சில மணி நேரத்துக்கு மேல் தாங்காத அழியா மையை வழங்கியுள்ள இசி-யின் குளறுபடி, தேர்தல் ஆணைய (இசி) தலைவர் நன்கு திட்டமிட்ட சதியாக இருக்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று கூறியுள்ளார்.
“அந்த விவகாரம் முழுவதும் நன்கு திட்டமிடப்பட்ட வேலை என நான் எண்ணுகிறேன். அத்துடன் அதில் இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்பும் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.
அந்த விவகாரம் மீது இசி தரும் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். அந்தப் ‘பெரிய தவறுக்காக’ அஜிஸ் பதவி துறக்க வேண்டும் என்ற பிகேஆர் வேண்டுகோளை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஒரு வாரத்திற்குத் தாங்க வேண்டிய அந்த மை தங்கள் விரல்களிலிருந்து எளிதாக நீங்கி விட்டதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று முன் கூட்டியே வாக்களித்த பல போலீஸ்காரர்களும் இராணுவ வீரர்களும் புகார் செய்துள்ளனர்.
அந்த மையைத் தடவுவதற்கு முன்னர் மை போத்தலை இசி அதிகாரிகள் குலுக்கத் தவறியதால் அந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் எனப் பின்னர் இசி தெரிவித்தது.
“போத்தலைக் குலுக்கத் தவறியது தான் பிரச்னை என்றால் நாட்டின் பல்வேறு இடங்களில் அது ஏன் நிகழ்ந்தது ?” என தியான் சுவா வினவினார்.
இசி ஏற்கனவே கூறியது போல silver nitrate என்னும் பொருளால் அந்த மை தயாரிக்கப்படவில்லை என அவர் கருதுகிறார்.
“அது silver nitrate-ஆக இருந்தால் மை விரல் அணுக்களில் சேர்ந்திருக்கும். அப்போது அந்த மையை எளிதாக அகற்ற முடியாது,” என அவர் மேலும் சொன்னார்.
அழியா மை தொடர்பான பிரச்னை எழுந்ததைத் தொடர்ந்து தேர்தலை சுமூகமாக நடத்தும் இசி ஆற்றலில் பல எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் தியான் சுவா சொன்னார்.
அந்த விவகாரம் மீது நாளை காலை பிகேஆர் தலைவர்களைச் சந்தித்து விளக்கமளிக்க இசி முன் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஆனால் சேதம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. அது இப்போது எங்களை ஏன் சந்திக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை.”
“என்றாலும் அந்த விவகாரம் மீது கட்சித் தலைவர்களுடன் நான் கலந்தாய்வு செய்வேன்,” என தியான் சுவா மேலும் குறிப்பிட்டார்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்போது பொய் சொல்லும் தில்லு முள்ளு இசி ஆணையம்,PAKATAN RAKYAT வெற்றிக்கு பிறகு இசி தலைவர் அப்துல் அசிஸ் முகமட் சுங்கை புலோ சிறை கம்பியை எண்ணட்டும்!