தேர்தல் ஆணையத்தில் (இசி) மாற்றரசுக் கட்சிக்கு ஆதரவானவர்கள் உண்டு என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்.
“எனது தொகுதியான புத்ரா ஜெயாவில், பல புதிய வாக்காளர்கள் இருந்தனர். அவர்கள் ஹுசாம் மூசாவுக்கு (பக்காத்தான் வேட்பாளர்) வாக்களிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவர்கள். கேலாங் பாத்தாவிலும் அப்படித்தான் -வேண்டுமானால் (லிம்) கிட் சியாங்கைக் கேட்டுப்பாருங்கள்”, என்றார். அது பற்றி அவர் விவரிக்கவில்லை.
தேர்தல் முறைகேடு பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது தெங்கு அட்னான் இவ்வாறு கூறினார்.
இது எப்படி டா உனக்கு தெரியும்? நீயும் உன்னை சார்ந்தவர்களும் இதை தானே எல்லா தொகுதிகளிலும் செய்தீர்கள்… இசியில் பாக்காத்தானுக்கு ஆதரவு இருக்குன்னு தெரிந்து தானே நீங்கள் இந்த தில்லு முள்ளுகல் எல்லாம் செய்தீர்கள்…யாருக்கும் எந்த சிக்கலும் வேண்டாம். பெர்சே சொல்வதை போலே மக்கள் விருப்பம் போல் புதிய தேர்தல் ஆணையம் அமையுங்கள்.பிஎன்நின் அதரவலர்களும் வேண்டாம் பாக்காதானின் ஆதரவாளர்களும் வேண்டாம் புதிய ஒரு ஆணையம் அமையுங்கள்…