ஒரு பிஎன் சட்டமன்ற வேட்பாளர், தேர்தலில் பிஎன்னின் வெற்றிக்காக தேர்தல் ஆணைய (இசி) அதிகாரிகளின் வாக்குச் சீட்டுகளை “வாங்கியதாக”க் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை வெளியிட்ட பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அதிகாரிகளில் ஒருவர் 13வது பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக அது பற்றி போலீசில் புகார் செய்துள்ளதாகவும் கூறினார்.
இன்று பிற்பகல் பெட்டாலிங் ஜெயா, ட்ரோபிகானாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரபிஸி இதைத் தெரிவித்தார். அங்கு, போலீஸ் புகார் அறிக்கையின் பிரதிகளும் ஊடகங்களுக்குக் கொடுக்கப்பட்டன.
அந்தப் புகார் அறிக்கை, வாக்குச் சீட்டுகள் விற்கப்பட்ட விவகாரத்தை விவரமாக விளக்கியது. வேட்பாளர் இசி அதிகாரிகளை அழைத்திருக்கிறார். அதன் பின்னர் அதிகாரிகள் அவர்களின் வாக்குச் சீட்டுகளை பிஎன் கட்சி ஆள்களிடம் கொடுத்தார்கள்.
வாக்குச் சீட்டுகள் ஒவ்வொன்றும் ரிம100-க்கு விற்கப்பட்ட மறுநாள் நான்கு அதிகாரிகள் தங்கள் வாக்குச் சீட்டுகளைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்கள்.
“ஆனால், திரும்பப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளைப் பார்த்தால் அவைமீது அடையாளம் இடப்பட்டிருந்தது”, என்று ரபிஸி கூறினார்.
போலீஸ் புகாரில் பிஎன் வேட்பாளர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவரின் கருத்தை அறியாமல் அவரது பெயரை வெளியிட மலேசியாகினி விரும்பவில்லை.
இந்த தில்லு முள்ளுதான் மலேசிய மக்களுக்கே நன்றாக தெரியுமே !
அவரின் கருத்தை அறிந்து அவரின் பெயரை வெளியிட வேண்டும் .
1. மலேசிய நாட்டில் தமிழ் பள்ளிகள் வேண்டுமா?
2. தமிழ் பள்ளிகளின் தற்போதைய நிலை என்ன, மேம்படுத்த வேண்டுமா அல்லது இதே நிலை போதுமா?
3. தமிழ் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின்
அ