராபிஸி இஸ்மாயில் அந்தச் சட்டம் எப்படி நேர்மையற்ற முறையில் அமலாக்கப்படுகின்றது என்பதை தெரிவிப்பதற்காக விளக்கக் கூட்டங்களை நடத்தவிருக்கிறார். என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன…

பாபியா குற்றச்சாட்டு கைவிடப்பட வேண்டும் என ராபிஸி விண்ணப்பம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன வங்கிக் கணக்குகளை அம்பலப்படுத்தியதாக தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குநர் முகமட் ராபிஸி ராம்லி விண்ணப்பித்துக் கொண்டுள்ளார். "அந்த முழு நடவடிக்கையும் தங்கள் அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்க வழக்குரைஞர்களின் அதிகார…

புதிய என்ஜிஓ பக்காத்தான் விவகாரங்களையும் அலசி ஆராயும்

தவறுகளைக் கண்காணிக்கவும் அவை பற்றித் தகவல் அளிக்கவும் அமைக்கப்பட்டிருக்கும் புதிய அரசுசாரா அமைப்பான  National Oversight and Whistleblowers (NOW) பிகேஆர் தொடர்புள்ளது என்றாலும் பக்காத்தான் ரக்யாட் ஊழல்களையும் அது விட்டு வைக்காது, அலசி ஆராயும். “மற்றவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதுபோலவே பக்காத்தானிடமும் நடந்துகொள்வோம். “ஆனால் புகார் சொல்பவர்கள் ஆதாரங்களைக்…

தகவல்களை அம்பலப்படுத்துவோர் மய்யத்தை மெர்தேக்காவுக்கு முதல் நாள் ராபிஸி தொடக்கி…

அரசாங்கத்துக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்திய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் சம்பந்தப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்தியதற்காக நீதிமன்ற நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள ராபிஸி ராம்லி நாளை தகவல்களை அம்பலப்படுத்துவோர் மய்யத்தை தொடக்கி வைக்கிறார். அதற்கு தேசிய மேற்பார்வை, தகவல்களை அம்பலப்படுத்துவோர் மய்யம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்தத் தொடக்க…

ராபிஸி: ஜார்ஜ் கெண்ட் பொய் சொல்கிறது

அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கான திறன் சோதனையில் லயன் பசிபிக்-உடனான அதன் கூட்டுத் தொழில் திட்டத்தில் தோல்வி காணவில்லை எனக் கட்டுமான நிறுவனமான ஜார்ஜ் கெண்ட் கூறிக் கொள்வதை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் நிராகரித்துள்ளார். அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்ட உரிமையாளரான Syarikat Prasarana Bhd-ன்…

பிகேஆர் ரபீஸ்சி பாபியா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்

பிகேஆரின் வியூக இயக்குனர் ரபீஸ்சி ரமலி தேசிய தீவன கார்ப்பரேசன் (என்எப்சி) ஊழல் விவகாரத்தில் வங்கிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை வெளியிடப்பட்டத்தில் உட்பட்டிருந்ததற்காக இன்று காலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். "நான் தற்போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் (பாபியா) கைது செய்யப்பட்டுள்ளேன். இப்போது நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுவேன்", என்று…