நெகிரி செம்பிலானில் காட்டு ஒதுக்கீட்டு பகுதியிலிருந்து அகற்றப்பட்ட நிலம் மாற்றப்பட்டு YNS என்ற Yayasan Negri Sembilan அமைப்பிடம் இருப்பதாக மாநில மந்திரி புசார் முகமட் ஹசான் விடுத்துள்ள அறிக்கையை பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் நிராகரித்துள்ளார்.
“முகமட் ஹசான் அந்தக் கதையில் பாதியை மட்டுமே சொல்லியிருக்கிறார். Yayasan Negri Sembilan-க்குப் பின்னர் என்ன நடந்தது என்பதை அவர் தெரிவிக்கவே இல்லை,” என ராபிஸி இன்று நிருபர்களிடம் கூறினார்.
அந்த நிலத்தை மற்ற பல தனியார் நிறுவனங்களுக்கு மாற்றி விடும் வகையில் அந்த முடிவைத் திருத்துவதற்கு Yayasan Negri Sembilan விடுத்த வேண்டுகோளை மாநிலச் செயலகம் அங்கீகரித்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் கடிதம் ஒன்றையும் ராபிஸி அப்போது காட்டினார்.