நஜிப்: ஜோகூரை பிஎன் இழந்தால் பெரும் திட்டங்கள் காணாமல் போய்விடும்

1 najபக்காத்தான் ரக்யாட் ஜோகூரைக் கைப்பற்றினால், மாநில அரசின் ‘ஜோகூர்பாணி’யும் “பெரும் திட்டங்களும்” காணாமல் போய்விடும் என்று பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார்.

ஜோகூர் பிஎன் தலைவர்கள் வாக்காளர் ஆதரவைப் பெற அடிக்கடி பயன்படுத்தும் ‘ஜோகூர்பாணி’ என்பதன் பொருள் பற்றிய வினவியதற்கு விளக்கமளித்தபோது நஜிப் இவ்வாறு கூறினார்.

அப்துல் கனி ஒத்மான் 18-ஆண்டுக்காலம் மந்திரி புசாராக இருந்த காலத்தில் பின்பற்றிய அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கையைத்தான் அது குறிப்பிடுகிறது என நஜிப் குறிப்பிட்டார்.

1 naj1“ஜோகூர் பாணி என்பது மிதமான அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கொள்கை. இது அம்னோ பிறந்த இடம்… ஆனால், இங்கு அம்னோ எல்லா இனங்களின் நலன்களையும் பார்த்துக்கொள்கிறது….எடுத்துக்காட்டுக்கு சீனப் பள்ளிகளுக்கு நிறைய உதவி செய்யப்படுகிறது. என்ஜிஓ-கள் பலவகைகளில் உதவி பெறுகின்றன”, என்றாரவர்.

இன்று காலை பெக்கான் நெனாஸில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் நஜிப் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜோகூர் மக்கள் வாக்களிக்கச் செல்லும்போது ‘ஜோகூர் பாணியை நினைவில் வைத்திருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

“அது போனால், ஜோகூருக்காக நாம் போட்டு வைத்துள்ள பெரும் பெரும் திட்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும். அதுவே ஜோகூருக்கும் ஜோகூர் மக்களுக்கும் சோக தினமாக அமையும்”