நாடாளுமன்றத்தின் கீழ் இசி என்ற தேர்தல் ஆணையத்தை வைப்பதில் தேசத் துரோக அம்சம் ஏதும் சம்பந்தப்படவில்லை என ஜனநாயகம், தேர்தல் நேர்மை மீதான தேசியக் கழகத்தின் தலைவர் கே ஷான் கூறுகிறார்.
இசி-யை மேற்பார்வை செய்யும் எந்த நாடாளுமன்றத் தேர்வுக் குழுவும் அந்த ஆணையம் மீதான யாங் டி பெர்துவான் அகோங்கின் அதிகாரத்தைக் குறைக்காது என அவர் சொன்னார்.
இசி அதிகாரிகளை நியமிக்கும், விலக்கும் அதிகாரத்தை அகோங் கொண்டுள்ள வேளையில் தேர்வுக் குழு விதிமுறைகளையும் அறிவிக்கப்படும் சீர்திருத்தங்களையும் அமலாக்குவதற்குக் கொள்கை வழிகாட்டிகளை வழங்கும்,” என்றார் அவர்.
இசி-யை நாடாளுமன்றத்தின் பார்வையில் வைப்பது அகோங்கின் அதிகாரத்தைக் குறைக்கும் என்பதால் அது தேசத் துரோகம் என பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின் கூறிக் கொண்டுள்ளதற்கு ஷான் பதில் அளித்தார்.