‘வாக்காளர்கள் தொடர்பான குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று இசி பதவி விலக வேண்டும்’

1 ecவாக்காளர்கள் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படும் குறைபாடுகளுக்கும் ‘அழியா மை’ அழிந்துபோனதற்கும் பொறுப்பேற்று தேர்தல் ஆணையம் (இசி) பதவி விலகுவதே கெளரவமான, கண்ணியான செயலாக இருக்கும் என சமூக அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.

“அவர்கள் பேரரசரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதை அறிவோம். அவர்கள் இயல்பாக நீக்கப்படுவதற்குமுன் அவர்களின் மனசாட்சியின் உறுத்தலால் தாங்களே பதவிதுறக்க வேண்டும்”, என மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பு  (ஜிபிஎம்) அமைப்பின் தலைவர்  டான் இயு சின் இன்று கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்

மற்ற ஜனநாயக நாடுகளில் இப்படிப்பட்ட “வெட்கக்கேடான பொதுச் சீர்கேடுகளுடன்” தொடர்புள்ள தலைவர்கள் கெளரவமாக பதவி விலகுவார்கள். தவறுகள் செய்ததை ஒப்புக்கொள்வதற்காக அல்ல என்றாலும் நேர்ந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் வகையிலாவது அவ்வாறு செய்வார்கள் என்றாரவர்.

மே 5 ஆம் தேதி நடந்த பொதுத்தேர்தல் நாட்டில் நடந்த பொதுத்தேர்தல்களிலேயே மிகக் கடுமையான போட்டியைக்GBM Klang5 கண்டதென்பதோடு அதிகமாகச் செலவு செய்யப்பட்டதுமாகும். மக்களுக்கு அன்பளிப்புகளும் பண மழையும் பொழிந்தன.

இத்தேர்தலில் “சமூக ஊடகம்” பெரும் பங்காற்றியது. பெர்சேயின் போராட்டம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் வாழும் மலேசியர்களும்  இத்தேர்தலில் அக்கறை காட்டினர்.

இத்தேர்தலில் 84.4 விழுக்காட்டு மக்கள் வாக்களித்தனர். நடைபெற்ற தேர்தல்களில் மிக அதிகமான வாக்காளர்கள் பங்கேற்ற தேர்தல் இதுவே ஆகும்.

அதே வேளையில், மலேசிய தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையாக செயல்படக்கூடிய நிலை மற்றும் திறமை மீது மக்கள் கொண்டிருந்த அவநம்பிக்கையை இத்தேர்தல் வெளிப்படுத்தியது என்று ஜிபிஎம் இன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியது. மேலும், அந்த செய்தி அறிக்கையில் சில முக்கிய குறைபாடுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

1) அழியாமை: இந்த மை தடவப்பட்ட நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து நாள்கள் வரையில் அழியாமல் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், மை தடவிய சில நிமிடங்களுக்குள் அதனை மிகச் சுலபமாக அழித்துவிட முடிந்தது.  இம்மை முதலில் ஹலால் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பின்னர், அது “குலுக்கப்படவில்லை” என்றார்கள். அதன் பின்னர், அது போலீஸ் நிலையத்தில் வைக்கப்படிருந்ததால் தரம் குறைந்து விட்டது என்று கூறப்பட்டது. தேர்தலில் வாக்களிக்கும் போது ஏற்படும் தில்லுமுல்லுகளை முறியடிக்கும் நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அழியா மையின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. ஒருவர் வாக்களித்த பின்னர் விரலில் தடவப்பட்டிருந்த மையை இரண்டே நிமிடத்தில் அகற்றி விட்டார். இன்னொருவர் வெறும் புல்லைக் கொண்டு மையை அழித்து விட்டார் என்பதைச் சுட்டிக் காட்டிய ஜிபிஎம் இந்த அழியா மை குறித்த ஆய்வு அறிக்கை எதனையும் தேர்தல் ஆணையம் வெளியிட மறுத்து வருகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

2) முன்னதாக வாக்களிப்பதற்கான தேதி: இதற்கான தேதி ஏப்ரல் 30, 2013 ஆகும். அழியா மை 3 லிருந்து 5 நாள்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்ற நிலையில், தேர்தல் நாளுக்கு ஐந்து நாள்களுக்கு முன்னதாக வாக்களிப்பு நடத்துவது முறையல்ல.

3) அந்நிய வாக்காளர்கள்: 13 ஆவது பொதுத்தேர்தலில் அந்நியர்கள் மைகார்டு வைத்திருந்ததோடு தனிப்பட்டவர்கள் வாக்களித்தும் உள்ளனர். இதற்கான பல ஆதரங்கள் இருந்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. லெம்பா பந்தாய், தாப்பா, மேமரன் ஹைலேண்ட்ஸ் மற்றும் பூச்சோங் போன்ற தொகுதிகளில் நடந்த பல சம்பவங்களுக்கு வீடியோ ஆதாரங்கள் உண்டு. கறைபடிந்த தேர்தல் வாக்காளர் பட்டியல் குறித்து பெர்சே தேர்தல் ஆணையத்திடம் முறையீடுகள் செய்திருந்தது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

gbm_logoஜிபிஎம்மிடம் 13 ஆவது பொதுத்தேர்தல் குறித்து ஏராளமான விவகாரங்கள் இருக்கின்றன. 13 ஆவது பொதுத்தேர்தல் முடிவுகளை சட்டப்படி ரத்து செய்வதற்கு அழியா மை விவகாரம் ஒன்று மட்டுமே போதுமானதாகும்.

பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகள் கேள்விக்குரியாக இருப்பதால், 13 ஆவது பொதுத்தேர்தலின் முடிவுகளையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள பாரிசான் மற்றும் பக்கத்தான் ஆகியவற்றின் வேட்பாளர்களையும் மலேசிய செயல்கூட்டமைப்பு (ஜிபிஎம்) அங்கீகரிக்காது. ஆகவே, ஜிபிஎம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது:

1. தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாகப் பதவி துறக்க வேண்டும்.

2. தேர்தல் ஆணையம் சுயேட்சையாக செயல்பட வேண்டும் என்பதோடு நாடாளுமன்றத்திற்கு பதில் அளிக்கும் பொறுப்புடையதாக இருக்க வேண்டும்.

3. .வாக்காளர் பட்டியலைத் தூய்மைபடுத்துவதற்கு அனைத்து கட்சிகளும் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

4… ஒருவர்-ஒரு-வாக்கு” என்ற கோட்பாட்டை பிரதிநிதிக்கும் வகையில் தொகுதிகள் எல்லை நிர்ணையிக்கப்பட வேண்டும்.

5.. அனைத்து வகையிலான தேர்தல் மோசடிகளையும், தொகுதி எல்லை நிர்ணயம் உட்பட,  முறியடித்து நம்பகமான ஒரு தேர்தல் அமைவுமுறையை உருவாக்குவதற்கு மெய்ப்பிக்கப்பட்ட கைமுறை மற்றும் கணினிமுறை பயன்படுத்தப்பட வேண்டும்.

 

 

 

 

TAGS: