வாக்களிக்க வருவோரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வாக்காளர்களின் படங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்வது பற்றி தேர்தல் ஆணையம் (இசி) அலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சாபாவில் சட்டவிரோதக் குடியேறிகள்மீது நடைபெறும் அரச ஆணைய விசாரணையில் விசாரணையை நடத்தும் அதிகாரி மனோஜ் குருப் (இடம்) இந்த ஆலோசனையை முன்வைத்தார்.
இது, ஒரே அடையாள அட்டை எண்களைக் கொண்டுள்ளவர்களை அடையாளம் காண உதவும் என்றாரவர்.
தேசிய பதிவுத்துறையின் தரவுதளத்தில் அடையாள அட்டை வைத்திருப்போர் படங்கள் இருக்கும் என்பதால் இசி வாக்காளரின் படத்தை அதில் உள்ள படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ளலாம் .
விசாரணையில் ஒரு சாட்சியாக கலந்துகொண்டிருந்த இசி-இன் யுஸ்னியாடி இஷாக், இந்த ஆலோசனையை இசி-இடம் தெரிவிக்கலாம் ஆனால், “ஒரு புகைப்படத்தை வழங்குவது வாக்காளர்களுக்கு சிரமமாக இருக்கலாம்” என்றார்.
அதற்கு மனோஜ்,“அதுதான் எல்லோரும் (கேமிராவுடன்) கைபேசி வைத்திருக்கிறார்களே”, என்று திருப்பி அடித்தார்.
அருமையான கருத்து! மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஆனால், மகாதிர் காலத்தில் இருந்து ‘ப்ராஜெக்ட் IC’ மூலம் பல தேர்தல்களில் மோசடி மூலம் ஆட்சியை திருடியவர்கள் (உண்மையில் சட்ட விரோத ஆட்சி) நல்ல, நேர்மையான, அறிவுபூர்வமான கருதுக்களை ஏற்று கொள்வார்கள் என்று எதிர் பார்ப்பது வீண் வேலை, அறிவீனம்???
அருமையான யோசனை .எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் .
கை ரேகையும்கூட வாங்கிக்கொள்ளலாம்!
எந்தத் திருட்டுத்தனமும் பண்ணாமல் தேர்தல் நடத்தினால் மேற்கூறிய எதுவுமே தேவை இல்லை. படித்தவர்கள் அதிகமுள்ள நாடு இது. ஒரு கேவலமான நிலைமைக்கு நாம் போய்க் கொண்டிருக்கிறோம்!