பிகேஆர் : இசி அதிகாரிகள் வாக்குச் சீட்டுப் பைகளைத் திறந்து பார்த்தனர்

1 ecமே 7-இல், கிளந்தான், கெதேரெயிலில் முனிசிபல் மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டுப் பைகளை உயர் நீதிமன்ற உத்தரவின்றியே தேர்தல் ஆணைய(இசி) அதிகாரிகள், திறந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இது பற்றி தம் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் போலீசில் புகார் செய்திருப்பதாக கெதேரெ பிகேஆர் இளைஞர் தலைவர் முகம்மட் சுகிர்மான் முஸ்தபா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

வாக்குச் சீட்டுப் பைகளை உயர் நீதிமன்ற ஆணை இருந்தால் மட்டுமே திறக்க முடியும். ஆனால், இசி அதிகாரிகள்  தங்கள் மேலதிகாரிகள் உத்தரவின்படி நடப்பதாகக் கூறிக்கொண்டு போலீஸ் முன்னிலையிலேயே திறந்து பார்த்தார்கள் என சுகிர்மான் கூறினார்.

வாக்குச் சீட்டுப் பைகளில் இருந்த பாதுகாப்பு முத்திரைகளை வெட்டி எறிந்து பைகளைத் திறந்தாலும் அதிகாரிகள் பைகளிலிருந்து எதையும் வெளியில் எடுக்கவில்லை.

புகைப்படங்கள் சாட்சியங்களாக உள்ளன

1 ec2“அவர்கள் பைகளைத் திறந்து பார்த்தார்களே தவிர அவற்றிலிருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை”, என்று சுகிர்மான் தெரிவித்தார்.

பிகேஆர் உறுப்பினர்கள் அச்சம்பவத்தைப் படம் பிடித்து வைத்துள்ளனர் எனக் கூறிய சுகிர்மான் இப்போது இசி-இன் விளக்கத்துக்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

முத்திரை வைக்கப்பட்ட வாக்குச் சீட்டுப்  பைகளைத் திறக்கும் அதிகாரம் இசி அதிகாரிகளுக்கு உண்டா எனக் கேட்டு வழக்கு தொடுப்பது பற்றி கட்சி ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

1958 தேர்தல் சட்டப்படி முத்திரை வைத்து மூடப்பட்ட வாக்குச் சீட்டுப் பைகளை நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே திறக்க முடியும்.

 

TAGS: