பிகேஆர்: சம்பள உயர்வு கொடுக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை

Rafiziஅரசாங்க ஊழியர்களுக்கு நேற்று சம்பள உயர்வை அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அது அறிவிக்கப்பட்ட நேரம் குறித்து பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஎன் கூட்டரசு அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டு தவணைக் காலம் மார்ச் 8ம் தேதி முடிந்து விட்டதாக அவர் சொன்னார்.

உண்மையில் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகம் “பரமாரிப்பு அரசாங்கத்தைப் போன்றது” என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன், அம்னோவை அரசாங்க ஊழியர்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வெட்கமே இல்லாமல் அவர்களைக் கவருவதற்கு அந்த நடவடிக்கையை நஜிப் மிகவும் பொறுப்பில்லாமல் எடுத்துள்ளார்.”

கடந்த தேர்தல் முடிந்து ஐந்து ஆண்டு காலம் முடிந்த பின்னரும் தேர்தல்களை இன்னும் நடத்தாத ஒரே மலேசியப் பிரதமர் அவர்.”

கடந்த காலத்தில் ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னரே பிரதமர்கள் தேர்தல்களை நடத்தியுள்ளனர். மக்களைப் பொறுத்த வரையில் அரசியல் கட்டளை என்பது கடந்த தேர்தல் நிகழ்ந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும்.

அரசாங்க ஊழியர்களும் போலீஸ் படையினரும் ஆயுதப்படையினரும் தங்கள் கண்ணோட்டத்தில் நிபுணத்துவம் கொண்டவர்கள். அவர்கள் இது போன்ற சம்பள உயர்வுகளுக்குப் பலியாக மாட்டார்கள் என்றும் ராபிஸி சொன்னார்.

 

TAGS: