இசி: நாங்கள் அழியாமை குறித்து அமைச்சுடன் கலந்தாய்வு செய்தோம்

inkமே 5 பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியாமையின் பாதுகாப்பு பற்றி தாம் சுகாதார  அமைச்சுடன் ஆலோசனை நடத்தியதாக இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ்  முகமட் யூசோப் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சு அத்தகைய அறிக்கை எதனையும் கொடுக்கவில்லை என அதன் அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் வியாழக் கிழமை விடுத்த அறிக்கைக்கு நேர்மாறாக அப்துல் அஜிஸின் கூற்று  அமைந்துள்ளது.

“ஆம், நாங்கள் அதனைச் செய்தோம். (பாதுகாப்பு மதிப்பீட்டுக்காக அந்த மையை அமைச்சுக்கு அனுப்பினோம்). எங்களுக்குப் பதிலும் கிடைத்தது,” என மலேசியாகினிக்கு நேற்று அனுப்பிய குறுஞ்செய்தியில் அப்துல் அஜிஸ் சொன்னார்.ink1

அந்தக் கடிதம் பொது மக்களுக்கு வெளியிடப்படுமா என வினவப்பட்ட போது அவர்,”நாங்கள்  முறையாக அமைச்சருக்குத் தெரிவிப்போம்,” என்றார்.

அந்த மையில் ஒரு விழுக்காட்டுக்கு மேல் சிலவர் நைட்டிரேட்டைக் கலக்க வேண்டாம் என சுகாதார  அமைச்சு அறிவுரை கூறியதாக சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேட்டுக்கு மே 12ல் அளித்த  பேட்டியில் அப்துல் அஜிஸ் தெரிவித்திருந்தார்.


“நாங்கள் ஆறு மில்லியன் ரிங்கிட் கொடுத்துள்ளோம். அது தரம் குறைந்த மை அல்ல. நாங்கள் ஒரு
விழுக்காட்டுக்கு மேல் சில்வர் நைட்டிரேட்டை சேர்க்க முடியவில்லை. அந்த மை நீண்ட நாட்களுக்கு
இருப்பதற்கு சில்வர் நைட்டிரேட் உதவுகிறது.”

ink2“அந்த மையுடன் ஒரு விழுக்காட்டுக்கு மேல் சில்வர் நைட்டிரேட்டை கலந்தால் அது சிறுநீரகத்தைப்  பாதிப்பதோடு புற்று நோயை ஏற்படுத்தலாம் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ள கடிதம்  எங்களுக்குக் கிடைத்தது,” என அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.

இசி கூறியது போல அந்த மை ஏழு நாட்களுக்கு தாங்காமல் அது போடப்பட்ட சிறிது நேரத்தில்  எளிதாக அழிக்க முடிந்தது என பொதுத் தேர்தலுக்கு பின்னர் பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.

முன் கூட்டியே வாக்குகளைச் செலுத்திய பலர் அந்த மையை எளிதாக அழிக்க இயலும் என புகார்  செய்ததைத் தொடர்ந்து அந்த மையைப் பயன்படுத்தும் முன்னர் மை போத்தலை குலுக்குமாறு தனது  ஊழியர்களுக்கு இசி ஆணையிட்டது.

சில்வர் நைட்டிரேட் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு புள்ளி விவரங்கள் அது புற்று நோயை ஏற்படுத்தும்  அல்லது சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பதைக் குறிப்பிடவில்லை என இரசாயன நிபுணருமான ஒரு  வாக்காளர் சொன்னார்.

இதனிடையே அந்த விவகாரம் மீது கருத்துக்களைப் பெறுவதற்காக மலேசியாகினி சுப்ரமணியத்துக்கு  முன்பு சுகாதார அமைச்சராக இருந்த லியாவ் தியோங் லாய்-உடன் தொடர்பு கொண்டது. ஆனால் இது  வரையில் எந்தப் பதிலும் இல்லை.

TAGS: