செம்பருத்தியின் ‘கொலைவெறி’ தேர்தல் காணொளிக்கு அமோக வரவேற்பு

tamil_election_song_2013_new13-வது பொதுத்தேர்தலுக்காக செம்பருத்தி இணையத்தளம் மாற்றியமைத்த ‘சேஞ் திஸ் கவர்மெண்டு கவர்மெண்டுலா’ என்ற கொலைவெறி பாணியிலான பாடல் காணொளி செம்பருத்தியில் பதிவேற்றம் கண்ட முதல் நான்கு நாட்களில் சுமார் 70,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

மக்கள் உண்மையிலேயே தேசிய முன்னணியின்மீது கொலைவெறியில்தான் இருக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது. இணைய ஊடகம் பலம்பொருந்திய ஒன்றாக மாற்றம் கண்டு வரும் வரவேற்றகத்தக்க ஒரு விடயமும் இதன்வழி காணக்கூடியதாய் இருக்கிறது. மேலும்,  இன மத பேதமின்றி பலர் இப்பாடலுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர்.

KahSing82 என்ற பெயருடையவர், தான் ஒரு சீனர் என்றும் தனக்கு அதிகமான இந்திய நண்பர்கள் இல்லாத போதிலும் அந்த கொலைவெறி பாடலில் சிவப்பு அடையாளஅட்டை குறித்து காட்டப்பட்டபோது தான் சீற்றமடைந்ததாக கூறுகிறார். நாடு சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்றும் தீண்டதகாதவர்கள் போல் நடத்தப்படுகிறோம். நாம் இந்நாட்டின் குடிமக்கள். ஆனால்,  இறுதி நேரத்தில் நாம் வாழ்ந்த வீட்டிலேயே நிராகரிக்கப்படுகின்றபோது வலிக்கிறது. இது மாற்றத்திற்கான நேரம். பாரிசான் நேசனல் மோசமானது என அவர் இப்பாடலுக்குத் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கின்றார்.

tamil_election_songஒரு சில இந்தியர்களிடையே இருக்கும் “ஓசியிலே சோறு போட்டா நான் எங்க வேணுனாலும் வருவேன்” என்ற மனப்பான்மை மாற வேண்டும். தயவுசெய்து மாறுங்கள். நாம் ஒன்றுபட்டு மஇகா,  அம்னோ, பாரிசான் நேசனலைத் தூக்கி எறிய வேண்டும். அவர்கள் காலணிகளை நக்க வேண்டாம் என இப்பாடலுக்கு தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் நவீன் விஜயர்.

Noorazimah Taharim என்பவர் தனது நண்பர்களும் இப்பாடலைப் பார்வையிடுவதற்காக தனது வலைப்பதிவில் இப்பாடலைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

Saritha Reyson என்பவர் மூளையைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்; வயிற்றைப் பயன்படுத்தி அல்ல என்கிறார்.

இப்பாடலை எழுதி இசையமைத்து கொடுத்த தோழர்களுக்கு செம்பருத்தியின் நன்றியை சமர்பணம் செய்கிறோம்.

கொலைவெறி பாணியிலான பாடலை http://www.youtube.com/watch?v=ehuGPOIsDKM  என்ற இணையத்தள முகவரியிலும்;

கும்கி படத்தின் சொய் சொய் பாணியிலான பாடலை http://www.youtube.com/watch?v=CKftn4sFziw என்ற இணையத்தள முகவரியிலும் பார்வையிடலாம்!

TAGS: