‘கறை படிந்த’ வேட்பாளர்களை கைவிடுமாறு நஜிப்புக்குச் சவால்

Rafiziஊழலுக்காக விசாரிக்கப்படும் கட்சி உயர் அதிகாரிகளை பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து அகற்றுமாறு பிகேஆர் பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குச் சவால் விடுத்துள்ளது.

அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில், சபா முதலமைச்சர் மூசா அமான், சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ், நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசான், சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட், திரங்கானு மந்திரி புசார் அகமட் சைட், நிதித் துணை அமைச்சர் அவாங் அடெ ஹுசின், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டால் ஆகியோர் அவர்கள் ஆவர்.

அந்த எட்டு தனிநபர்களையும் நீக்குவதின் மூலம் நஜிப் தமக்குத் துணையாக ‘தூய்மையான’ தலைவர்களை வைத்துள்ளார் என்பது நிரூபிக்கப்படும் என்று அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறினார்.

“வேட்பாளர்கள் வெண்மையைக் காட்டிலும் வெண்மையாக இருக்க வேண்டும். மேலே கூறப்பட்ட அனைவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் விசாரிக்கப்படுவதைப் போன்று கறை படிந்தவர்களாக இருக்கக் கூடாது,” என்றார் அவர்.

“அவர்களைக் கைவிடுவதற்கு அம்னோ தயாராக இல்லை என்றால் நஜிப் சொல்வது போல தூய்மையான, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களை நிறுத்துவதில் அம்னோ தீவிரமாக இல்லை எனப் பொருள்படும்,” என்றும் ராபிஸி குறிப்பிட்டார்.

சுயேச்சையான விசாரணை, வழக்குத் தொடுப்பது ?

அந்த எண்மரும் நீதிமன்றத்தில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படவில்லை என்பதையும் வெறுமனே விசாரிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சிலர் தூய்மையானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டிய போது ராபிஸி, “அரசியல் பொறுப்பு என்பது அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதா அல்லது அவர்கள் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதா என்பது மட்டும் சம்பந்தப்பட்டதல்ல,” என்றார்.rafizi1

“அவர்கள் வெண்மையைக் காட்டிலும் வெண்மையாக இருக்க வேண்டும் என்ற தரத்தை நாம் நிர்ணயிக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன். அவர்கள் மீது குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும் ஊடகங்களிலும் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ள ஆதாரங்களும் அவர்களுக்கு எதிராக கூறப்படும் விஷயங்களும்  நிறைய இருக்கின்றன.”

“வழக்கு தொடுக்கும் தரப்பும் புலனாய்வும் சுதந்திரமாக இல்லை என்பதால் அவர்கள் மீது குற்றம் சாட்டப்படவில்லை என்ற எண்ணம் நிலவுகின்றது,”

அவை சுதந்திரமாக செயல்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் என ராபிஸி குறிப்பிட்டார்.

 

TAGS: