அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கான திறன் சோதனையில் லயன் பசிபிக்-உடனான அதன் கூட்டுத் தொழில் திட்டத்தில் தோல்வி காணவில்லை எனக் கட்டுமான நிறுவனமான ஜார்ஜ் கெண்ட் கூறிக் கொள்வதை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் நிராகரித்துள்ளார்.
அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்ட உரிமையாளரான Syarikat Prasarana Bhd-ன் (Prasarana) நிர்வாக இயக்குநர் ஷாஹ்ரில் மொக்தார் ஜனவரி 20ம் தேதி எழுதியுள்ள ஒரு கடிதத்தில், அனைத்துலக நிறுவனங்களான Wijet, Thales ஆகியவற்றை உள்ளடக்கிய ஜார்ஜ் கெண்ட் கூட்டு நிறுவனம், ‘நிதி மதிப்பீட்டில் தோல்வி’ அடைந்துள்ளதாக குறிப்பிடுகிறது என ராபிஸி இன்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தின் பிரதி ராபிஸியின் அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் ஜார்ஜ் கெண்ட்-லயன் பசிபிக் கூட்டுத் தொழில் “தொழில் நுட்பமாக இருந்தாலும் அல்லது நிதியாக இருந்தாலும் மதிப்பீட்டில் தோல்வி கண்டுள்ளது” என குறிப்பாக தெரிவித்துள்ளது.
“சுருக்கமாகச் சொன்னால் குத்தகை தேவைகளை ஜார்ஜ் கெண்ட் பூர்த்தி செய்யவில்லை என டெண்டர்
மதிப்பீடு கண்டு பிடித்துள்ளது,” என ராபிஸி சொன்னார்.