பாப்பாகோமோவின் ஆவிப் பதிவை இசி நீக்கியது

rafiziஅம்னோ சார்பு வலைப்பதிவாளர் பாப்பாகோமோவின் இரட்டை வாக்காளர் பதிவு எனக் கூறப்பட்டதை இசி  என்ற தேர்தல் ஆணையம் (இசி) நீக்கியுள்ளது. அந்த நடவடிக்கை ‘ஆவி வாக்காளர்கள்’ உள்ளனர் என  பிகேஆர் சொல்வதை மெய்பிப்பதாக அதன் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார்.

போலீஸ் அடையாளக் கார்டையும் சிவிலியன் அடையாளக் கார்டையும் பயன்படுத்தி சிலாங்கூர் அம்பாங்கிலும்  கோலாலம்பூர் வாங்சா மாஜுவிலும் பாப்பாகோமோ வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று ராபிஸி  கூறிக் கொண்டிருந்தார்.

இன்று காலை நாங்கள் இசி இணையத்தளத்தை சோதனை செய்த போது போலீஸ் அடையாளக் கார்டின் கீழ்
செய்யப்பட்டிருந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.,” என அவர் இன்று விடுத்த அறிக்கை
குறிப்பிட்டது.rafizi1

“இரண்டு வாக்காளர் பதிவுகளிலும் வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் அல்லது பாப்பாகோமோ ஒரே மனிதர்.
அவர் ஆவி வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை அது நிரூபிக்கிறது. அதனால் அஞ்சல்
வாக்காளர் பட்டியலிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

முன்னாள் போலீஸ் அதிகாரியான வான் முகமட் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி எனத் rafizi3
தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அந்தத் தீர்ப்பை கடந்த ஆண்டு முறையீட்டு
நீதிமன்றம் உறுதி செய்தது.

‘எத்தனை இரட்டை வாக்காளர்கள் ?’

“சிறிய எண்ணிக்கையில் இரட்டைப் பதிவுகள்” இருக்கலாம் என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்   இன்று ஒப்புக் கொண்டுள்ளதை வரவேற்ற ராபிஸி, பிரச்னையைத் தீர்ப்பதற்கு அவர் ‘மேலும் நம்பக்கூடிய’  பதிலைத் தர வேண்டும் எனக் கோரினார்.

“படையிலிருந்து விலகிய பாதுகாப்பு வீரர்கள் பற்றி இசி-க்கு தெரிவிக்கப்படுவதில்லை என அவர் சொல்வதை
ஏற்றுக் கொள்ள முடியாது.”

Rafizi2“வாக்காளர் பட்டியலைத் தூய்மையாக வைத்திருப்பது அவரது பொறுப்பாகும். ஆனால் அவர் போலீஸ் மீது
பழியைப் போட முயலுகிறார்,” என ராபிஸி சொன்னார்.

“இசி அதிகாரிகள் போலீஸ் அல்லது இராணுவ அடையாளக் கார்டுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ள
ஒவ்வொரு வாக்காளரையும் போலீஸ் படையுடன் இணைந்து அன்றாடம் சோதனை செய்வது நல்லது,” என
அவர் யோசனை கூறினார்

இரட்டை வாக்காளர் பதிவுகளைக் கொண்ட முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் பட்டியல் கூடிய விரைவில்
தயாரிக்கப்பட வேண்டும். அவர்களுடைய எண்கள் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டு பட்டியலிலிருந்து
நீக்கப்பட வேண்டும்.”

 

TAGS: