அழியா மையை…. அழிக்க முடியும்!

inkமலேசியாவில் முதன் முறையாக ‘அழியா’ மை பயன்படுத்தப்பட்ட சில மணி நேரத்தில் அந்த மையை அகற்ற முடியும் என்ற உண்மை வெளியாகியுள்ளது.

அந்த நிலைமை, பிரஷ் ஒன்றைக் கொண்டு தடவப்படும் விரலில் அந்த மையின் கறை குறைந்தது ஆறு  நாட்களுக்கு இருக்கும் என தேர்தல் ஆணையம் (இசி) அளித்துள்ள வாக்குறுதிக்கு நேர்மாறாக  அமைந்துள்ளது.

முன் கூட்டியே வாக்களிக்கும் முறையின் கீழ் இன்று காலை வாக்களித்த வீரர் ஒருவர், தாம் அந்த மையில்  பெரும்பகுதியை சோப் கூட இல்லாமல் வெறும் தண்ணீரைக் கொண்டு அகற்றி விட்டதாக கூறியுள்ளார்.

“இன்னும் 30 விழுக்காடு மட்டுமே உள்ளது. நான் இன்னும் சோப்பைப் பயன்படுத்தவில்லை. வலுவாக இல்லாத  முத்திரை மை (stamp ink pads) போன்று அதன் தரம் இருக்கிறது.”

“நகத்தில் 100 விழுக்காடு போய் விட்டது. ஒரத்தில் அதனை அகற்றுவது சற்று சிரமமாக இருந்தது. சருமத்தில்
சோப்பைப் போட்டு தீவிரமாகக் கழுவினால் போய் விடும் என நான் நினைக்கிறேன்,” என அந்த வீரர்
குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.ink1

ஆனால் அவர் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

கைகளை சுத்தம் செய்யும் ஜெல் (gel) மூலம் அந்த மையை எப்படி முழுமையாக அகற்றி விட முடியும் என்பதை செய்து காட்டுவதற்கு தம்மை 20 பாதுகாப்புப் படை வீரர்கள் தம்மை அணுகியதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார்.

“இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் சொன்னார். பிற்பகல் மணி 2 வாக்கில் போலீசில் புகார் செய்யப்பட்டதாகவும் தியான் சுவா தெரிவித்தார்.

இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் பதவி துறக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

TAGS: