கோயிலுக்குள் காலணிகளுடன் பிரமுகர்கள்

இராகவன் கருப்பையா- மலேசிய வருகை மேற்கொண்டுள்ள ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் இமேனுவல் மெக்ரோனை காலணிகளுடன் கோயிலுக்குள் அழைத்துச் சென்ற பிரதமர் அன்வார், இந்திய சமூகத்தின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

நம் நாட்டுக்கு 2 நாள் குறுகிய கால பயணம் மேற்கொண்டுள்ள மெக்ரோனை தலைநகர் ‘பெட்டாலிங் ஸ்ட்ரீட்டுக்கு’ அழைத்துச் சென்ற அன்வார், ஜாலான் பண்டார், ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்திற்கும் அவரை கூட்டிச் சென்று சுற்றிக் காண்பித்தார்.

oruஆனால் 30கும் மேற்பட்ட அவர்கள் யாருமே தங்களுடையக் காலணிகளை கழற்றாமல் ஆலய வளாகத்திற்குள் திமுதிமுவென நுழைந்தது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயம்.mm

. மெக்ரோனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கும் நபரும் கூட காலணியுடன்தான் தென்படுகிறார்.

ஏற்கெனவே கடந்த ஆண்டில் ‘கோயில் ஹராம்’ எனும் சொல்லை பயன்படுத்தி இந்திய சமூகத்தின் வெறுப்புக்கு இலக்கான அன்வார், அண்மையில்தான் அதற்காக மன்னிப்புக் கோரினார்.

அயல் நாட்டு அதிபராக இருந்தாலும் யாராக இருந்தாலும் கோயிலின் புனிதத்தன்மைக்கு கலங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கோயில் வளாகத்திற்குள் காலுறைகளுடன் கூட யாருமே நுழைய அனுமதி கிடையாது. பிரதான வாசலில் பணியில்  அமர்த்தப்பட்டுள்ள ஒரு பாதுகாவலர் தடுத்து நிறுத்திவிடுவார். இதுதான் காலங்காலமாக அங்கு வழக்கத்தில் இருந்து வருகிறது.

மெக்ரோனை நாம் குறை சொல்ல முடியாது. அவருக்கு அனேகமாக நம் சமயம் பற்றியும் இந்துக் கோயிலுக்குள் நுழையும் வழிமுறைகள் பற்றியும் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இச்செயல் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று  என்று அடையாளப்படுத்தும் பலர், கோயில் நிர்வாகம் இதற்காக இந்திய சமூகத்திடம், குறிப்பாக இந்துக்களிடம் ஒரு விளக்கம் அளிக்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.