ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காக 290 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வித் துணை அமைச்சர் ஆடாம் அட்லி தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி நிறுவனங்களில் (IPTA) ஆரம்பகட்ட சேர்க்கைக் கட்டணங்களைச் செலுத்துவதில் சிரமப்படும் B40 மாணவர்களுக்குத் தமது அமைச்சு பல்வேறு வகையான நிதியுதவிகளை வழங்குவதாக உயர்கல்வித் துணை அமைச்சர் ஆடாம் அட்லி தெரிவித்துள்ளார்.
கல்விக் கடன் தள்ளுபடிகள் மூலம் 168,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் இந்த ஆண்டு ரிம 1.82 பில்லியன் செலவிட்டுள்ளதாக உயர்கல்வித் துணை அமைச்சர் ஆடாம் அட்லி தெரிவித்துள்ளார்.
தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் (PTPTN) ‘அனக் இகாசிஹ்’ கல்வி உதவித்தொகைத் திட்டத்திற்காக 290 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்ட கடன்களை ஏழை மற்றும் கடும் ஏழ்மையில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையாக மாற்றுகிறது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், eKasih தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட தகுதியுள்ள மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்படும் PTPTN கடன் சலுகைகளை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதும், அந்தக் கடன்கள் தானாகவே கல்வி உதவித்தொகையாக மாற்றப்படும்.
“இதன் மூலம் அவர்கள் தங்களது உயர்கல்வியை இலவசமாகத் தொடர முடியும்,” என்று ஆடாம் இன்று மக்களவையில் (Dewan Rakyat) தெரிவித்தார்.
அரசு உயர்கல்வி நிறுவனங்களில் முழுநேர டிப்ளமோ மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது என்று அவர் கூறினார்.
2027-ஆம் ஆண்டில் வருமான அடிப்படையிலான PTPTN கடனைத் திரும்பச் செலுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதன் கீழ் மாதம் ரிம 2,500-க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் பட்டதாரிகள், தங்களது வருமானம் அந்த வரம்பை எட்டும் வரை கடனைத் திரும்பச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆரம்பக்கட்ட சேர்க்கைக் கட்டணங்களைச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் B40 மாணவர்களுக்கான உதவிகள் குறித்து ஷம்சுல்கஹார் டெலி (BN-ஜெம்போல்) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஆடம், கல்விக் கட்டணம், தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான நிதியுதவிகளை அமைச்சு வழங்குவதாகக் கூறினார்.
அரசுப் பல்கலைக்கழகங்கள் அல்லது பாலிடெக்னிக் நிறுவனங்களில் சேருவதற்கு முன்பு, தகுதியுள்ள B40 மாணவர்களுக்கு வழங்கப்படும் ரிம 1,500 PTPTN முன்பணக் கடனும் (WPP) இதில் அடங்கும்.
மேலும், B40 குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர நிதியுதவியும் வாய்ப்பும் ‘பெம்பாங்கூனான் சிஸ்வா சுலுங்’ (Pembangunan Siswa Sulung) திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
























